மழை வருது மழை வருது
குடை கொண்டு வா!
ஏரியின் நடுவிலே வீட்டை
கட்டினோம் அன்று
நீரின் நடுவிலே
தத்தளிக்கிறோம் இன்று
காணுமிடமெல்லாம் தண்ணீர் மயம்
குடிப்பதற்கு ஒரு சொட்டு கூட
பயன்படாது போனதென்ன
எங்கும் சாக்கடைமயம்
கழிவு நீரும் குப்பைகளும்
கலந்து நாறுது
எந்நேரமும் கொசுக்களின்
ரீங்காரம் காதில் கேட்குது
இலவசமாக ஊசி போடும் கொசுக்கள்
நம் உறக்கத்தை குலைக்கும் அசுர ஜீவன்கள்
ஊசி மூலம் டெங்கு,மலேரியா
யானைக்கால் நோய்களை நமக்களித்து
களிக்கும் கொசுக்கள்
நம்மை நோயாளிகளாக்கினம்மை
சுற்றி சுற்றி வந்து பாடி மகிழும்
கொசுக்கள் கூட்டம்.
சாவதற்கு அஞ்சுவதில்லை .
சந்தோஷமாக பாடி
திரிந்து நம்மை கொடுமைப்படுவதில்
அதற்க்கு ஈடு இணை இல்லை.
மழைக் கடவுள் கொட்டி தீர்க்கிறான்
அதை சேமித்து வைக்க பாத்திரம்தாம்
நம்மிடம் இல்லை.
மாறாக நாம் செய்த தவறுக்கு
நிர்வாகம் மீது ஆத்திரத்தை
கொட்டித் தீர்க்கிறோம்
தண்ணீர் செல்லும் வடிகால்களை
அழித்துவிட்டோம்
வடிகால்களை அடைத்துவிட்டு
யானைக்கால் நோயை உற்பத்தி செய்யும்
கொசு தொழிற்சாலைகளுக்கு அனுமதி
அழித்துவிட்டோம் மதி கெட்டு
ஆறுகள் செல்லும் பாதை எல்லாம்
வானுயரக் கட்டிடங்கள்.
ஆற்றில் செல்ல வேண்டிய மழை நீரெல்லாம்
வீட்டினுள்ளே புகுந்து விளையாடுகின்றன
மழை நின்று ஆதவன் கண்
திறந்தால்தான் இனி விடிவுகாலம்
அதுவரை அல்லல்படுவதை
தவிர வேறு ஏது வழி.
குடை கொண்டு வா!
ஏரியின் நடுவிலே வீட்டை
கட்டினோம் அன்று
நீரின் நடுவிலே
தத்தளிக்கிறோம் இன்று
காணுமிடமெல்லாம் தண்ணீர் மயம்
குடிப்பதற்கு ஒரு சொட்டு கூட
பயன்படாது போனதென்ன
எங்கும் சாக்கடைமயம்
கழிவு நீரும் குப்பைகளும்
கலந்து நாறுது
எந்நேரமும் கொசுக்களின்
ரீங்காரம் காதில் கேட்குது
இலவசமாக ஊசி போடும் கொசுக்கள்
நம் உறக்கத்தை குலைக்கும் அசுர ஜீவன்கள்
ஊசி மூலம் டெங்கு,மலேரியா
யானைக்கால் நோய்களை நமக்களித்து
களிக்கும் கொசுக்கள்
நம்மை நோயாளிகளாக்கினம்மை
சுற்றி சுற்றி வந்து பாடி மகிழும்
கொசுக்கள் கூட்டம்.
சாவதற்கு அஞ்சுவதில்லை .
சந்தோஷமாக பாடி
திரிந்து நம்மை கொடுமைப்படுவதில்
அதற்க்கு ஈடு இணை இல்லை.
மழைக் கடவுள் கொட்டி தீர்க்கிறான்
அதை சேமித்து வைக்க பாத்திரம்தாம்
நம்மிடம் இல்லை.
மாறாக நாம் செய்த தவறுக்கு
நிர்வாகம் மீது ஆத்திரத்தை
கொட்டித் தீர்க்கிறோம்
தண்ணீர் செல்லும் வடிகால்களை
அழித்துவிட்டோம்
வடிகால்களை அடைத்துவிட்டு
யானைக்கால் நோயை உற்பத்தி செய்யும்
கொசு தொழிற்சாலைகளுக்கு அனுமதி
அழித்துவிட்டோம் மதி கெட்டு
ஆறுகள் செல்லும் பாதை எல்லாம்
வானுயரக் கட்டிடங்கள்.
ஆற்றில் செல்ல வேண்டிய மழை நீரெல்லாம்
வீட்டினுள்ளே புகுந்து விளையாடுகின்றன
மழை நின்று ஆதவன் கண்
திறந்தால்தான் இனி விடிவுகாலம்
அதுவரை அல்லல்படுவதை
தவிர வேறு ஏது வழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக