சனி, 3 ஜனவரி, 2015

தொலைகாட்சி பேட்டியில் தொலைந்து போன உள்ளங்களே !

தொலைகாட்சி பேட்டியில் 
தொலைந்து போன  உள்ளங்களே !

எல்லையில்லாமல் தொல்லை தரும்
செய்திகளையே ஒவ்வொரு கணமும்
மீண்டும் மீண்டும் காட்டி காண்பவர்
சிந்தையை மழுங்கடிக்கும்
தொலை காட்சிப் பெட்டிக்குள்
தொலைந்து போன உள்ளங்களே
சற்றே சிந்திப்பீர்.

எப்போது பார்த்தாலும் பதட்டம் என்றும்
பரபரப்பு என்றும்  மனதில் பதற்றத்தை
தோற்றுவிக்கும் அடுத்தடுத்து காட்டி
காண்பவர்கள் உள்ளத்தில் பீதியை
உண்டாக்கும் காட்சிகளை ஆண்டாண்டு
காலமாக காண்பதால் யாது பயன்?

பொய்யான செய்திகளையும், புரட்டர்களின்
பேட்டிகளையும்  புலன்களை மயக்கும்
காமக் களியாட்டங்களையும்  வெற்று
வாதங்களையுமே கேட்டு கேட்டு
பார்த்து பார்த்து என்ன பயன் கண்டீர்?

தன்னுள் இருக்கும் இறைவனை அறியாது
புத்தகத்தை படித்து புது புது அர்த்தங்களை
உண்மைக்கு மாறாக திரித்துக் கூறும்
புரட்டர்களின் பேச்சை எவ்வளவு காலம்
கேட்டுக் குழம்புவீர்?

வாழ்வில் சோதனைகளும் வேதனைகளும்
வருவது இயற்கை .இரண்டையும் அறிவின் துணைகொண்டு
அகற்றிக்கொள்வதே ஆன்றோர் காட்டிய வழி.

அனைத்தையும் ஆண்டவனின் பரிசென்று
ஏற்றுக்கொண்டு அவன் பாதங்களை நம்பி
அவனோடு கலந்து பிறப்பு இறப்பு சுழலில் இருந்து
விடுபடுவது ஆன்மீக பெரியோர்கள் காட்டிய வழி

1 கருத்து: