சனி, 10 ஜனவரி, 2015

பெண்ணை இழிவு செய்யும் சமூகம் பேய்கள் வாழும் பாழுங்கிணறு

பெண்ணை இழிவு செய்யும் 

சமூகம் பேய்கள் வாழும் பாழுங்கிணறு 

 

பெண்ணை இழிவு செய்யும் சமூகம் 

பேய்கள் வாழும் பாழுங்கிணறு

ஆம்.அதுதான் உண்மை 

குழந்தையாய் இருந்தபோது 

துன்பம் ஏற்பட்டபோதும், 

பசியால் துவண்டபோதும் 

பல்வேறு உணர்வுகளை வெளிக்காட்டும் 

வழிமுறை அறியாத நிலையில்

அழுது கண்ணீர் சிந்திய போது 

குழந்தை இந்த குறிப்பிட்ட 

காரணத்திர்க்காகத்தான் 

அழுகிறது என்பதை கண்டறிந்து 

கண்ணீரைத் துடைத்து 

அன்பினால் அணைத்து துன்பம் 

 போக்கிய தாய் என்னும் 

பெண்ணினத்தின் பேரன்பையும், பாசத்தையும்,

 பரிவையும் மறந்து நன்றி கெட்டு 

நயவஞ்சகமாக அவர்களை   ஏமாற்றி 

அவர்களின் வாழ்வை குலைக்கும் 

பாதகச் செயல்களில் 

ஈடுபடும் மனிதர்கள் சமூகத்தில் 

வாழ தகுதியற்றவர்கள். 

 

அவர்களுக்கு தண்டனை அளித்தாலும் 

திருந்தாத நச்சுப்பாம்புகள். 

அவர்களுக்காக பரிந்து பேசும் 

சமூக ஆர்வலர்கள் அவர்களில் 

ஒருவராகத்தான் இருக்க முடியும். 


காமம் என்பது இயல்பாக ஏற்படும் ஒன்று. 

ஆனால் அந்த எண்ணத்தை   பிஞ்சிலேயே விதைத்து 

மக்களின்  மனதை களங்கப்படுத்தி சமூகத்தில் 

உலவவிடும்  படைப்பாளிகளும், 

அதைப் படித்து உள்ளத்தில் ரசித்து 

புறத்தே நல்லவன் போல் நடித்து 

வாய்ப்பு கிடைக்கும்போது பெண்ணினத்தை 

கடித்து குதறி இன்பம் காணும்பசும்தோல் போர்த்த 

புலிகளை இனம் கண்டுகொள்வது மிகக் கடினம் 

அந்த படைப்பாளிகளும் அவர்களுக்கு 

 துணை போகும், திரைப்பட வியாபாரிகளும்

 அதை ஆதரிக்கும் மக்களுமே 

முதலில் தண்டிக்கப்படவேண்டியவர்கள். 

ஆனால் இந்த ஊடகங்கள் பாதிக்கப்பட்டவரின் 

வாழ்வை சிக்கலாகி அவர்களை அழிவின் 

விளிம்பிற்கு அல்லவோ கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

குற்றங்களை தடுக்கவும் இயலவில்லை 

குற்றவாளிகளை தண்டிக்கவும் இயலவில்லை 

என்ன தீர்வு ?

மக்களில் மனங்களில் பெண்ணினத்தைப்  பற்றிய 

உயர்ந்த எண்ணங்கள் ஆழ விதைக்கப் ப்படவேண்டும். 

தவறான எண்ணங்கள். கோட்பாடுகள், மீண்டும் 

முளைக்க இயலாத ஆழ புதைக்கப்படவேண்டும். 

யார் செய்வது?

1 கருத்து: