புதன், 16 ஜனவரி, 2013

தமிழ்நாட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் தலைநகரின் அலங்கோல மஞ்சு விரட்டும்


தமிழ்நாட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் 
தலைநகரின் அலங்கோல மஞ்சு விரட்டும் 

காணும் பொங்கலன்று தமிழ்நாட்டில்
ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டென்று
நடத்துகிறார்களாம்

காளைகளை கட்டிவைத்து கண்ணுக்கு கண்ணாக
கவனித்து கொழுக்கவைத்து காணும் பொங்கலன்று
பல்லாயிரம் மக்கள் கூடுமிடத்தில்
கட்டவிழ்த்து விடுவார் ஆரவாரம் பொங்க

மிரண்டோடும் காளைதனை
விரட்டி பிடிப்பார் வீரம்மிகு காளையர்கள் பலர்
விதியிருந்தால் வெற்றிபெருவோர் பெறுவார் பரிசு
இல்லாதோர் இன்னுயிரை இழப்போர் சிலர்
காயமுற்று மருத்துவமனையை அடைவோர் பலர்.

இங்கோ மிருகங்களை துரத்துகின்றனர்
ஜல்லிக்கட்டில்

ஆனால் அந்தோ தலைநகர் டெல்லியில்
நடக்கும் மஞ்சுவிரட்டில் மிருகங்கள்
மங்கையர்களை விரட்டி சென்று குதறி
சுவைக்கின்றன .

ஜல்லிகட்டோ ஆண்டில் சிலநாள் நடக்கிறது
ஆனால் டெல்லி மஞ்சு விரட்டோ நாள்தோறும்
நடக்கிறது நாடு முழுவதும்.

ஏன் இந்த அவலம்
காரணம் என்ன ?

ஒரு கவிஞன் பாட்டெழுதுகிறான்
புலி மானை  வேட்டையாடுமிடம் காட்டில்
பெண் ஆணை வேடையாடுமிடம் கட்டில் என்று.

திரைப்படத்தில் பெண்ணின் ஆபாச அங்க
அசைவுகலில்லா  படமும்,பெண்ணை விரட்டி
கற்பழிக்கும் காட்சிகளில்லா படமும்
பாம்புபோல் சுருண்டு பெட்டிக்குள் படுத்துவிடும்.

இதை காணுவோரும் அந்த காட்சிக்கு
உறு துணையாக இருப்போரும்
அதை வெறும் நடிப்பு என்பர்.

அதுவே உலகத்தில் நடந்துவிட்டால்
அந்த செயல் செய்தவனை அனைவரும்
வெறுத்து ஒதுக்குவார்.

சிலர் காசு வாங்கி கொண்டு செய்தால் அது நடிப்பு
மக்கள் காசு கொடுத்து அதை சென்று பலமுறை பார்ப்பார்
நடித்தவருக்கு விருதுகள்.

சிலர் அதை காம வெறி பிடித்து அதை செய்தால்
அவனுக்கு மரண தண்டனை


ஒழுக்கம் கெட்ட சமுதாயம்.
இப்படிதான் இனி இருக்கும்.


பெண்ண சிவனில் பாதிஎன்று  பெண்ணை போற்றி பாடி
 கும்பிடுவார் கோயிலில்

வீட்டிலோ அவளை தன் பெண்ஜாதி என்று விரட்டிடுவார்,
வேதனை செய்வார் வேலை வாங்குவார்

கேலி செய்வார் வீதியிலே நடந்துசெல்லும்போது

இடித்து இன்பம் காண்பார் பேருந்து ரயில் பயண
கூட்ட நெரிசலின் போது. பலர்

தங்கநகை அணிந்து சாலையில் தளர் நடை போட்டால்
வண்டியில் வேகமாக வந்து தாலி சரட்டோடு
பறித்து செல்வார் கயவர்கள் பலர்

வீட்டில்நகையணிந்துதனிமையில் இருக்கும்
பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை இந்நாட்டில்.

நகையை பாதுகாக்கவிரும்பும்
மங்கையருக்கு தன்னை
பாதுகாத்துக்கொள்ள பயிற்சியில்லை.

அதை அளித்தால் போதும் குற்றம் குறைய
வாய்ப்புண்டு

சிந்தியுங்கள் ஆட்சியாளர்களே கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக