வியாழன், 5 செப்டம்பர், 2013

சுத்தம் தான் கடவுள்

சுத்தம் தான் கடவுள்


சுத்தம் தான் கடவுள்



















அசுத்தம் அவலத்தில் தான் போய் முடியும் 

இன்று தமிழ் நாட்டில் சுத்தம் இருக்கிறதா? 

பதில் இன்று தமிழ் நாட்டில் மக்கள் அசுத்தம் 
செய்யாத இடம் ஒன்று இருக்கிறதா என்று 
உருபெருக்கி கண்ணாடி கொண்டுதான் பார்க்கவேண்டும்.
அந்த அளவிற்கு மக்கள் அசுத்தம் செய்யாத இடமே இல்லை

அரசுகள் கழிப்பிடம் கட்டி கொடுத்தால் அதன் உள்ளேயும் வெளியேயும் அசுத்தம் செய்து அதை பயன் படுத்த முடியாத நிலைக்கும் கொண்டு வருவதில் நீ நான் என போட்டி போட்டு கொண்டு செயல்படுவதில் இவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படவேண்டும்

அதில் உள்ள குழாய்கள், கதவுகள், மின் மோட்டார்(இருந்தால்) ,விளக்குகளை திருடி அதை காயலான் கடைக்குபோட்டு அதில் வரும் காசை கொண்டு குவார்ட்டர் அடித்து மகிழும் ஈன பிறவிகள். 

சாலை ஓரங்களாகட்டும்,ஏரி மற்றும் குளம், கடற்கரைகளாகட்டும் ஆடுமாடுகளைபோல் கழிந்தும் சிறுநீர் கழித்தும் அசிங்கப்படுத்துவதில் இவர்களுக்கு நிகர் உலகில் யாரும் இருக்கமுடியாது
.
ஒரு கட்டிடத்தின் சுற்று சுவர் கிடைத்தால் போதும் அது பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி, மருத்துவ மனையாக இருந்தாலும் சரி, ஏன் கோயிலாக இருந்தாலும் சரி. அது அவர்களுக்கு கட்டணமில்லா கழிப்பிடம் ,சிறுநீர் கழிக்கவும் எச்சில் துப்பவும் செய்யாமல் இருக்க முடியாது.

பல ஆயிரம்மக்கள் புழங்கும், பேருந்துநிலையங்கள், ரயில் நிலையங்கள் திரையரங்குகள், கண்காட்சி திடல்கள் ஆகியவற்றில் நாம் நுழையும்போது நம்மை வரவேற்ப்பது மூக்கை துளைக்கும் துர்நாற்றம்தான்.

அங்குதான் நமக்கு ஆரோகியத்தை தரும் (?) பழக்கடைகளும், காய்கறி கடைகளும் அப்படியே அசுத்தமான தரையில் போட்டு விற்கப்படும் அதை மக்கள் மலிவு விலையில் வாங்கி சென்று வாங்கி சென்று உண்டு நோயுற்று மருத்துவர்களுக்கு தண்டம் அழுது போலி மருந்துகளை வாங்கி விழுங்கி. நோய் தானாகவே போய்விடும், அல்லது அவர்கள் போய்விடுவார்கள் மருந்தினால் அல்ல என்பது கலப்படமற்ற உண்மை.

அரசுகள் கோடிக்கணக்கான் ரூபாய்களை கொட்டி கழிவு நீர் கால்வாய்களை அமைத்து கொடுத்தால் அதில் முதலில் குப்பைகளை கொட்டி அதை மூடுவதையே தங்கள் கொள்கையாக கொண்டுள்ள தமிழ் நாட்டு மக்கள் உருப்படுவது எவ்வாறு ?

பிளாஸ்டிக் பைகளையும் நாப்கின் களையும் தெருவில் வீசி எறிவதும் சக்காடையில் வீசி எறிவதும் அவர்களுக்கு கைவந்த கலை.
அதில் அசுத்தநீர் தேங்கி கொசுக்கள் கோடிக்கணக்கில் உற்பத்தியாகி அது போடும் ஊசிகளின்  வலியை  தாங்கமுடியாமல் கொசு விரட்டி திரவம்,புகை,என நஞ்சு கலந்த ரசாயநங்களுக்காக மாதாமாதம் நூற்றுக்கணக்கில் தண்டம் அழுது நுரையீரல், ஈரல் கெட்டு நிரந்தர நோயாளிகளாகி மாண்டு போவதுதான் கலாசாரம் .இதுவே அனைவருக்கும் வாடிக்கையாகிவிட்டது. 

எல்லாவற்றிற்கும் காரணம் சுத்தம் இல்லாமை தான் காரணம்.
இவர்களுக்கு யார் புரிய வைப்பது.?

தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்கள் போல் நடிக்கும் இவர்களை யார் எழுப்புவது?
.
மழைக்காலத்தில் வரும் வெள்ளம்தான் அதன் பங்கிற்கு நாட்டை சுத்தம் செய்கிறது. அவ்வளவுதான். 

1 கருத்து: