புதன், 11 செப்டம்பர், 2013

செப்டம்பர் 11 மஹாகவி பாரதியாரின் நினைவு நாள்

செப்டம்பர் 11 மஹாகவி பாரதியாரின் நினைவு நாள் 

பாரையே  தன்  கவிதைகளால்
அதிரவைத்த அந்த கவிஞனை
ஓரங் கட்டிவிட்டது இன்றைய
தமிழ் சமுதாயம்.





அவன் கருத்துகளுக்கு சமாதி
கட்டிவிட்டது இந்த நன்றி
மறந்த சமூகம்

நெஞ்சு  பொறுக்குதில்லையே
இந்த நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால்
என்று அடுக்கி கொண்டே போனான். அன்றைய
உண்மை நிலவரத்தை '

அவன் மனதில் எதிர்காலம் விரிந்தது போலும்!
அந்த காட்சிகளைக் காண மனமில்லாது
தான் பயணத்தை பாதியிலே
நிறுத்திக் கொண்டு இவ்வுலகத்தை
விட்டகன்றான் போலும்.

மாதர்தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவோம்
என்று அவன் பாடினான்

இன்றோ மாமியார்களே
மருமகள்களை கொளுத்துகின்றனர்.
மருமகள்களோ மாமியாரை. வீட்டை விட்டு
விரட்டியடிக்கின்றனர் ஒரு படி மேலே போய்

பெண் விடுதலை வேண்டுமென்றான்
ஆனால் பெண்ணுக்கு ஏது  விடுதலை ?
தறுதலைகளால் அவள் படும் துயரம்
அதிகமாக்க்கொண்டே போகும் அவலத்தை
யார் துடைப்பார்?




வெட்டிக்கதைகள் பேசி பிறருக்கு
துன்பம் இழைத்து, கிழப்பருவம் எய்தி மடியமாட்டேன்
என்று சபதம் செய்தான்
அவன் சபதப்படியே இந்த உலகில் நடைபெறும்
அக்கிரமங்களை காண சகியாது
இவ்வுலக வாழ்வை நீத்துவிட்டான் .



அவன் உடல் அழிந்தாலும்
அவன் நெஞ்சில் பூத்த  நெருப்பு அழியாது
இந்த உலக மாந்தர்கள் திருந்தும்வரை.

pic-courtesy-google images

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக