ஞாயிறு, 27 ஜனவரி, 2013

தைபூச நன்னாள்- திரு அருட்ப்ரகாச வள்ளலார் கருத்துகளை சிந்தனை செய்வோம்


அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி ஜோதி தனிபெரும் கருணை 


தைபூச நன்னாள்-
திரு அருட்ப்ரகாச வள்ளலார் கருத்துகளை 
சிந்தனை செய்வோம்


வள்ளல் யார்?
யார் எதை கேட்டாலும் இல்லை
எனாது கொடுப்பவர் வள்ளல்

வைணவர்களை கேட்டால் நம்பி
ராமானுஜரை வள்ளல் என்பார்கள்.

திருப்பாவை அருளிய ஆண்டாளை கேட்டால்
வாங்க குடம் நிறைக்கும் பசுக்களை வள்ளல் என்பாள்

கம்பனை சுவைப்போர் கம்பனை ஆதரித்த
சடையப்பனை வள்ளல் என்பார்கள்.

தமிழறிந்தவர்களை கேட்டால் செத்தும் கொடுத்தான்
சீதக்காதி வள்ளல் என்பார்கள்

மகாபாரதம் படித்தவர்கள்
கர்ணன்தான் வள்ளல் என்பார்கள்.

ஆனால் ஒருவர் வாழையடி வாழையென
வந்த திருகூட்டத்தில் நானும் ஒருவன் என்றார்

அவர் எந்த தானமும் செய்யவில்லை

ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்ய வேண்டும் என்றார்

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக என்றார்

வடிவங்களை வழிபடாதீர்
ஜோதி வடிவாய் விளங்கும் இறைவனை
ஓளி வடிவத்தில் வழிபடுவீர் என்றார்.

ஆனால் அவர் சொல்வதை யாரும் கடைபிடிக்கவில்லை
ஏனென்றால்உருவ வழிபாட்டில் இன்பம் கண்டுகொண்டிருந்த மக்களுக்கு உருவமில்லா வழிபாட்டில் ஈடுபாடு இல்லை.

வழக்கம்போல் இந்த உலக மாந்தர் கூட்டம்
அவரை கடவுளாக்கிவிட்டது. கோயில்கள்
கட்டி பூசாரியை நியமித்துவிட்டது.

ஸ்ரீ ராமலிங்கவிலாஸ் என்ற பெயரில்
அசைவ உணவு விடுதிகளை நடத்துகிறார்கள்
அவரின் மிக பெரிய படம் நடுநாயகமாக
உணவு கூடத்தில் மலர்கள் சூடம் காட்டி அலங்கரிக்க

வள்ளலார் பற்றி உரையாற்றுகிறார்கள் மேடையில்
சுவைத்து உண்கிறார்கள் அசைவ உணவுகளை கடையில்

அவர் இந்து மதத்திற்கு எதிரானவர் என்று போர்க்கொடி தூக்கி அவரை இருட்டடிப்பு செய்துவிட்டது வடிவங்களை வணங்கும் மாந்தர் 

அன்னதானம் என்ற பெயரில் சோம்பேறிகளுக்கும்
பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிகளுக்கும் உணவு வீணடிக்கப்படுகிறது

உண்மையில் பசித்திருப்பவனுக்கு உணவு போய் சேருவதில்லை. அது அவனை போய்சேர்வதற்குள் அவன் இந்த உலகத்தை விட்டே போய் சேர்ந்து விடுகிறான்.

கூட்டம் கூடி அன்னதானம் வழங்குவதை விட்டு அவரவர் இருக்கும் இடங்களில் உள்ள,வறியோர், ஆதரவற்றோர்,முதியோர் , நோயுற்றோர் ஆகிய பசித்திருப்போருக்கு அன்ன தானம் வழங்கினால் 
இறைவன் மகிழ்வான். 


ஆடம்பரத்தை பறைசாற்றும் திருமணம்,விருந்துகளில்
உணவு பொருட்களை வீணடிக்காமல் ஏழைகளுக்கு 
விருந்தளித்தால்  வள்ளலார் ஆன்மா மகிழும்

வள்ளலாரைபோல் பட்டை அடித்து வெண் உடை தரித்து வேஷம்போடுபவர்கள் இரவில் வேஷத்தை
கலைத்து பட்டை போடுகிறார்கள்

தன் வாழ் நாளில் கொல்லா விரதத்தை
போற்றி பாடிய நாட்டில் இன்று எங்கு
பார்த்தாலும் கசாப்பு கடைகள்.

கோயில்களில் உயிர்பலிகள்

வாடிய பயிரை கண்டு வருந்திய வள்ளலின் உள்ளம்
இன்று ஆறுகள் வற்றி நீரின்றி கருகும்
பயிர்களை கண்டால் என்ன செய்யும். ?

இந்த மனிதர்கள் தன்னுடைய
கொள்கைகளை பேசிக்கொண்டே
கொலைகளை செய்வதை ,
அன்பில்லாமல் இருப்பதை
ஒருமையுடன் இறைவனை வணங்காமல்
பகட்டுக்காக இறைவனை வணங்குவதுபோல்
 நடித்து தன்னையும் பிறரையும் ஏமாற்றுதல்
இவைகளையெல்லாம் எவ்வளவு காலம் சகித்துக்கொள்வது?

கடை விரித்தேன் கொள்வாரில்லை
என்று கதவை தாளிட்டுக்கொண்டு காணாமல் போனாரோ?

ஆனால் தைபூசம் என்றால் வள்ளலார்என்றும்
வடலூர் என்றும் சில மக்களுக்கு நினைவு வரும்.
வழக்கம்போல் வழிபாடுகள், கூட்டம்,
ஜோதி தரிசனம், அன்னதானம்

அப்புறம் காக்காய் கூட்டம் கலைந்துவிடும்
அவரவர் வேலையை பார்க்க.

4 கருத்துகள்:

 1. வடிவங்களை இறைவனாக தரிசிப்போரும் ஜோதியில்
  இறைவனை தரிசிப்போரும் ஒரே இறைவனைதான் வணங்குகிறார்கள்.

  வடிவங்களுக்கு காட்டப்படும் தீப ஆரத்தியில் இறைவனை மெய்மறந்து தரிசிக்கிறார்கள் பக்தர்கள்.

  வள்ளலார் அந்த தீப ஒளியை இறைவனாக தரிசிக்குமாறு ஒரு புதிய பரிணாமத்தை உலகிற்கு தந்தார்.

  ஆனால் அதை ஒருவரும் சரியாக புரிந்துகொள்ளாதது வேதனைக்குரியது

  முட்கள் மேல் போடப்பட்ட துணி போல் புற உலகில் சிக்கிக்கொண்ட நம் மனம் இறைவனை நாட வைப்பதற்கு செய்யப்பட்ட ஏற்பாடே கோயில் வழிபாடு.

  கோயிலில் நுழைந்து தீப வழிபாடு செய்யும் நேரத்தில் மனம் அனைத்தையும் மறந்து இறைவனின் நினைவாக தன்னினைவிழந்து ஒன்றிவிடும் அற்புத ஏற்பாடே நம் முன்னோர்கள் உண்டாக்கிய திருக்கோயில் வழிபாடு.

  அவரவர் மன பக்குவதிர்க்கேற்ப வழிபாடுகள் மாறும்

  எதையும் யார் மீதும் திணிக்கமுடியாது.

  வள்ளலார் திணிக்க முற்ப்பட்டதால் அவர் கருத்துக்கள் மக்களிடையே பரவவில்லை.

  பதிலளிநீக்கு
 2. எந்த மாற்றமும் இருக்கின்ற நடைமுறையை
  அனுசரித்து சிறிது சிறிதாக புகுத்தப்படவேண்டும்.

  ஏனென்றால் புதிய அணுகுமுறையை
  எந்த மனமும் உடனடியாக ஏற்றுக்கொள்ளாது.

  வள்ளலாரைபோல் ஒளி உடல்பெற்று
  யாரும் மக்கள் அறியும்வண்ணம்
  அவருக்குப்பின் ஜோதியில்
  கலந்ததாக தெரியவில்லை

  அதனால் அவர் கொள்கைகள்மீது
  பெரும்பாலான மக்களுக்கு பிடிப்பில்லை.

  வழக்கம்போல் அவருக்கு கோயில்
  கட்டி கும்பிடுவதோடு மக்கள் நிறுத்திக்கொண்டார்கள்.

  பதிலளிநீக்கு

 3. Jan 28 (5 days ago)

  to me
  Dear Sir,

  Thanks for reminding about vallalar on Thai poosam day.

  God had descended on this form for the benefit of Humanity.

  Please do not repent. Vallalar tribe will grow & growing.

  On my part I trying to do bit as much as possible -

  I am vegetarian
  I dont use leather products
  I dont use silk
  I dont drink liquor or smoke cigaratte
  I am practising to love every creature on earth but
  the most difficult is loving human beings.
  I am growing plants.

  The world is really beautiful despite many unpleasant things.

  arutperunjothi thaniperum karunai ennrum nammeethu pozhitu konde irukkum.

  Best Regards

  S. Krishna kumar


  Pattabi Raman
  Jan 29 (4 days ago)

  to Responsible
  Thank you for your comments.

  I am vegetarian
  I dont use leather products
  I dont use silk
  I dont drink liquor or smoke cigaratte
  I am practising to love every creature on earth but
  the most difficult is loving human beings.
  I am growing plants.

  Do you think nonvegetarians are not devotees of god?

  These are all due to one's attitude only.
  vegetarians see the animals as a being like humans.
  Non vegetarians see the animals as their food.
  It is the attitude that counts.
  If the attitude changes everything will change.

  Plants grows in this world as per the arrangements made by GOD automatically. Tree planting is done by the crows,birds are doing this successfully all over the globe.The elephants are the important element in creating forests. by their undigested food excreted all over the forest .The harm done by the man to the nature is incomparable to the fringe amount of good things done by a few.

  The mother earth converts everything into useful purposeful thing. we give our nasty Human waste to the earth.But the mother earth convert it into a fragrant flowers and tasty food etc.

  It is better to keep quiet/just watching the GODs leelaas.
  It will give us enlightenment.

  அதனால்தான் ஞானிகள் சும்மா இரு சொல்லற என்றார்கள். சும்மா இருந்தால்போதும் எல்லாவற்றையும் அந்த அம்மா (பராசக்தி) பார்த்துக்கொள்வாள்.சும்மா என்றால் சோம்பேறியாய் இருப்பது அல்ல

  Kindly take my reply in the right context
  It is not my intention to hurt your feelings.
  TRP

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. to me
   I agree on all the points. Non -Vegetrains whether they believe in God or not,
   they are hurting the social structure - many violence actions are basically rooted from the food.

   This world will be much more peaceful if the world turns Vegetarian.

   Best Regards


   S. Krishna Kumar
   to Responsible
   Thank you for your comments

   இந்த உலகின் ஒரு உயிரை கொன்றுதான்
   பிறிதொரு உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
   இது இறைவன் வகுத்த விதி.
   ஒன்று மற்றொன்றாக மாறிகொண்டிருக்கிறது அவ்வளவுதான்.
   இதில் எண்ணங்களை புகுத்தினால் குழப்பம்தான். .


   நம்முடைய உடல் ஒரு இயந்திரம்.
   நீங்கள் எதை போட்டாலும் அது ஜீரணிக்கிறது.
   அதற்க்கு வேண்டிய சத்துக்களை ஏற்றுக்கொண்டு.
   மற்றவைகளை வெளியே தள்ளிவிடுகிறது.

   அது சைவ உணவாக இருக்கட்டும்,
   அசைவ உணவாக இருக்கட்டும்.
   அது அவரவர் விருப்பம்.

   நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதிதான்
   நம் மனமாக உருவெடுக்கிறது.
   மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பே

   நீங்கள் எந்த எண்ணத்துடன் உணவை
   உன்கிண்றீர்களோ அது மனதில் உள்ள
   எண்ணங்களில் பிரதிபலிக்கிறது.

   அசைவ உணவில் கொல்லப்படும்
   உயிர்களின் துன்பம்உணர்வும்,
   மிருக உணர்ச்சிகளும் பதிந்திருப்பதால்.
   அது மிருக உணர்ச்சிகளை
   சற்று அதிகமாக தூண்டுகிறது.

   மற்றபடி சைவ உணவு உண்பவர்களும்
   கொலை கொள்ளை திருட்டு
   போன்ற தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

   ஒரு ஆத்திரமூட்டும் செயல் நடைபெற்றால்
   அசைவ உணவு உண்பவன்
   உடனே கட்டுபடுத்தமுடியாத
   வெறி செயலில் இறங்கிவிடுவான்.

   ஆனால் சைவ உணவு உண்பவன்
   ஒரு கணமாவது. சிந்திப்பான்

   இன்று உலகில் அசைவ உணவு
   உண்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக பெருகிவிட்டது.
   அதை யாராலேயும் கட்டுபடுத்தமுடியாது
   அதனால்தான் கட்டுபடுத்தமுடியாத அளவிற்கு
   குற்றங்களும் வன்முறைகளும் பெருகிவிட்டன. .

   இன்று தனி மனித ஒழுக்கம் இல்லை.
   ஆனால் மற்றவர்கள் ஒழுங்காக இல்லை
   என்று பிதற்றுபவர்கள்தான் அதிகம்

   கடலில் அலைகள் ஓயும் என்று நினைத்து யாரும் .
   அதல் குளிக்காமல் இருப்பதில்லை.

   உலகம் இப்படிதான் இருக்கும்.
   இந்த உலகத்தில் ஒவ்வொரு ஆத்மாவும்
   கடைத்தேறத்தான் பிறவி எடுக்கிறது

   அதை பயன்படுத்தி முன்னேற வழி தேட வேண்டுமே
   தவிர உலகத்தை திருத்துவது நம் வேலையல்ல.

   அதை இறைவன் அதற்குரிய தகுதி பெற்ற
   ஆன்மாக்களை இவ்வுலகத்திற்கு
   அனுப்பி அதை சரி செய்து கொள்வான். .

   TRP


   நீக்கு