ஞாயிறு, 21 ஜூலை, 2013

ஒரு பள்ளி திறந்தால்?

ஒரு பள்ளி திறந்தால்? 

ஒரு பள்ளி திறந்தால் பல
சிறைச்சாலைகள் மூடப்படும்
என்று ஒருவன் சொன்னான்.

ஆனால் வெளியில் உள்ள பள்ளிகளுக்கு
இணையாக சிறைச்சாலைகளும்
அதில் அடைக்கப்படும் நபர்களின்
எண்ணிக்கையும் ஆண்டுதோறும்
கூடிகொண்டே போகின்றன

அரசியல்வாதிகள் வேண்டுமென்றே
தேவையற்ற போராட்டங்களை தொடங்கி,
அது வன்முறையில் முடிந்து,உயிர்ச்சேதங்கள்,
பொருட்சேதங்கள், மக்களிடையே
தீராத விரோதங்கள், கலவரங்களை
ஏற்படுத்துவதும்,
கலவரங்களை அடக்க காவல்துறை
துப்பாக்கி சூடு நடத்துவதும்,
அதில் உயிரிழப்புகளும்,
விசாரணை கமிஷன் வழக்குகள் என
தொடர்கதையாவதும்,
சிறைச்சாலைகளை நிரப்புவதும்,
அதனால் நீதிமன்றங்களில் வழக்க்குகளும்,
காவல் துறையினருக்கு பணி சுமையும்,
அரசுக்கு  தேவையற்ற நிதி சுமையும்
 இந்த நாட்டில் வாடிக்கையாகிவிட்டன.

திருடன் புதிது புதிதாய்
மற்ற திருடன் திருடுவதை
பார்த்து கற்றுக்கொள்கிறான்

சிறைச்சாலை செல்லும் ஒருவனுக்கு 
புதிய திருட்டுகளை கற்று
கொடுக்கும் பள்ளியாக
திகழ்கிறது.

போதாக்குறைக்கு
சிறையில் இருந்துகொண்டே
வெளியில் திருட்டுகளையும்
கொலைகளையும் செய்யும் அளவிற்கு
அவர்களின் அறிவு  வளர்ந்து இன்று நாடு முழுவதும்
விஷக் கிருமிகள் போல் வளர்ந்து
மக்களை அச்சுறுத்தும்
அளவிற்கு போய்விட்டது.

மக்கள் தொகை  பெருகிய அளவிற்கு
காவல் துறையினரின் எண்ணிக்கை
போதுமானதாக இல்லை

விஞ்ஞான அறிவில் அவர்களைவிட
சமூக விரோதிகள் மேம்பட்டு விளங்கி
அவர்களுக்கே சவால் விடுகின்றனர்.

சிறைச்சாலைகளுக்கு
சென்றவர்கள்
திருந்துவதில்லை

செய்த தவற்றுக்கு
வருந்துவதும் இல்லை

மாறாக இன்னும் திருடுவதில்,
ஏமாற்றுவதில்,கொலை செய்வதில்
புதுமையான யுக்திகளை
கற்றுக்கொண்டு செயல்படுத்த
வெளியே வருகிறார்கள்.

குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்தாலும்
அவர்கள் திருந்துவதுமில்லை.
அவர்களின் தீய செயல்களை விடுவதுமில்லை

அப்படி திருந்திவாழவும்
அவர்களை காவல்துறையினரும்,
சமூகமும் விடுவதில்லை.

அதனால் அவர்கள் சமூகத்தின்
நிரந்தரமான பகைவர்களாகிவிடுகிரர்கள்

ஒருவன் நேர்மையாக வாழ நினைத்தாலும்
இந்த சமூகத்தில் மக்களின் மனங்களில்
புரையோடிபோயிருக்கும், லஞ்சம்,
பொய், பித்தலாட்டம், சுயநலம்,வஞ்சம்
பொறாமை போன்றஎண்ணம்
கொண்ட மனிதர்கள் அவனை
அவ்வாறு நேர்மையாக வாழவிடுவதில்லை.

அவன் சமுதாயத்தில்
பிழைக்க தெரியாதவனாக
முத்திரை குத்தி  ஒதுக்கப்படுகிறான்.

பல நேரங்களில் சமூக விரோதிகளால்.
அவன் உயிரும் பறிக்கப்படுகிறது.

நல்ல பெற்றோர்கள், நல்ல ஆசிரியர்கள்,
நல்ல  தலைவர்கள், நல்ல குருமார்கள்
நாட்டில் உருவானால்தான் நல்லது நடக்கும்

அதற்க்கு இறைவன் அருள் புரிவானாக 

4 கருத்துகள்:

  1. நல்லது நடக்கும் காலம் எப்போது வரும் என்பது தான் கவலையாக உள்ளது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலைப்படாதே சகோதரா
      கருமாரி காத்திடுவாள்
      ஒழுக்கமாய் உள்ளவர்களை

      ஒழுங்கீனர்களை ஒட்டு மொத்தமாய்
      ஒன்றும் இல்லாமல் செய்திடுவாள்

      நீக்கு
  2. நல்ல பெற்றோர்கள், நல்ல ஆசிரியர்கள்,
    நல்ல தலைவர்கள், நல்ல குருமார்கள்
    நாட்டில் உருவானால்தான் நல்லது நடக்கும்

    இந்நாள்
    இந்நன்நாள்
    எந்நாளோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்நாள் வர நம்மை படைத்த
      அந்த இறைவனிடம்
      பிரார்த்தனை செய்வோம்
      தீயவர்களின் மனதில் உள்ள
      தீய சிந்தனைகளை
      இறைவன்தான்
      மாற்றவேண்டும்.

      நீக்கு