ஞாயிறு, 21 ஜூலை, 2013

காளியே கண்ணை திறந்து பார்த்திடுவாய்

ஒழுக்கமும் இல்லை 

ஒழுங்கும் இல்லை 

இதுதான் இன்றைய உலகம் 

படத்தில் உள்ள காளியே 
கண்ணை திறந்து பார்த்திடுவாய்
காமுகர்களை வேட்டையாடிடுவாய்  
பெண்மணிகளாம்   கண்மணிகளை 
கண்ணின் இமையாக காத்திடுவாய் 

புலம்பல்கள்

இந்த உலகில் 
தனி மனித ஒழுக்கமும் இல்லை 
எதிலும் ஒழுங்கும் இல்லை 

எதுவும் சரியில்லை 
என்று புலம்பி என்ன பயன்? 

இன்று வயதானவர்கள் பொதுவாக புலம்புவது
இப்போது காலம் ரொம்ப கெட்டு விட்டது.என்று.

திருட்டுக்கள்,கொலைகள், கற்பழிப்புகள், 
விபச்சாரம், ஏமாற்றுதல்கள் போலிகள் ,
தீவிரவாதம் என அதிகமாகிவிட்டது என்று

ஆனால் சரித்திரத்தையும்,
 புராண  இதிகாசங்களையும் பார்த்தால்
இப்போதுநடக்கும் குற்றங்கள் மிக குறைவுதான் 
என்று தோன்றுகிறது.

உலகம் தோன்றிய நாள் முதல்கொண்டு 
இவைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அப்போது மீடியாக்க்களின் 
ஆதிக்கம் கிடையாது.

அதனால் மக்களுக்கு 
எந்த தகவல்களும் போய் சேர 
பல ஆண்டுகள் பிடித்தன.

இப்போது விஞ்ஞான வளர்ச்சியினால் 
அடுத்த நொடியே தகவல்கள் தெரிந்துவிடுகின்றன.
என்பதுதான் உண்மை.

மக்களின் அடிப்படை குணங்களான,
காமம்,பொறாமை, அராஜகம், வெறுப்பு,
பொய் பித்தலாட்டம்,
பிறர் சொத்தை அபகரித்தல்,
பெண்களை துன்புறுத்துதல்,
 கொலை செய்தல், 
திருடுதல், போன்றவை 
எல்லா காலத்திலும்
இருந்துதான் வருகின்றன

உதாரணதிற்கு பிறர் மனைவியை கடத்துதல் 
இராமாயண காலத்தில் இருந்ததற்கு சான்று 
இராவணன் ராமனின் மனைவியை கடத்தியது

மகாபாரதத்தில் அவர்கள் கணவனின் 
முன்னிலையிலேயே துரியோதனன் அரசவையில் 
திரௌபதியை மானபங்க படுத்துதல் 
(தற்போது டெல்லி சம்பவம்)

உண்மையை சரியாக விசாரியாது 
கொலைத்தண்டனை விதித்தல் (சிலப்பதிகாரம்)

ஒருநாட்டின் மீது படையெடுத்து 
கொள்ளையடித்தல்
பெண்களை களவாடி அந்தபுரத்திற்கு
கொண்டு செல்லுதல். சென்ற நூற்றாண்டு வரை 
நம் நாட்டில் எங்கு பார்த்தாலும் 
அரசர்களுக்குள் நடந்து கொண்டிருந்ததுதான்.

இப்போது அண்டை நாடுகளுடன் 
அந்த போர் நடந்து கொண்டிருக்கிறது.

போலிகள்சாமியார்கள் 
எல்லா காலத்திலும் உண்டு.
இக்காலத்தில் அவர்கள் விஷக்கிருமிகள் போல் 
பெருகிவிட்டார்கள். அவர்கள் விரிக்கும் வலையில் படித்த, பாமர மீன்கள் அனைத்தும் போய்  விட்டில்பூச்சிகள் போல் விழுந்து மாய்கின்றன. 

இப்படி அனைத்து குற்றங்களும் 
எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது.

எனவே குற்றங்கள் நடக்காமல் 
இருக்கவேண்டுமென்றால் 
போராட்டங்கள் நடத்துவதாலோ, 
சட்டங்களை இயற்றுவதாலோ 
எந்த பயனும் விளையபோவதில்லை 
எல்லாம் வீண் வேலை.

மக்களை சிறு வயதிலேயே ஒழுக்கமாக,
ஒழுக்கமான,பெற்றோர்களால், 
வளர்க்கப்படவேண்டும்

ஒழுக்கமான ஆசிரியர்களால்
நல்ல மனிதர்களாக  குழந்தைகள் 
உருவாக்கப்படவேண்டும் .

 நாட்டைவழி நடத்தும் தலைவர்கள் 
நேர்மையானவர்களாகவும் 
ஒழுக்கமுடையவர்களாகவும் பொதுநலன் 
பேணுபவர்களாக இருக்கவேண்டும் 

ஆனால் நாட்டில் தினந்தோறும் 
நடைபெற்றுவரும் சம்பவங்கள்
கவலை அளிக்கின்றன 
பெண்களை தெய்வமாக வழிபடும் 
நம் நாட்டில் பெண் குழந்தைகளுக்கும் 
பெண்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் 
எல்லை மீறி போய்க்கொண்டிருக்கின்றன 
இதை தடுப்பாரும் இல்லை 
அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பாரும் இல்லை.

அவர்களை பாதுகாக்கும் சட்டங்கள் 
பல் இருந்தாலும் பெண்களை 
போகப்பொருளாக பார்க்கும் காம கொடூரன்களின் 
மனோபாவம் மாறும் வரையில்  
அவர்களுக்கு பாதுகாப்பில்லை. 

இதை விட்டுவிட்டு விளம்பரத்திற்க்காக 
செய்யப்படும்  எதுவும் எந்த பலனையும் 
தரப்போவதில்லை.

4 கருத்துகள்:

 1. தானாக உணர்ந்து திருந்தினால் ஒழிய சொல்லப்பட்டவைகள் மாறப்போவதில்லை... திருந்துவது "போய் சேரும் வயதில்" தோன்றுவது தான் கொடுமை...!

  நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
  திருட்டை ஒழிக்க முடியாது

  இதே போலத்தான்
  பெண்களுக்கு எதிரான வன் கொடுமையும்

  தரனமான கல்வியே
  நம்மை சிறந்த முறையில்
  வழிநடத்தும் அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பள்ளியில்
   ஒழுக்கம் போதிக்கப்படவேண்டும்

   போதிக்கும் ஆசிரியர்களும் ஒழுக்கமாக இருக்கவேண்டும்

   வீட்டிலும் பெற்றோர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும்

   நாட்டில் வழி நடத்தும்
   தலைவர்களும் ஒழுக்கமாக
   இருக்க வேண்டும்.

   அப்படி நடந்தால் எதிர்காலம்
   நன்றாக இருக்கும்.

   ஆனால் மேற்கூறிய
   அனைத்தும் பகற்கனவு.

   ஒருவன் நன்றாக
   இருக்கவேண்டுமென்று நினைத்தால்
   ஒரு தனி மனிதன் ஒழுக்கத்தை
   கைக்கொள்ளலாம் (optional)

   நீக்கு