வெள்ளி, 13 ஜனவரி, 2017

போகி பண்டிகை

போகி பண்டிகை

போகி பண்டிகை 





போகி என்றால் என்ன?

போகி என்றால் போகங்களை அனுபவிப்பவன்
அதாவது எல்லாவிதமான 
சுகங்களையும் அனுபவிப்பவன்.
என்று பொருள்.

எல்லாவிதமான சுகங்களையும்
தர்மத்திர்க்குப்பட்டு  அனுபவிக்கத்தான் 
இந்த உலகில் நம்மை பிறக்க 
வைத்திருக்கிறான் இறைவன். 

எனவே அதில் தவறொன்றும் இல்லை. 
ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும் என்பதை 
நாம் நினைவில் கொள்ளாமையால்தான் வந்த வினைகள்தான் 
இத்தனை அலங்கோலத்திர்க்குக்  காரணம் 

ஒரு பழமொழி உண்டு 

ஒரு வேளை உண்பவன் யோகி 



இருவேளை உண்பவன் போகி 


மூன்று வேளைஉண்பவன் ரோகி 



நாம் வசிக்கும்  இந்த உடல் வெறும் 
பௌதிக  உடல் மட்டுமல்ல 
இதனுள் ஏராளமான விஷயங்கள் உள்ளன.
அவைகளை நம்மால் அறியமுடியாது. '

ஏனென்றால் இந்த உடலில் குடலை
நிரப்புவதைத்தான் நாம் பிரதான வேலையாக 
தற்காலத்தில் நினைத்துகொண்டு. 
எப்போது பார்த்தாலும் உணவுகளை பற்றியே 
சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

எந்த ஊடகத்தைப் பார்த்தாலும். 
இந்த பிரச்சினை பற்றியே பேசிக் கொண்டிருக்கிரார்கள், 
எழுதி கொண்டிருக்கிறார்கள்,

இதற்கெனவே படித்து பட்டம் பெற்று 
கட்டணம் வசூலித்துக் கொண்டு 
பலர் ஏதாவது புளுகிக்கொண்டு 
காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

எத்தனை, வகைகள், எத்தனை உணவு முறைகள், 
உடலைப் பெருக்க ,உடலை இளைக்க,
உடல் நோயுற்றால் அதற்கு ஒரு உணவு முறை,
என நாவிற்கு அடிமையாகி நாய் படாத பாடு படுகிறோம்.

உணவைத் தியாகம் செய்து கல்வி கற்கிறோம். 
காசு சேர்க்கிறோம். 

முடிவில் உடல்நலம் மன நலம் கெட்டுப்போய்
எந்த உணவையும் உண்ணமுடியாமல் நீரிழிவு,ரத்த கொதிப்பு நோயினாலும், கவலைகளினாலும் இன்று உலகில் 90 விழுக்காடுகள் 
மக்கள் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

மருத்துவ மனையில் நுழைந்தால் பல லட்சம் காலி. 
நாம் வாழும் வாழ்க்கையின் அவலட்சணம் 
இவ்வளவுதான் இன்று. 

திருவள்ளுவர். ஒரு தடவை உண்ட உணவு 
நன்றாக செரிமானமான பிறகு  பசி எடுத்து 
உணவு உண்டால் நோய்கள் 
நம்மை அணுகாது என்கிறார். 

ஆனால் அவர் சொல்லை 
யார் கேட்கிறார்கள். ?

எப்போதும் ஏதாவது ஒன்றை 
தின்று கொண்டிருப்பதுதான் 
நன்று என்று என்பதுதான் 
இன்றைய உருப்படாத கலாசாரம். 

கண்டதை நம்மை தின்ன சொலும் நாவு 
விரைவில் நம்மை எமனுக்கு கொடுக்கும் காவு 
அதை அறியாமல் போனால் விரைந்து வரும் சாவு. 

தரமற்ற நஞ்சு உணவுகள். எங்கு பார்த்தாலும் மருத்துவ மனைகள்,
மருந்து கடைகள், பரிசோதனைக் கூடங்கள்.
மக்களில் பாதி பேர் மருத்துவ மனைகளில் 
தன் வாழ்நாளைக் கழிக்கிறார்கள். 

இந்நிலை மாற வேண்டுமென்றால் 
ஒரு வேளை உணவுதான் உண்ணவேண்டும். 
அது நல்ல உணவாக இருக்கட்டும்
சத்துள்ளதாக இருக்கட்டும்.

 நாம் யோகி ஆகாவிட்டாலும்
 ரோகி ஆகாமல் இருக்கலாம். 

இல்லையேல் சம்பாதிக்கும் காசு அனைத்தும் 
மருத்துவர்களுக்கும், மருந்து கம்பனிகளுக்கும், 
தான் போய்  சேரும்.
நாமும் நோயில் விழுந்து 
பயனற்ற வாழ்க்கையை
வாழ்ந்து விரைவில் 
ஒன்றுக்கும் உதவாமல்
போய்ச் சேர்ந்து விடுவோம். 

