மகாத்மா காந்தியின் நினைவு நாள் (30-1-2015)
காந்தியை போல் ஒரு சாந்த
ஸ்வரூபனை இனி காண்பது
எளிதாமோ என்ற பாடலைக் கேட்பவர்
மனம் நெகிழ்ந்து போவார்கள்.
தவறுகளை ஒப்புக்கொண்டு அதை
தன் சுய சரிதையில் பதிவு செய்து
அவைகளை செய்யாமல் இறுதி வரை
முயற்சி செய்த நேர்மை வேறு எவருக்கும்
வராது.
இந்தியாவின் உயிர்நாடி கிராமங்களில்தான்
இருக்கிறது என்று ஸ்வதேசி தொழில்களை
ஊக்குவித்து அவர்களின் வாழ்வில்ஒளி
ஏற்றிய ஒரு தீபத்தை இன்றைய ஆளும் வர்க்கம்
அழித்துவிட்டது.
குடியிலிருந்து மக்களைக் காத்த
அந்த குடி மகனின் கனவுகள் தகர்க்கப் பட்டுவிட்டன
இன்று மீண்டும் மக்கள் மேனாட்டு கலாச்சாரத்திற்கும்
அவர்களின் பொருட்களுக்கும் அடிமையாகி
பரிதவிக்கின்றனர்.
பொது வாழ்வில் நேர்மைக்கும், உண்மைக்கும் சமாதி
எழுப்பிவிட்டு காந்தியின் சமாதிக்கு
இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
இடையில் ஒரு துண்டு
இடுப்பில் ஒரு துண்டு அணிந்து மக்களோடு
மக்களாய் பழகிய அந்த மனித தெய்வம் எங்கே?
பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஆடைகளை வடிவமைத்து
ஆயுதம் தாங்கிய காவலர்களை சுற்றி நிற்க வைத்துக்கொண்டு கையை ஆட்டிவிட்டு டாடா சொல்லும் தற்கால தலைவர்கள் எங்கே?
எளிமையின் சின்னமாம் காந்தி எங்கே?
ஊதாரித்தனமும், வறட்டு ஆடம்பரமும் பளிச்சிட
பவனி வரும் தற்கால அரசியல் தலைவர்கள் எங்கே?
மகாத்மா காந்தியே நீ மீண்டும் பிறவி எடுத்து வா
இந்த நாட்டு மக்களை அடிமைத்தனத்திலிருந்து
மீட்டெடுக்க வா !

அவர் ஒன்றே மகாத்மா...
பதிலளிநீக்கு