வியாழன், 19 செப்டம்பர், 2013

வினோபா அடிகள்(பகுதி -2)

வினோபா அடிகள்(பகுதி -2)

வினோபா அடிகள்(பகுதி-2)





தந்தை என்றால்
இப்படி அல்லவோ இருக்கவேண்டும்!

ஒரு நாள் வினோபா வழக்கம்போல்
ஊர் சுற்றிவிட்டு வீடுதிரும்பினார்

அவர் தந்தை அவரை 
கண்டிக்கவில்லை. 
அடிக்கவில்லை 

விநோபாவிர்க்கும் அவருடைய
அன்னைக்கும் ஒரே வியப்பு.
அதற்க்கு பிறகும் அவர் தந்தை
அவரை அடித்தது இல்லை





வியப்பு தாங்காமல்
இந்த மாற்றத்திற்கான காரணத்தை 
தந்தையைக்   கேட்டார் தாய் 

அதற்க்கு தந்தை
பதில் சொன்னார்

வினோபாவிற்கு பதினாறு வயது ஆகிவிட்டது 
மகனுக்குப் பதினாறு வயதாகிவிட்டால் 
அவனை நண்பனைப் போல் நடத்த வேண்டும் 
என்று மனு ஸ்ம்ருதி சொல்கிறது .
இனிமேல் வினோபா என்னுடைய
 நண்பன் என்றார் தந்தை 

ஆனால் இன்று பதினாறு வயதிலிருந்தே
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிடுகிறார்கள்.
அவர்களை சிந்திக்க விடுவதில்லை.
அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்லை.
அவர்களோடோ மனம் விட்டு பேசுவதில்லை..

அவர்களின் நிறைவேறாத விருப்பங்களையும்
ஆசைகளையும் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள்.

அதனால் அவர்கள் சுயமாக
சிந்திக்கும் திறனை இழந்து போகிறார்கள்

அவர்கள் மனம் அவர்கள் மீது யார்
பாசம் காட்டுகிறார்களோ
அவர்கள் பக்கம் சாய்ந்துவிடுகிறது

அந்த நேரத்தில் அது உண்மையா
அல்லது போலியா அல்லாது நாம்
அவர்களின் சுயநலத்திற்கு பலியாடுகளாக
ஆகிறோமோ  என்று அவர்களால்
 உணர முடிவதில்லை.

அதனால்தான் இன்று சமுதாயத்தில்
இளைஞர்கள் சமூகத்தில் எண்ணற்ற கோளாறுகள்.
 மனதில் அடக்கி வைக்கப்பட்ட எண்ணங்கள்
அவர்களை தவறானபதையில் செலுத்தி
வன்முறையிலும்,
 பல சமயங்களில் ஈடுபட வைக்கின்றன.

இந்த உலகத்திற்கு வரும்
ஒவ்வொரு ஜீவனும் சென்ற பிறவியில்
 நிறைவேறாமல் நின்றுவிட்ட தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதர்க்காகதான்  பிறக்கின்றன.

அவைகளை இளம் வயதிலேயே கண்டறிந்து
அதற்க்கான  வாய்ப்புகளை ஏற்படுத்திக்.
கொடுப்பதுதான் பெற்றோர்கள் மற்றும்
ஆசிரியர்களின் தலையாய கடமையாகும்.

ஆனால் அதற்க்கு எதிர்மாறாக தான்
ஒவ்வொருவரும் செயல்படுகின்றனர்.

தன்னுடைய மகன் ஒரு மருத்துவராக  வேண்டும்
என்று ஒரு செல்வந்தன் நினைக்கிறான்.
அவன் மகனுக்கோ அந்த துறையில் விருப்பம் இல்லை.
 தந்தைக்காக மருத்துவம் படித்துவிட்டு
கலைத்துறையில் பணியாற்ற சென்றவர்கள்
இந்த உலகில் அநேகம் உண்டு.

இதைபோல்தான் பலரும் வற்புறுத்தலுக்காக
ஒரு துறையை தேர்ந்தெடுத்து
பிறகு அதை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு
தங்களுக்கு பிடித்த துறை
தேர்ந்தெடுத்து வெற்றி பெறுகின்றனர்.

தொடக்க நிலையிலே அவர்கள்
அந்த துறை தேந்தெடுக்க அனுமதிக்கப் பட்டிருந்தால்
அரசுக்கும், பெற்றோருக்கும் அவர்களும்
கால விரயம், பண விரயம்,
மன உளைச்சல்கள் இல்லாது
போயிருக்குமல்லவா?

(இன்னும் வரும்) 

6 கருத்துகள்:

  1. முற்றிலும் உண்மை.நாம் படிக்கும் காலத்தில் நீதிபோதனை வகுப்பு என ஒரு period தினம் உண்டு.தர்மம் போதிக்கப்பட்டது..இப்போ?11-வகுப்பு பாடம் புறக்கணிக்க பட்டு,12வது பாடம்...12-ல் நிறைய மார்க்..doctor,engineer...இது ஒன்றுதான் நோக்கம்...பிள்ளைகள் என்ன செய்வார்கள்...பெற்றோர்கள்,தங்கள் ஜெயிக்க பிள்ளைகளை துருப்பு சீட்டாக பயன்படுத்துவது துரதிருஷ்டம்..நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஆம் ஐயா இன்றைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மகனாகவோ, நண்பன்கவோ பார்ப்பதில்லை ஐயா. எதிர்காலத்தில் சம்பாதிக்கக் கூடிய இயந்திரமாகவே மாற்ற விரும்புகின்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயந்திரங்களிடம்
      அன்பை எதிர்பார்க்கமுடியுமா?

      அதனால்தான் தங்கள் குழந்தைகளை
      இயந்திரமாக வளர்த்த பாவத்தை
      இன்று பல பெற்றோர்கள் அனுபவிக்கிறார்கள்.

      குழந்தைகளை குழந்தைகளாக
      வளர்த்திருந்தால் அவர்களிடம் பாசம் இருக்கும்
      அன்பு இருக்கும்.

      நிலைமை இவ்வாறிருக்க
      பட்டி மன்றங்களில் பல படித்த ஆசான்கள்
      புலம்பி இளைய சமுதாயத்தின் மீது மட்டும்
      குற்றத்தை சுமத்தி கை தட்டல்கள் பெற்றால் மட்டும்
      என்ன விளையப் போகிறது?

      நீக்கு
  3. ஒவ்வொரு பெற்றோரும் அறிந்து உணர வேண்டிய கருத்துக்கள்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நண்பர்களிடம் இந்த கருத்துக்களை கொண்டு செல்லுங்கள்.நன்றி. DD

      நீக்கு