ஒரு ஜீவன் ஒரு தாயின் வயிற்றில் சவம்போல்தான் கிடக்கிறது உயிர் இருந்தாலும்.
ஏனென்றால் சவம்போல் நீரில் மிதக்கிறது .தன்னைத் தானே, எதுவும் செய்யமுடியாது. 
அப்போது அதற்கு அதை சுமந்துகொண்டிருக்கும் தாய்தான் உலகம் .அவள் எதை நினைக்கிறாளோ, அவள் எதைக் கேட்கிறாளோ , அவள் எதை செய்கிறாளோ, எதை உணகின்றாளோ ,எந்த மன நிலையில் இருக்கின்றாளோ அவைஅனைத்தும் தான் அந்தஜீவனின் வாழ்க்கையை உருவாக்குகின்றன. அவன் எண்ணங்களை ஆட்சி செய்கின்றன என்பதை யாரும் உணருவதில்லை 

அதனால்தான் ஒரு பெண் கருவுற்றவுடன் அவளுக்கு நல்லசாத்வீக உணவுகளையும், மகிழ்ச்சியான சிந்தனைகளையும் ,நல்ல  ஆரோக்கியமான சூழலையும்  அவளுக்கு அளித்தார்கள். 
நல்ல தெய்வீகமான சிந்தனைகளை வளர்க்கும்போருட்டு தெய்வ வழிபாடுகளையும், நல்ல நூல்களையும், படித்து ,கடைபிடித்தமையால் உத்தம புத்திரர்கள் பிறந்தார்கள். இந்த உலகத்தில் வலிமையோடு .புகழோடு வாழ்ந்தார்கள். உலகத்திற்கும் உபயோகமாக வாழ்ந்து அவர்களும் நன்மைபெற்றார்கள் உலகத்திற்கும் நன்மையைச் செய்தார்கள். 



தற்காலத்தில் தாயாகும் பெண்ணை பல குடும்பங்களில் ஒரு எதிரியாகத்தான் அனைவரும் பார்க்கிறார்கள். 



அவளை பலவிதங்களில், காயப்படுத்துகிறார்கள். மன உளைச்சல் ஒரு புறம். உடல் அசதி ஒரு புறம். மாமியார், நாற்றமெடுக்கும் எண்ணம் கொண்ட நாத்தனார்கள் ஒருபுறம்,காம வக்கிரங்களை தூண்டும் தொலை காட்சிகள், வக்கிரமான ,தீய எண்ணங்களையும், பயங்களையும் அதிர்ச்சியையும்  குழந்தையின் ஆழ் மனதில் தங்கி அவர்கள் இவ்வுலகில் வந்தவுடன் அவர்களை ஆயுள் முழுவதும் பாதிக்கக்கூடிய வகையில் அந்த ஜீவனின் தாய் உட்பட அனைவரும் மூடத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.

அதனால்தான் இன்று எவர் மனதிலும் அமைதியில்லை. மகிழ்ச்சியில்லை.

எல்லாம் வெளி வேஷம். கூடி கும்மாளமிட்டு கலைந்துபோகும் காக்கைக் கூட்டங்கலாகிவிட்டன. 

சமீபத்தில் 16 வயது பெண் திருமணத்திற்கு முன் கருவுற்ற காரணத்தினால் தான் பெற்ற குழந்தையை கழிவறையிலிருந்து எடுத்து வெளியே வீசிவிட்டாள் .அது இறந்து போய்விட்டது. 

மேல்நாட்டு கலாசாரம் நம் நாட்டு மக்களை 
மாக்களாக மாற்றிவிட்டது. 
ஒரு ஒழுக்கம் இல்லை. ஒழுங்கும் இல்லை.
தான் பெற்ற உயிர்கள் மீது இரக்கம்  இல்லை. 
தன்னை வளர்த்து ஆதரித்த உறவுகள் 
மீதும் அன்பு  இல்லை. 

எல்லாம் காசுதான் 

அதனால்தான் சிவானந்தர் சொல்லுவார் காசா லேசா என்பார். 
அதை தொடர்ந்து சொன்னோமானால் காசாலே சா என்று வரும் 



உலகில் அதுதான் இன்று ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. 
இந்நிலை மாறவேண்டும்

இந்த போகி நன்னாளிலிருந்து  நம் மனதில் உள்ள தீய பண்புகளான பொறாமை, குறைகூறுதல், பிறரை மனத்தால்,உடலால், துன்புறுத்தும் போக்கு, சுயநலம் , விருப்பு வெறுப்பு போன்ற தீய குணங்களை த்அறிவு என்னும் தீயில் போட்டு பொசுக்குவோம். 



நச்சு வாயுக்களை வெளிவிடும், ரப்பர் டயர்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் தீயிலிட்டு கொளுத்தி நமக்கு நாமே  நோய்களை வரவழைத்துக் கொள்ளாமல் இருப்போம். 

விலங்குகள்போல் கண்ட கண்ட இடங்களில் மலஜலம் கழிப்பதையும் குப்பைகளை வீசி எறிவதையும் நிறுத்துவோம். 

புடம் போட்ட தங்கம் போல் சுத்தமாவோம். 
நம் அகம் சுத்தமானால் புறமும் தானே சுத்தமாகிவிடும். 

நல்ல மாற்றம் நிகழ இறைவன் நமக்கு அறிவு அளிப்பானாக 

படங்கள்-கூகிள் -நன்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக