சனி, 21 ஜனவரி, 2017

இசையும் நானும் (158)--தமிழா தமிழா என்று சொல்லு!


இசையும் நானும் (158)-

தமிழா தமிழா என்று சொல்லு!


இசையும் நானும் (158) Mouthorgan song-தமிழ்  song-


written and played 

by TR PATTABIRAMAN




தமிழா தமிழா என்று சொல்லு!

தமிழா தமிழா என்று சொல்லு
நெஞ்சம் நிமிர்த்தி  நீ எழுந்து நில்லு (தமிழா தமிழா)

தமிழர்  பண்பாட்டை
சிதைக்க முற்படும் வீணர்களை
ஒன்றிணைந்து விரட்டிடுவோம்
அந்த ஈனர்களை
 நம் நாட்டை  விட்டே
 துரத்திடுவோம் (தமிழா தமிழா)

பிறந்த மண்ணும் காளையும் என்றும்
தமிழனின்  அடையாளம்

Image result for jallikattu

அதை பிரிக்க நினைக்கும்
கயவர்களின் எண்ணம்
என்றும் ஈடேறாது என்று முழக்கமிடு (தமிழா தமிழா)

தமிழனின் மாண்பை பாதுகாக்க
வரலாறு காணாத உங்கள் எழுச்சி

சாதியும்  மதமும்
தடையல்ல அதற்கு 
என்று நிலை நாட்டிய
புது முயற்சி (தமிழா தமிழா)

தமிழரை பிளவுபடுத்தும்
கட்சிகள்  நமக்கு
இனி இங்கே  தேவையில்லை

கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு
கல்லை
எரியும்  குணம் கொண்டோருக்கு
இனி நம் நாட்டில் வேலையில்லை (தமிழா தமிழா)


இனியும் பலிக்கடா ஆகாதே தமிழா 
இதுபோல பிரிவின்றி தொய்வின்றி
என்றும் நாம்  இணைந்திருப்போம்

இழந்துபோன உரிமைகளைமீட்டெடுத்து
அனைவரும் இன்பமாய் வாழ்ந்திடுவோம். (தமிழா தமிழா)




1 கருத்து: