இருக்கின்ற காசை எல்லாம்
இருக்கின்ற காசை எல்லாம்
இருக்கின்ற காசை எல்லாம்
இங்கேயே செலவு செய்துவிடு
ஞான தங்கமே
கையில் இருக்கின்ற காசை எல்லாம்
இங்கேயே செலவு செய்துவிடு
ஞான தங்கமே
உடலை விட்டு உயிர் நீங்கும்போது
அதில் ஒரு சல்லிக் காசு கூட
உன் கூட வாராது என்பதை
உணர்ந்துகொள் ஞானத்தங்கமே
தேவைக்கு அதிகமாய் உடலுக்கும்
குடலுக்கும் போடும் காசு
உபத்திரவத்தைத்தான் தரும் என்பதை
உணராதுபோனால் ஊசி போட்டே
கொன்னு போடுவான் மருத்துவன்
உன்னிடம் உள்ள காசை எல்லாம்
பறித்துக்கொண்டு (இருக்கின்ற)
அதிகமாக ஆசைப்பட்டால்
இளமையிலேயே மீசை நரைக்கும்
இதயம் வேகமாக துடிக்கும்
இன்பம் பறிபோய்விடும்
துன்பமே பரிசாக கிடைக்கும் (இருக்கின்ற)
இருப்பதை இல்லாதவரிடம் பகிர்ந்து கொள்
பொல்லாதவரைக் கண்டால் நில்லாது ஓடு
நல்லவரோடு நட்பு கொண்டு நல்லவை எண்ணி
நல்ல செயல்கள்; செய்து நன்றி மறவாமல்
வாழ்ந்து நன்மை அடைவாய் மனிதா (இருக்கின்ற)
ரசித்தேன் ஐயா...
பதிலளிநீக்கு