சனி, 12 ஜனவரி, 2013
உண்மையை உள்ளவாறு உணர்ந்து தெளிந்தவர்களிடம் பேதம் இல்லை.
எல்லா மதங்களும் பல பிரிவுகளும்
கணக்கற்ற உட்பிரிவுகளும் கொண்டது
ஒவ்வொரு பிரிவிலும் மக்கள் உள்ளனர்.
அவர்களிடையே பொதுவாக பேதம் இல்லை
ஆனால் அவர்கள் தங்கள் சார்ந்துள்ள பிரிவுகளின் தலைவர்களாக உள்ளவர்கள்தான் மக்களிடையே வேற்றுமையையும், வெறுப்பையும் ,விரோத மனப்பான்மையையும் விதைக்கிறார்கள்.
அதனால்தான் மக்களிடையே மோதல்கள் நிகழுகின்றன .
உயிர் பலி மற்றும் சேதங்கள் தொடர்ந்து
உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன
சில மதங்கள்/பிரிவுகளின் தலைவர்கள் தாங்கள்
கடைபிடிக்கும் கொள்கைதான் உண்மை என்றும்,
தாங்கள்வணங்கும் கடவுள்தான் சக்தி வாய்ந்தவர் என்றும்
பல நூல்களை மேற்கோள் காட்டி மக்களிடையே
பேதங்களை உருவாக்குகின்றனர்.
மற்ற கடவுள்களை பல நேரங்களில் இழிவு படுத்துவதற்கும் அவர்களின் வழிபாட்டு தலங்களை அழிப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.
இந்த போராட்டம் உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு நடந்துகொண்டு வருகிறது. தற்காலத்திலும் நடக்கிறது. எதிர்காலத்திலும் நடக்கும். அதை தடுக்க முடியாது.
ஆனால் பரம்பொருள் என்று ஒன்று இருக்கிறது என்று அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். நாத்திகர்களும் கூட. ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த பெயரை அதற்க்கு வைத்திருக்கிறார்கள்.
இறைவன் அன்பு மயமானவன் என்று அனைவரும் சொல்லுகிறார்கள். அன்பாய் இருப்பவனிடம் எதற்கு கையில் பல அபாயகரமான ஆயுதங்களைவைத்திருக்கிறான். என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள்
இறைவன் கருணையுடைவன் என்று சொல்கிறார்கள்
ஆனால் அவன் பலர் வாழ்வில் என் கருணையின்றி
துன்பங்களை பரிசாக அளிக்கிறான் என்று சிலர் கேட்கிறார்கள்
எல்லோரையும் இறைவன்தான் படைத்தான் என்றால்
அசுரர்களையும், ராஷசர்களையும், தீயவர்களையும்
அவன்தானே படைத்திருக்க முடியும்.
அவன் எதற்க்காக அவர்களையும் படைக்கவேண்டும்?
பிறகு அவர்களை அழிக்க அவன் எதற்கு
அவதாரங்கள் எடுக்க வேண்டும்?
உட்கார்ந்த இடத்திலேயே அவர்களை படைக்க தெரிந்த
இறைவனுக்கு அவர்களை இருந்த இடத்திலேயே
அழிக்கும் சக்தி கிடையாதா?
மெத்த படித்தவனை விட பாமரனிடம்தான் நம்பிக்கை, பக்தி இருக்கிறது.
படித்தவர்கள் வாதம் செய்வதோடு சரி.
பாமரன் கையில் அம்மன் முன்பு காப்பு கட்டிய உடனே தீயில் இறங்குவதற்கு பயப்படுவதில்லை .ஆனால் படித்தவன் அதை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி தள்ளி விடுகிறான்
இவ்வுலகில் அனைவரும் இன்பமாக வாழவேண்டும்.
அமைதியாக வாழ வேண்டும்.
அதற்க்கு அன்பு ஒன்றுதான் வழி
.மதங்களும் சாத்திரங்களும் மக்களிடையே பிரிவுகளையும் மோதல்களையும்தான் உண்டாக்கியுள்ளன.
என்றால் அது மிகையாகாது.
கேட்டால் அவைகளில் தவறு ஒன்றுமில்லை அதை சரியாக நடைமுறைப்படுதாமையால்தான் கோளாறு. என்பார்கள்.
ஆனால் உண்மையை உள்ளவாறு உணர்ந்து
தெளிந்தவர்களிடம் இந்த பேதம் இல்லை.
வெறும் உண்மையை பற்றி வாழ்நாள் முழுவதும்
பேசிக்கொண்டிருப்பவர்கள்
இன்று உலகில் நிறைந்துவிட்டார்கள்.
அதுதான் இத்தனை குழப்பத்திற்கும் காரணம்
.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக