வியாழன், 4 ஜூலை, 2013

இவர்களை யார் திருத்துவது?

இவர்களை யார் திருத்துவது? 




சார்  என் மனசு
ஒரே பாரமாக இருக்கிறது.

அது சரி உனக்கு
என்ன பிரச்சினை?

எதை சொல்றது
எதை விடுவது?

சரி ஒன்றொன்றாக சொல்லு
அதற்க்கு ஏதாவது
 தீர்வு இருக்கிறதா பார்ப்போம்.

எதை முதலில் சொல்வது
எதை அடுத்ததாக சொல்வது?

அட என்னப்பா
சரியான குழப்பவாதியாக
இருக்கிறாயே?

எதோ உன்னிடம் சொன்னால்
நீ தீர்வு சொல்வாய் என்று பார்த்தால்
என்னைபோய் குழப்பவாதி என்கிறாயே?

உன்னிடம் ஒன்றும்
வேலைக்கு ஆகாது என்று
அவர் கிளம்பதொடங்கினார்.

இப்படிதான் இன்று உலகில்
 பல கோடிபேர்கள்
தங்களை வாட்டும்
பிரச்சினைகள் என்ன என்றே
தெரியாமல் குழம்பிகொண்டிருக்கிரார்கள்.

யாராவது அவர்களுக்கு
உதவி செய்ய முன் வந்தாலும்
அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை.

இதைப் போன்ற மனிதர்களின்
மனம்எப்போதும் குழப்பத்தில்
ஆழ்ந்து இருப்பதையே விரும்புகிறது.

அதிலிருந்து அவர்கள்
விடுபடவேண்டும் என்று
எப்போதாவது நினைத்தாலும் அது
அவர்களால் முடிவதில்லை.
அந்த அளவிற்கு
மன உறுதியற்றவர்கள் அவர்கள்

தொடர்ந்து அவர்கள் இப்படியே இருந்தால்
அவர்களை சுற்றியுள்ள இந்த கொடூரமான
உலகம் அவரை ஒதுக்கி விடுவது
மட்டுமல்லாமல் அவர்களை நிரந்தர
மன நோயாளிகளாக ஆக்கிவிடும்.

இதனால் அவர்களின்  வாழ்க்கை
பாழாவது மட்டுமல்லாமல் அவர்களை
சுற்றியுள்ளவர்களும்
படும் பாடு சொல்லி முடியாது

அதனால் அவர்களின் வாழ்வும்
மற்றவர்களின்  மன அமைதியும்
கெடுகிறது.

இவர்களை யார் திருத்துவது?

pic.courtesy-google images 

2 கருத்துகள்: