சனி, 13 ஜூலை, 2013

புத்த கயா கயா?

புத்த கயா
கயா?


அரசனாக ஆளப் பிறந்தவன்
அனைத்தையும் துறந்தான்
துன்பத்தின் வேரைக் காண

புலன்களைஅடக்கி
பல்லாண்டு தவம் செய்தான்
துன்பத்தின் ஆணி வேரைக்
கண்டான்

உலகிற்கு அறிவித்தான்
ஆசைகளே துன்பத்திற்கு
காரணம் என்று.

பரதேசிபோல் சுற்றி
திரிந்தான் மக்களிடையே
அன்பை போதித்தான்
போதிசத்துவரானான்

தன்னைப்போல் பலரை
ஆசைகளை துறக்க சொல்லி
துறவிஆக்கினான்.

காலப்போக்கில் அவனும்
எல்லோரைபோல்
கால வெள்ளத்தில்
காணாமல்போனான்.

இன்றோ துறவிகள்
இருக்கிறார்கள்
மடங்கள் இருக்கின்றன

அவன் போதித்த,புலனடக்கம்
அஹிம்சை ,அனைத்து உயிர்களிடமும்
அன்பு  போன்ற  கொள்கைகள் தான்
அந்த மதத்தினரிடம்  இல்லை.

கொலைகாரனையும் அன்பால்
திருத்தினான்  புத்தன்
அவன் காலத்தில்

இன்றோ அவர்களில் பலர்
வன்முறையில் இறங்கிவிட்டனர்
உலகில் பல இடங்களில்

சகோதரர்களிடம் அன்பு இல்லை
புரிந்துணர்வு இல்லை

அதனால்தான் என்னவோ
புத்தர்ஞானம் பெற்ற மரத்தடிக்கே
வன்முறை தீ பரவிவிட்டது.

புத்தரே உன்
திருவடிகளுக்கு வணக்கம்

உன் கொள்கைகளை உறுதியாக
பின்பற்றும் வன்முறையில் ஈடுபடாத
அன்பு உள்ளங்கள் கொண்ட
சங்கத்தினருக்கு வணக்கம்

தர்மத்தை கடைபிடிக்கும்
சங்கத்தினருக்கு வணக்கம்

pic.courtesy-googleimages
1 கருத்து: