சனி, 7 ஜனவரி, 2017

கடவுள் என்றால் என்ன ?(2)


கடவுள் என்றால் என்ன ?(2)


சரி .கடவுள் என்ற அது 
ஒவ்வொரு உயிரின் உள்ளே இருக்கிறது.

சரி.உடனே உள்ளே சென்று அதை 
கண்டுவிட வேண்டியதுதானே 

கேட்பதற்கு எளிதாக இருக்கிறது.

எப்படி உள்ளே செல்வது?
அது உடலில் எங்கே இருக்கிறது ?
அது எப்படி இருக்கும்?

அதை நாம் பார்த்தால் நமக்கு என்ன கிடைக்கும்
அல்லது நமக்கு அதனால் என்ன பயன்?
என்றெல்லாம் கேள்விகள் எழுவது இயல்பு.

இன்னும் சிலர் நாம் எதற்காக  போய் 
அதை தேட வேண்டும் அல்லது 
நாட வேண்டும் என்றும் கேட்கிறார்கள். 

நமக்கும் கடவுளுக்கும் இடையில் 
எது வந்து அதை அறிய விடாமல் 
தடுக்கிறது?

ஏன்  நினைத்தவுடன் அந்த 
செயலைச் செய்ய முடியவில்லை.?

சற்று ஆழ்ந்து  சிந்தித்துப் 
பார்க்க வேண்டும். 

இவ்வுலகம்அ தோன்றிய காலம் 
முதற்கொண்டு அவ்வாறு  ஆழ்ந்து சிந்தித்து 
பல உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள் 
பல ஆழ்வார்களும், நாயன்மார்களும் மற்ற 
எண்ணற்ற சித்த மகான்களும் ரிஷிகளும். 

அவற்றில் ஏதாவது ஒன்றை ஊன்றி 
பற்றிக்கொண்டு அவ்வழி நின்றால் 
அந்த உண்மைப்பொருளை 
உணர்ந்து கொள்ளலாம்.

 (இன்னும் வரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக