தஞ்சையின் கைவண்ணம்
தஞ்சை என்றவுடன் மக்களின்
பசிப் பிணி போக்கும்
நஞ்சை வயல்கள்
நினைவுக்கு வரும்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்
காலத்தால் அழியாது தமிழனின்
கலைகளை பறை சாற்றும்
கோயில்களும் கலைகளும்
கண்முன் வரும்
தேனாய் காதில் ஒலிக்கும்
இசையும், பண்பட்ட பரத நாட்டியமும்
தஞ்சாவூர் தட்டும். விண்ணை முட்டும்
கோபுரங்களும் காவிரித்தாயின்
கருணையால் போர்த்தப்பட்ட்ட
பசுமை விரிப்புகளும்
மனதில் உலா வரும்.
தமிழுக்கு அணி சேர்த்த எண்ணற்ற
புலவர்களின் படைப்புகளும்
தெய்வங்கள் மீது பாடபெற்ற
பாடல்களும் உள்ளத்தை
பண்படுத்தும்.
மனைவியின் சொல்லுக்கும்,
தலையாட்டும் கணவன்போல்
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை
என்ற பழமொழிக்கேற்ப சாய்ந்தாலும் மீண்டும்
நேராக நிற்கும் தஞ்சாவூர் தலையாட்டு பொம்மைகள்
இருந்த நாடு அந்நாளில்
காலம் மாறிவிட்டது .
இன்றோ அது புது அவதாரம் எடுத்துவிட்டது.
ஆம் அதுதான் தலையாட்டும் மின் விளக்கு.
இருளை போக்கும் இன்பம் தரும் இனிய படைப்பு.
இந்த விளக்கை நமக்கு அளித்தவர்.துளசி கோபால். அவர் வலைத்தளம் கீழே. பயணக்கட்டுரைகளை,பளபளக்கும் படங்களுடன் சுவையாகத் தந்து அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தும் பண்பாளர். )
http://thulasidhalam.blogspot.in/2013/03/blog-post_