செவ்வாய், 27 ஜனவரி, 2015

எதற்கெடுத்தாலும் பழி போடும் கூட்டம்?

எதற்கெடுத்தாலும் பழி போடும் கூட்டம்?

ஆம் எதற்கெடுத்தாலும் அண்டை மாநிலங்கள் மீது
பழி போடும் தமிழ் நாட்டு வெற்று   வேட்டு அரசியல் வாதிகள்.

இன்று இந்த உலகில் ஒரு தனி மனிதனாகட்டும்
அல்லது ஒரு கூட்டத்தின் தலைவனாகட்டும்
தாங்கள் செய்யும் தவறுகளை உணருவதே இல்லை

மாறாக எல்லாவற்றிற்கும் பிறர் மீது
குற்றச்சாட்டுகளை சுமத்துவதே குறியாக
கலையாக, வாடிக்கையாக
கொண்டுள்ளனர்.

இயற்க்கை அளித்துள்ள என்றும் குறைவில்லா
வளங்களை வீணடித்துவிட்டு  அதன் இருப்பிடங்களை
பாழடித்து  ஐயோ ஐயோ என்று காட்டு கூச்சல் போட்டு
முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

முதலில் நீர்  என்னும்
இறைவனின்கொடையைப்  பார்ப்போம்.

75 விழுக்காடுகளுக்கு மேல் உள்ள கடல் உப்பு நீரிலிருந்து
நாம் உயிர் வாழ அமிர்தமென மாற்றி மழையாய்
தருகின்றான் இறைவன்.

முன்னாளில் அந்நீரை சேமித்து வைத்து மீண்டும்
மழை வரும் வரை பயன்படுத்த கிணறுகளையும், குட்டைஏரிகளும், 
ஏரிகளையும், குளங்களையும், நீர்த்தேக்கங்களையும். ஏற்படுத்தி
முழுமையாக ஏற்பாட்டை செய்து வைத்தனர். நம் முன்னோர்.

பெரும்பகுதியை பயன்படுத்திய பின்னர் சிறிதளவே கடலை சென்றடைந்த்தது.

இப்போது எல்லாவற்றையும் அழித்து ஒழித்துவிட்டனர்.
பெரும்பகுதி நீர் ஆங்காங்கே தேங்கி நோய்க்கிருமிகள் உண்டாகி நோய் பரப்பும் உற்பத்தி தளங்களாக இருப்பதுடன் மிகுதியான நீர் யாருக்கும்
பயன்படாமல் கடலுக்கு சென்று வீணாகிறது.

போதாக்குறைக்கு பூமித்தாய் பல்லாயிரம் ஆண்டுகளாக நமக்காக
சேமித்து வைத்திருந்த  நீரூற்றுகளையும் உறிஞ்சி காலி செய்துவிட்டனர்.
இந்த அரக்க கும்பல்கள்

இப்போது குய்யோ முறையோ என்று கூச்சல் போடுகின்றனர்.

அண்டை மாநிலங்களோடு அனுதினமும் சண்டை .அவர்கள் புத்திசாலித்தனமாக தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்வதால்
நமக்குதண்ணீர் விட தயக்கம் காட்டுகின்றனர்.

தமிழர்களோ அல்லது அவர்களை ஆளும் அரசு வர்க்கமோ மழை காலங்களில் கொட்டோ கொட்டு என்று கொட்டும் தண்ணீரை சேமித்து வைக்க
எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை.

எடுக்க போவதுமில்லை. அப்படி செய்தால் அவர்கள வெள்ள   நிவாரணம், வறட்சி நிவாரணம், என்று பல வகைகளில் கொள்ளை அடிக்க முடியாது.

இதுபோதாதென்று தமிழ்நாட்டில் ராட்சத பம்புகளை  போட்டு மிச்சம் மீதி உள்ள நிலத்தடி நீரையும் உறிஞ்சி காசாகி கொண்டிருக்கின்றன பன்னாடை நிறுவனங்கள்.

அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று இங்கிருக்கும் பல நிறுவனங்கள் பகல் கொள்ளை அடிக்கின்றன

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்முடைய விருந்துகளில், விழாக்களில் ,கூட்டங்களில்.பிளாஸ்டிக் பாட்டில்களில் 
பாக்கட்டு களில் அடைத்து விற்கப்படும் நீரில் பாதிக்குமேல் வீணடிக்கப்படுகிறது.

அவைகளை தயாரிக்க ஆகும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், மின் சக்தி ,அனைத்தும் வீண். 

போதாக்குறைக்கு சுற்று சூழல் பாதிப்பு வேறு. புற்றுநோய் பாதிப்பு வேறு, தண்ணீரை சுத்திகரிக்க அதில் கலக்கப்பட்டுள்ள பலவிதமான நசுகளால், சிறுநீரக பாதிப்பு ,ஈரல் பாதிப்பு வேறு என மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கின்றனர்.

முதலில் விருந்துகளில் ஒவ்வொரு சாப்பாட்டு இலைக்கும் பாட்டிலில் குடிநீர் வழங்கும் பழக்கம் நிறுத்தப்பட்டு குவளைகளில் வழங்கினாலே பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக்குவது மிச்சப்படும். 

அடுத்து மழை நீரை சேமிக்க தற்போது எஞ்சியுள்ள நீர்நிலைகளை ஆழப்படுத்தி, பாதுகாப்பதுடன், புதிய நீர் தேக்கங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படாதவரை எந்த முன்னேற்றமும் இந்த முக்கிய பிரச்சினை தீரப்போவதில்லை

அவர்களின் துயரங்களுக்கு முடிவும் இல்லை.
1 கருத்து: