புதன், 24 ஜூலை, 2013

பொடி புராணம்

பொடி புராணம் 


பொடியின் சுவை 
காட்டமாக இருப்பினும் 
அதை பற்றிய தகவல்கள் 
சுவையாக உள்ளது.


நாசிகா சூர்ணம் என்று இந்த மூக்குப்பொடிக்கு 
மருத்துவ உலகில் அதற்க்கு நாமகரணம் 
சூட்டப்பட்டுள்ளது.

அது வைக்கப்படும் பொடி டப்பியில்தான் 
எத்தனை வகைகள் 
பல ஆயிரம் இருக்கும்
சாம்பிளுக்காக ஒன்று 





புகையிலையின் பல்வேறு
அவதாரங்களில் இந்த மூக்குப்பொடியும் ஒன்று.

தேயிலை தோட்டங்களில் பணி புரியும்
தொழிலாளர்களை அட்டைகள்
பிடித்துக்கொண்டால்
அதை இந்த மூக்குபொடியை வைத்துதான்
அகற்றுவார்கள் என்று ஒரு கதையில்
 படித்திருக்கிறேன்

பெரிய சாஸ்த்ரிகள்,கனபாடிகள்.
வேத விற்ப்பன்னர்கள், அந்நாளில் அரசர்கள், மந்திரிகள்,
(இன்றும்) பொடியை இழுக்காதவர்களே கிடையாது.

பொடி போடாதவர்களுக்கு
பொடி போடுபவர்கள் அந்த பொடியை
பொடி போடும் சாக்கில் மற்றவர்களை
கவனியாது காற்றில் பறக்கவிட்டு
அவர்கள் தும்மல் போடுவதை ரசிப்பதும் உண்டு.

சளி பிடித்தால்  அவர்களுக்கு
மூக்குப்பொடி தான் மருந்து.
அதை இழுத்து இரண்டு தும்மல்கள் போட்டால்
அவர்கள் குடலில் உள்ள சளி கூட வெளிவந்துவிடும்.

சிலர் தண்ணீர் கலக்காமல் சாராயத்தை
 ராவாக குடிப்பதுபோல் பொடியை
அப்படியே போடுபவர்கள் உண்டு.
பங்க் கடைகளில் பொடி விற்காத
கடைகளே கிடையாது அந்நாளில்

பீங்கான் ஜாடிகளில் அழகிய மரத்தால்
செய்த மூடி போட்டு வைத்திருப்பார்கள்.
நீண்ட ஆனால் சிறிய
கரண்டியினால் சிறிதாக தட்டி தட்டி எடுத்து
வாழை மட்டை அல்லது
டப்பியில் போட்டு தருவார்கள்.

அந்த பின்னணிஇசைகேட்பதற்கு
நன்றாகவே இருக்கும்.

காலப்போக்கில் அதில் பலவிதமாக
வாசனைத்திரவியங்களை கலந்து
சென்ட் போடி போட ஆரம்பித்தனர்
அதில் அவ்வளவாக  நெடி இருக்காது.

ஒருவர் வரும்போதே அவர்களின்
வரவை அறிவிப்பதுஅவர்கள்
போடும் பொடியின் வாசனையே

மருத்துவர்கள் என்னதான் கரடியாக கத்தினாலும்,
புற்றுநோய் வந்து லட்சக்கணக்கில்
உலகெங்கிலும் மக்கள் மாண்டாலும்
பொடிபோடுபவர்களை யாரும்
அந்த பழக்கத்திலிருந்து மீட்கமுடியாது.






ஒருமுறை பொடியை இழுத்துவிட்டால்
அவர்கள் பல மணி நேரம் தொடர்ந்து
வேலை செய்ய உற்சாகம் கிடைத்துவிடும்.

உணவு குடலுக்கு போய் ஜீரணம் ஆகி
ரத்தத்தில் கலந்து மூளைக்கு சக்தி போய்
 செல்வதற்குநேரம் பிடிக்கும்.
ஆனால் இந்த பொடியோ
SMS மாதிரி உடனே மூளைக்கு சென்று
செயல்பட வைக்கும் சக்தியுள்ளது.

48 ஆண்டுகளுக்கு முன் நான்
திருக்கழுக்குன்றத்தில் பணிபுரிந்தபோது
அங்கு ஒரு வீட்டில் புகையிலையை வறுத்து
மூக்குப் பொடி தயார் செய்யும் தொழிற்சாலை இருந்தது.
அப்போது கிளம்பும் நெடி பல மணி நேரத்திற்கு
காற்றில் பரவி வயிற்றை கலக்கும்.
சில மாதங்கள்தான் அங்கு பணி செய்தேன்.
தப்பித்தேன்  பிழைத்தேன் என்று ஓடி வந்து விட்டேன்.

இன்று புகையிலை அதன்கூட
பல நண்பர்களை சேர்த்துக்கொண்டு
பல அவதாரங்களை  எடுத்துக்கொண்டு
கவர்ச்சிகரமான பாக்கிங்குகளில்
வெளிவந்து மனிதர்களைகவர்ந்து
யமனுலகிர்க்கு விசா முடியும் முன்பே
அவர்களை அனுப்புவதில்
போட்டாபோட்டி போட்டுக்கொண்டு
செயல்படுகின்றன என்றால் மிகையாது.

அந்த காலத்தில் இரண்டு
ப்ராண்டுகள்தான் பிரபலம்
ஒன்று TAS மற்றொன்று
அம்பாள் ஆப்பீசர் பட்டணம் பொடி.
மாத இதழ்களில்
முழு பக்க விளம்பரம்
அந்த நாட்களில் 

இந்நாளில் அதற்காக கோடிக்கணக்கான
ரூபாய்கள் செலவில் விளம்பரங்கள்
வேறு செய்யப்படுகின்றன
மக்களை கவர்ந்திழுக்க

pic-courtesy-google images 

ஞாயிறு, 21 ஜூலை, 2013

ஒரு பள்ளி திறந்தால்?

ஒரு பள்ளி திறந்தால்? 

ஒரு பள்ளி திறந்தால் பல
சிறைச்சாலைகள் மூடப்படும்
என்று ஒருவன் சொன்னான்.

ஆனால் வெளியில் உள்ள பள்ளிகளுக்கு
இணையாக சிறைச்சாலைகளும்
அதில் அடைக்கப்படும் நபர்களின்
எண்ணிக்கையும் ஆண்டுதோறும்
கூடிகொண்டே போகின்றன

அரசியல்வாதிகள் வேண்டுமென்றே
தேவையற்ற போராட்டங்களை தொடங்கி,
அது வன்முறையில் முடிந்து,உயிர்ச்சேதங்கள்,
பொருட்சேதங்கள், மக்களிடையே
தீராத விரோதங்கள், கலவரங்களை
ஏற்படுத்துவதும்,
கலவரங்களை அடக்க காவல்துறை
துப்பாக்கி சூடு நடத்துவதும்,
அதில் உயிரிழப்புகளும்,
விசாரணை கமிஷன் வழக்குகள் என
தொடர்கதையாவதும்,
சிறைச்சாலைகளை நிரப்புவதும்,
அதனால் நீதிமன்றங்களில் வழக்க்குகளும்,
காவல் துறையினருக்கு பணி சுமையும்,
அரசுக்கு  தேவையற்ற நிதி சுமையும்
 இந்த நாட்டில் வாடிக்கையாகிவிட்டன.

திருடன் புதிது புதிதாய்
மற்ற திருடன் திருடுவதை
பார்த்து கற்றுக்கொள்கிறான்

சிறைச்சாலை செல்லும் ஒருவனுக்கு 
புதிய திருட்டுகளை கற்று
கொடுக்கும் பள்ளியாக
திகழ்கிறது.

போதாக்குறைக்கு
சிறையில் இருந்துகொண்டே
வெளியில் திருட்டுகளையும்
கொலைகளையும் செய்யும் அளவிற்கு
அவர்களின் அறிவு  வளர்ந்து இன்று நாடு முழுவதும்
விஷக் கிருமிகள் போல் வளர்ந்து
மக்களை அச்சுறுத்தும்
அளவிற்கு போய்விட்டது.

மக்கள் தொகை  பெருகிய அளவிற்கு
காவல் துறையினரின் எண்ணிக்கை
போதுமானதாக இல்லை

விஞ்ஞான அறிவில் அவர்களைவிட
சமூக விரோதிகள் மேம்பட்டு விளங்கி
அவர்களுக்கே சவால் விடுகின்றனர்.

சிறைச்சாலைகளுக்கு
சென்றவர்கள்
திருந்துவதில்லை

செய்த தவற்றுக்கு
வருந்துவதும் இல்லை

மாறாக இன்னும் திருடுவதில்,
ஏமாற்றுவதில்,கொலை செய்வதில்
புதுமையான யுக்திகளை
கற்றுக்கொண்டு செயல்படுத்த
வெளியே வருகிறார்கள்.

குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்தாலும்
அவர்கள் திருந்துவதுமில்லை.
அவர்களின் தீய செயல்களை விடுவதுமில்லை

அப்படி திருந்திவாழவும்
அவர்களை காவல்துறையினரும்,
சமூகமும் விடுவதில்லை.

அதனால் அவர்கள் சமூகத்தின்
நிரந்தரமான பகைவர்களாகிவிடுகிரர்கள்

ஒருவன் நேர்மையாக வாழ நினைத்தாலும்
இந்த சமூகத்தில் மக்களின் மனங்களில்
புரையோடிபோயிருக்கும், லஞ்சம்,
பொய், பித்தலாட்டம், சுயநலம்,வஞ்சம்
பொறாமை போன்றஎண்ணம்
கொண்ட மனிதர்கள் அவனை
அவ்வாறு நேர்மையாக வாழவிடுவதில்லை.

அவன் சமுதாயத்தில்
பிழைக்க தெரியாதவனாக
முத்திரை குத்தி  ஒதுக்கப்படுகிறான்.

பல நேரங்களில் சமூக விரோதிகளால்.
அவன் உயிரும் பறிக்கப்படுகிறது.

நல்ல பெற்றோர்கள், நல்ல ஆசிரியர்கள்,
நல்ல  தலைவர்கள், நல்ல குருமார்கள்
நாட்டில் உருவானால்தான் நல்லது நடக்கும்

அதற்க்கு இறைவன் அருள் புரிவானாக 

காளியே கண்ணை திறந்து பார்த்திடுவாய்

ஒழுக்கமும் இல்லை 

ஒழுங்கும் இல்லை 

இதுதான் இன்றைய உலகம் 





படத்தில் உள்ள காளியே 
கண்ணை திறந்து பார்த்திடுவாய்
காமுகர்களை வேட்டையாடிடுவாய்  
பெண்மணிகளாம்   கண்மணிகளை 
கண்ணின் இமையாக காத்திடுவாய் 

புலம்பல்கள்

இந்த உலகில் 
தனி மனித ஒழுக்கமும் இல்லை 
எதிலும் ஒழுங்கும் இல்லை 

எதுவும் சரியில்லை 
என்று புலம்பி என்ன பயன்? 

இன்று வயதானவர்கள் பொதுவாக புலம்புவது
இப்போது காலம் ரொம்ப கெட்டு விட்டது.என்று.

திருட்டுக்கள்,கொலைகள், கற்பழிப்புகள், 
விபச்சாரம், ஏமாற்றுதல்கள் போலிகள் ,
தீவிரவாதம் என அதிகமாகிவிட்டது என்று

ஆனால் சரித்திரத்தையும்,
 புராண  இதிகாசங்களையும் பார்த்தால்
இப்போதுநடக்கும் குற்றங்கள் மிக குறைவுதான் 
என்று தோன்றுகிறது.

உலகம் தோன்றிய நாள் முதல்கொண்டு 
இவைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அப்போது மீடியாக்க்களின் 
ஆதிக்கம் கிடையாது.

அதனால் மக்களுக்கு 
எந்த தகவல்களும் போய் சேர 
பல ஆண்டுகள் பிடித்தன.

இப்போது விஞ்ஞான வளர்ச்சியினால் 
அடுத்த நொடியே தகவல்கள் தெரிந்துவிடுகின்றன.
என்பதுதான் உண்மை.

மக்களின் அடிப்படை குணங்களான,
காமம்,பொறாமை, அராஜகம், வெறுப்பு,
பொய் பித்தலாட்டம்,
பிறர் சொத்தை அபகரித்தல்,
பெண்களை துன்புறுத்துதல்,
 கொலை செய்தல், 
திருடுதல், போன்றவை 
எல்லா காலத்திலும்
இருந்துதான் வருகின்றன

உதாரணதிற்கு பிறர் மனைவியை கடத்துதல் 
இராமாயண காலத்தில் இருந்ததற்கு சான்று 
இராவணன் ராமனின் மனைவியை கடத்தியது

மகாபாரதத்தில் அவர்கள் கணவனின் 
முன்னிலையிலேயே துரியோதனன் அரசவையில் 
திரௌபதியை மானபங்க படுத்துதல் 
(தற்போது டெல்லி சம்பவம்)

உண்மையை சரியாக விசாரியாது 
கொலைத்தண்டனை விதித்தல் (சிலப்பதிகாரம்)

ஒருநாட்டின் மீது படையெடுத்து 
கொள்ளையடித்தல்
பெண்களை களவாடி அந்தபுரத்திற்கு
கொண்டு செல்லுதல். சென்ற நூற்றாண்டு வரை 
நம் நாட்டில் எங்கு பார்த்தாலும் 
அரசர்களுக்குள் நடந்து கொண்டிருந்ததுதான்.

இப்போது அண்டை நாடுகளுடன் 
அந்த போர் நடந்து கொண்டிருக்கிறது.

போலிகள்சாமியார்கள் 
எல்லா காலத்திலும் உண்டு.
இக்காலத்தில் அவர்கள் விஷக்கிருமிகள் போல் 
பெருகிவிட்டார்கள். அவர்கள் விரிக்கும் வலையில் படித்த, பாமர மீன்கள் அனைத்தும் போய்  விட்டில்பூச்சிகள் போல் விழுந்து மாய்கின்றன. 

இப்படி அனைத்து குற்றங்களும் 
எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது.

எனவே குற்றங்கள் நடக்காமல் 
இருக்கவேண்டுமென்றால் 
போராட்டங்கள் நடத்துவதாலோ, 
சட்டங்களை இயற்றுவதாலோ 
எந்த பயனும் விளையபோவதில்லை 
எல்லாம் வீண் வேலை.

மக்களை சிறு வயதிலேயே ஒழுக்கமாக,
ஒழுக்கமான,பெற்றோர்களால், 
வளர்க்கப்படவேண்டும்

ஒழுக்கமான ஆசிரியர்களால்
நல்ல மனிதர்களாக  குழந்தைகள் 
உருவாக்கப்படவேண்டும் .

 நாட்டைவழி நடத்தும் தலைவர்கள் 
நேர்மையானவர்களாகவும் 
ஒழுக்கமுடையவர்களாகவும் பொதுநலன் 
பேணுபவர்களாக இருக்கவேண்டும் 

ஆனால் நாட்டில் தினந்தோறும் 
நடைபெற்றுவரும் சம்பவங்கள்
கவலை அளிக்கின்றன 
பெண்களை தெய்வமாக வழிபடும் 
நம் நாட்டில் பெண் குழந்தைகளுக்கும் 
பெண்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் 
எல்லை மீறி போய்க்கொண்டிருக்கின்றன 




இதை தடுப்பாரும் இல்லை 
அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பாரும் இல்லை.

அவர்களை பாதுகாக்கும் சட்டங்கள் 
பல் இருந்தாலும் பெண்களை 
போகப்பொருளாக பார்க்கும் காம கொடூரன்களின் 
மனோபாவம் மாறும் வரையில்  
அவர்களுக்கு பாதுகாப்பில்லை. 

இதை விட்டுவிட்டு விளம்பரத்திற்க்காக 
செய்யப்படும்  எதுவும் எந்த பலனையும் 
தரப்போவதில்லை.

நானும் ஒரு ஓவியன் தான் (wash drawing-color)

நானும் ஒரு ஓவியன் தான் (wash drawing-color)


சாலையில் 
தேங்குகிறது மழை நீர்.

ஒன்றிரண்டு தூறலும் 
போட்டுக்கொண்டிருக்கிறது 

ஒரு தாய் தன்குழந்தையை 
இடுப்பில் தூக்கிக்கொண்டு 
வலது கையில் குடையை 
பிடித்துக்கொண்டு 
சாலையில் செல்கிறாள் 

இடுப்பில் உள்ள குழந்தை தன் மீது 
தூறல் விழாமல் தடுக்க 
தன் பிஞ்சு கையால் தலை மேல் 
கையை வைத்துக்கொண்டு பார்க்கிறது 

இந்த காட்சியை பார்க்கும்போது
ஏன்  வண்ணப்படமாய் 
இதை வரையக் கூடாது என்று 
என் மனதில் தோன்றியது. 
வரைந்துவிட்டேன். 

அந்த படம் இதோ 



வெள்ளி, 19 ஜூலை, 2013

வாலிப வாலி

வாலிப வாலி 






ரங்கராஜன் என்பவர்
வாலி ஆனார்
இன்று உடலை
காலி செய்துவிட்டு
அந்த அரங்கனிடமே
சென்றுவிட்டார்

இராமாயண வாலியின்
உயிரை கவர்ந்து சென்றான்
காப்பிய ராமன்

இந்த வாலியின் உயிரை
கவர்ந்தவனோ அனைவரின்
உயிரையும் பறிக்கும் காலன்
என்னும் காலதேவன்.

வாழ் நாளெல்லாம்
கவிதை மழை பொழிந்தவர்
இன்று தன் ரசிகர்களை
கண்ணீர் மழை பொழிய
வைத்து விட்டு சென்றுவிட்டார்

தமிழ் உள்ளளவும்
இத்தரணியில்
வாழும் அவர் கவிதைகள்
காற்றில் தவழ்ந்து
கொண்டிருக்கும் தென்றலாய்
புயலாய்,இன்பமாய், சுகமாய்
சோகமாய் மாறி மாறி
இசைத்துக்கொண்டிருக்கும்

கேட்பவர் மனதில் இன்ப அதிர்வுகளை
உண்டாக்கிகொண்டே இருக்கும் 

சனி, 13 ஜூலை, 2013

புத்த கயா கயா?

புத்த கயா
கயா?






அரசனாக ஆளப் பிறந்தவன்
அனைத்தையும் துறந்தான்
துன்பத்தின் வேரைக் காண

புலன்களைஅடக்கி
பல்லாண்டு தவம் செய்தான்
துன்பத்தின் ஆணி வேரைக்
கண்டான்

உலகிற்கு அறிவித்தான்
ஆசைகளே துன்பத்திற்கு
காரணம் என்று.

பரதேசிபோல் சுற்றி
திரிந்தான் மக்களிடையே
அன்பை போதித்தான்
போதிசத்துவரானான்

தன்னைப்போல் பலரை
ஆசைகளை துறக்க சொல்லி
துறவிஆக்கினான்.

காலப்போக்கில் அவனும்
எல்லோரைபோல்
கால வெள்ளத்தில்
காணாமல்போனான்.

இன்றோ துறவிகள்
இருக்கிறார்கள்
மடங்கள் இருக்கின்றன

அவன் போதித்த,புலனடக்கம்
அஹிம்சை ,அனைத்து உயிர்களிடமும்
அன்பு  போன்ற  கொள்கைகள் தான்
அந்த மதத்தினரிடம்  இல்லை.

கொலைகாரனையும் அன்பால்
திருத்தினான்  புத்தன்
அவன் காலத்தில்

இன்றோ அவர்களில் பலர்
வன்முறையில் இறங்கிவிட்டனர்
உலகில் பல இடங்களில்

சகோதரர்களிடம் அன்பு இல்லை
புரிந்துணர்வு இல்லை

அதனால்தான் என்னவோ
புத்தர்ஞானம் பெற்ற மரத்தடிக்கே
வன்முறை தீ பரவிவிட்டது.

புத்தரே உன்
திருவடிகளுக்கு வணக்கம்

உன் கொள்கைகளை உறுதியாக
பின்பற்றும் வன்முறையில் ஈடுபடாத
அன்பு உள்ளங்கள் கொண்ட
சங்கத்தினருக்கு வணக்கம்

தர்மத்தை கடைபிடிக்கும்
சங்கத்தினருக்கு வணக்கம்

pic.courtesy-googleimages




வியாழன், 4 ஜூலை, 2013

இவர்களை யார் திருத்துவது?

இவர்களை யார் திருத்துவது? 




சார்  என் மனசு
ஒரே பாரமாக இருக்கிறது.

அது சரி உனக்கு
என்ன பிரச்சினை?

எதை சொல்றது
எதை விடுவது?

சரி ஒன்றொன்றாக சொல்லு
அதற்க்கு ஏதாவது
 தீர்வு இருக்கிறதா பார்ப்போம்.

எதை முதலில் சொல்வது
எதை அடுத்ததாக சொல்வது?

அட என்னப்பா
சரியான குழப்பவாதியாக
இருக்கிறாயே?

எதோ உன்னிடம் சொன்னால்
நீ தீர்வு சொல்வாய் என்று பார்த்தால்
என்னைபோய் குழப்பவாதி என்கிறாயே?

உன்னிடம் ஒன்றும்
வேலைக்கு ஆகாது என்று
அவர் கிளம்பதொடங்கினார்.

இப்படிதான் இன்று உலகில்
 பல கோடிபேர்கள்
தங்களை வாட்டும்
பிரச்சினைகள் என்ன என்றே
தெரியாமல் குழம்பிகொண்டிருக்கிரார்கள்.

யாராவது அவர்களுக்கு
உதவி செய்ய முன் வந்தாலும்
அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை.

இதைப் போன்ற மனிதர்களின்
மனம்எப்போதும் குழப்பத்தில்
ஆழ்ந்து இருப்பதையே விரும்புகிறது.

அதிலிருந்து அவர்கள்
விடுபடவேண்டும் என்று
எப்போதாவது நினைத்தாலும் அது
அவர்களால் முடிவதில்லை.
அந்த அளவிற்கு
மன உறுதியற்றவர்கள் அவர்கள்

தொடர்ந்து அவர்கள் இப்படியே இருந்தால்
அவர்களை சுற்றியுள்ள இந்த கொடூரமான
உலகம் அவரை ஒதுக்கி விடுவது
மட்டுமல்லாமல் அவர்களை நிரந்தர
மன நோயாளிகளாக ஆக்கிவிடும்.

இதனால் அவர்களின்  வாழ்க்கை
பாழாவது மட்டுமல்லாமல் அவர்களை
சுற்றியுள்ளவர்களும்
படும் பாடு சொல்லி முடியாது

அதனால் அவர்களின் வாழ்வும்
மற்றவர்களின்  மன அமைதியும்
கெடுகிறது.

இவர்களை யார் திருத்துவது?

pic.courtesy-google images