செவ்வாய், 6 ஜனவரி, 2015

தமிழன் என்றொரு ஒரு இனம் உண்டு தனியே அவனுக்கொரு குணம் உண்டு

தமிழன் என்றொரு ஒரு இனம் உண்டு 
தனியே அவனுக்கொரு குணம் உண்டு 

நம் இந்திய திருநாட்டில் தமிழ்நாடு
என்று மாநிலம் உள்ளது.

அங்குள்ள மக்கள் வீரம் செறிந்த
மறவர் கூட்டம்.

இந்தி திணிப்பை, வடமொழி திணிப்பை எதிர்த்து
போராடி பொது சொத்துக்களை அழிப்பான்.
ஆனால் தன் தாய்மொழியான  தமிழ்மொழியை
முறையாக ,பிழையற கற்க மாட்டான் பேச மாட்டான்.
தமிழ் மொழி பேசுபவர்களை இழிவாக பார்ப்பான்.
அந்நிய மொழியான ஆங்கிலத்திற்கு இரத்தின
கம்பளம் விரிப்பான்.

பிறர் தன்னை மந்திரம் சொல்லி
ஏமாற்றினாலும் புரிந்துகொள்ளதெரியாது
தந்திரம் செய்து ஏமாற்றினாலும் புரிந்து கொள்ள
இயலாத உணர்சிக் கோளம் தமிழன்



அறிவு செறிந்தகூட்டம்
ஆனால் அந்த    அறிவை
பிறருக்கு அடிமையாக்கும் கூட்டம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்களை
ஆண்டுகொண்டிருந்த அரசர்கள் போடும்
சண்டைகளுக்காக தங்களை
பலியிட்டுக்கொண்டிருந்தார்கள்.

பிறகு காலம் மாறியது
காட்சிகளும் மாறியது.

அதற்க்கு பிறகு களமும்  மாறியது,
நம் நாட்டை அடிமைப்படுதியவ்ர்களுக்கும்,
அவர்களின் அடிமைகளுக்கும்,
அற்ப பலன்களுக்காக
சண்டை போட்டு மடிந்தார்கள்.

பிறகு ஏதோ  ஒரு சிலர் போராடி அந்நியர்களிடம் இருந்து
அரசியல் சுதந்திரம் வாங்கித் தந்ததை அரசியல் கட்சிகள்
தந்திரமாகபறித்துக் கொண்டுவிட்டன,

 அதை உணராமல் இன்னும் அதே கூட்டம்
அந்த சுயநல கும்பல்களுக்காக
தங்களின் உடல் பொருள், ஆவி அனைத்தையும்
அடமானம் வைத்தும், அதை மீட்கமுடியாமலும் அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன

அந்த கும்பல்கள் வெளியே பல பிரிவுகளாக  பிரிந்து,
ஆனால் அடிப்படையில் தமிழ்  நாட்டு மக்களை குழப்புவதிலும், அவர்களை சுரண்டுவதிலும், மூளைச் சலவை செய்வதிலும், அவர்களை அடக்க காவல்  துறையைப் பயன்படுத்தி அவர்களின் உரிமைகளை முடக்குவதிலும், அவ்வப்போது அவர்களுக்கு அரசின் வரிப்பணத்திலும்  அவர்களிடமிருந்தே வசூலிக்கப்பட்ட நன்கொடைகளிலும் இருந்தே பிச்சைக் காசுகளை அள்ளி வீசிவிட்டும், அவர்களை எப்போதும் சினிமா மற்றும், குடி பழக்கத்திற்கு ஆளாக்கி அவர்களை எப்போதும் சிந்திக்க முடியாத நிலையில் வைத்தே ஏமாற்றிக்கொண்டு வருகின்றன.

சென்ற தலைமுறையில் இல்லாத குடிபழக்கத்திற்கு  மக்களை ஆளாக்கி அவர்களின் வாழ்வை சீரழிக்கும் தமிழ் நாட்டை ஆளும் வர்க்கம் 20000 கோடிகளுக்கு மேல் வருவாய் ஈட்டுவதாக பெருமை பட்டுக் கொள்ளுகிறது.

(மற்றமாநிலங்களும் இதே நிலைமைதான். அங்கு இதை விட மோசமாக உள்ளதால்தான் வெளி மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கில் தமிழ்நாட்டிற்கு குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய வருகிறார்கள்.)

இன்று பல லட்சம்  மக்கள் குடிக்கு அடிமையாகி  தங்கள், உடல் நலத்தை இழந்து, உள்ளம் கெட்டு , குடும்பத்தை தொலைத்து ,நாட்டில் சுற்றுச்சூழலை கெடுத்து, சட்டம் ஒழுங்கு  பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறார்கள்

நெஞ்சில் உரம் இன்றி, நேர்மை திறன் இன்றி ,பிறரை வஞ்சனை செய்து (தமிழ்நாட்டில் நடக்கும்  மோசடிகளால் மக்கள் இழக்கும் தொகை பல லட்சம் கோடிகளைத்  தாண்டும்.ஒவ்வொரு நாளும் புதிய வகையில் திட்ட்டங்களை தீட்டும் மோசடி மன்னர்கள் நிறைந்த நாடு தமிழகம் என்றால் மிகையாது)

சிந்திக்கும் திறனின்றி யார் எதை சொன்னாலும் ஏன் என்று ஆராயாமல் அப்படியே ஆமாம் சாமி போட்டுக்கொண்டு வாழ்வை தொலைக்கும் கூட்டம் பெருகி கொண்டே போகிறது

நம்நாடு சுதந்திர நாடு என்றாலும் மக்கள் அடிமைகளாக தான் இருக்கிறார்கள்.
அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் அனைத்தும் அராஜகம்  செய்பவர்களுக்கும்,ஆளும் வர்கத்திற்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே
சாமானியனுக்கு கிடையாது. வீட்டிற்கு வேண்டிய சாமான்களை தேர்ந்தெடுத்து வாங்கும் அடிப்படை உரிமைகூட கிடையாது. ஊடகங்கள் சொல்லும் பொய்யை நம்பி அவர்கள் திணிப்பதைத்தான் அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

பொருட்களை விளவிப்பவனுக்கு பொருளின் விலை நிர்ணயம் செய்யும் உரிமை கிடையாது .அதை தரகன்தான் முடிவு செய்வான். உதாரணத்திற்கு ஒரு கிலோ ஆரஞ்சு விலை 20 ரூபாய் விற்றால்தான் கட்டுபடியாகும் என்றால் அவனுக்குகிடைக்கும் விலை 10 ரூபாய் மட்டுமே .ஆனால் மக்களின் கையில் அந்த ஆரஞ்சு 70 ரூபாய் விற்கப்படுகிறது.

இதுபோன்ற அநியாங்களை தட்டிக் கேட்க ஆளில்லை.

இதற்க்கெல்லாம் விடிவு காலம் உண்டா என்ற கேள்வி சிலர் மனதில் எழும் ஆனால் எழுந்த அடுத்த  கணம் சோப்புக் குமிழ் போல் உடைந்துதான் போகும் 'விடிவு காலம் இல்லை என்றே தோன்றுகிறது.







2 கருத்துகள்:

  1. மாறும் காலம் வரும் என்று நம்புவோம் ஐயா... வேறு வழி...?

    பதிலளிநீக்கு

  2. காலம் மாறும்
    முடிவும் மாறும்
    தொடருங்கள்


    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு