புதன், 30 ஜனவரி, 2013

புது அவதாரம் எடுக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்


புது அவதாரம் எடுக்கும்
பிளாஸ்டிக் பாட்டில்கள் 

பிளாஸ்டிக் பாட்டில்களை 
தூக்கி எறியாதீர்கள்

பயனுள்ள பொருட்களாக
மாற்றி பயன்படுத்துங்கள் 

இதோ கீழே விவரம்

படம்-1 








படம்.2

படம்-3


படம்-4

அழகாக வெட்டப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலில் 
அவரவர்களுக்கு வேண்டிய படங்களை 
அழகாக ஒட்டிக்கொள்ளலாம் 

அவரவர் பயன்பாட்டிற்கு ஏற்ப
எங்கு வேண்டுமானாலும்
அமைத்து பயன்படுத்தலாம்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

இறைவன் வகுத்த விதியை மாற்றவோ அல்லது சிதைக்கவோ யாராலும் இயலாது.


பிறவிலேயே உயர்ந்த ,விலை மதிக்க முடியாத, 
மீண்டும் கிடைக்காத ஒரு வரப்ரசாதம் மனிதபிறவிதான் 



இந்த உலகம் இறைவன் வகுத்து அளித்த விதிகளின்படி இயங்கி கொண்டிருக்கிறது. அந்த விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் நாமும் இயங்கிகொண்டிருக்கிறோம்.

அந்த இறைவன் வகுத்த விதியை மாற்றவோ அல்லது சிதைக்கவோ யாராலும் இயலாது.

 மனிதர்கள் பூகம்பத்தை பற்றியோ, சுனாமியை பற்றியோ எவ்வளவு ஆராய்ச்சி செய்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. பூகம்பம் மற்றும் சுனாமி, புயல், வெள்ளம்.  வரும்போதுவரும் அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு போகும்.

இந்த உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு போர்கள்   நடந்துகொண்டிருக்கின்றன.கோடிக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக மாண்டு போயிருக்கிறார்கள்.

மனிதனின் உழைப்பால் கட்டப்பட்ட மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும், கோயில்களும், மண்ணோடு மண்ணாக போயிருக்கின்றன. ஆனால் அவைகள் மீண்டும் மீண்டும் இந்த உலகில் இறைவனால் உண்டாக்கப்பட்டுகொண்டிருக்கின்றன.

அண்டத்தில் கோடிக்கணக்கான கோள்கள் சுற்றுகின்றன. நம்மால் காணமுடியாத தொலைவில் அவைகள் வெடித்து சிதறிக்கோண்டிருக்கின்றன.



தாயின் கருப்பைக்குள் சிசுவை பனிக்குடத்தில் வைத்து காப்பாற்றுவதுபோலிந்த உலகத்தை. காற்றுமண்டலம்,மற்றும் கடல் நீரை கொண்டும். எங்கோ உள்ள சூரியனிடமிருந்து கிரணங்களை அனுப்பி வெப்பத்தையும், ஒளியையும் தந்து நம்மை இறைவன் காத்துகொண்டிருக்கின்றான்.

அதே நேரத்தில் அவன் ஒவ்வொரு உயிரின் இதயத்தில் ஆன்ம ஒளியாக இருந்துகொண்டு. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் நம் உடலுக்கு அளித்து நம்மை இயங்க செய்கின்றான்.

அப்படிப்பட்ட இறைவனை நாம் எந்த கொள்கைக்குள்ளும் எந்த வடிவதிர்க்குள்ளும் அடைக்க இயலாது.

அவனை ,அந்த உயிர்கள்பால் அன்புள்ளம் கொண்டவனை, நாம் கேட்காமலேயே நமக்கு அனைத்தையும் தந்து நம்மை வழிநடத்தும் அந்த தயாபரனை,. நாம் மனதினால் நினைத்து,நினைந்து அன்போடு,நன்றியோடு வணங்கினால் நமக்காக அருள் செய்ய நம் இதயத்தில் அவன் காத்துகொண்டிருக்கிறான்.

தேவை அன்பு ஒருதான். வேறு எதுவும் நம்மிடம் அவன் கேட்பதில்லை. கலப்படமற்ற அன்பு. தூய அன்பு.பரிசுத்தமான அன்பு. எதிர்பார்ப்பிலா அன்பு. அதுதான் அவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றான்.

அதை அவனிடம் கொடுப்பதற்கு
 நாம் நம் அகந்தையை விட்டொழிக்கவேண்டும்.
அகந்தையை விட்டுவிடுங்கள்.
 நம்முள் இருக்கும் அதே இறைவன்தான்
எல்லா உயிரிலும் இருக்கின்றான்

அனைவரின்மீதும் அன்பை பொழியுங்கள்.
அன்பைபொழிய முடியாவிட்டால்
அங்கிருந்து அகன்றுவிடுங்கள்

பிறர்மீது குறை காணாதீர்கள்.
ஏனென்றால் நம்மிடம் உள்ள குறைகள்தான்
பிறர் மீது தெரிகிறது நாம் பார்க்கும் முக கண்ணாடியில் நம் முகம் தெரிவதுபோல். இந்த உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.

நாம் குறை காணும் மனிதர்களிடமும்நல்ல குணங்கள் இருக்கும் .
அதை பெரிதுபடுதுங்கள்.. அவர்கள் உங்கள் நண்பராகிவிடுவார்

இந்த உலகத்தில் தீயவைகள் இருக்கத்தான் செய்யும்,
தீயவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
அவர்களை முடிந்தால் திருத்துங்கள்.
ஆனால் அதற்க்கு முன் நீங்கள் உங்களிடம்
 உள்ள தீயவற்றை விலக்கிய பின்புதான்
அதை செய்ய வேண்டும்.
அதற்க்கு உங்களிடம் பொறுமை இருக்க வேண்டும்.
 நம்பிக்கை இருக்கவேண்டும்
இல்லையென்றால் மெளனமாக இருந்துவிடுங்கள்.
 காலம் அதைபார்த்துக்கொள்ளும்

எனவே எந்த மதத்தை சார்ந்தவராயினும் இறைவன் ஒன்றே.
அவரவர் அவனை அவரவர்க்கு
பிடித்த முறையில் அவனை நாடுகிறார்கள்.
சிலர் ஆர்வ மேலீட்டால் மற்றவர்களை சாடுகிறார்கள்.

எது எப்படியாயினும் நீங்கள் உங்கள்கொள்கையில்
முழு நம்பிக்கையுடன் இருங்கள்.
உங்கள் வாழ்வு சிறக்கும்.
உங்களை சுற்றியுள்ள இந்த உலகமும் செழிக்கும்.

பிறவிலேயே உயர்ந்த ,விலை மதிக்க முடியாத,
மீண்டும் கிடைக்காத ஒரு வரப்ரசாதம் மனிதபிறவிதான்

தேவர்களும்,தெய்வங்களுக்கும் கூட கிடைக்காது
இந்தவரப்ரசாதமாக கிடைத்த அபூர்வ
பொக்கிஷத்தை நாம் வீணாக இழந்துவிடக்கூடாது

.நாம் இறைவனின் கருவிகளாக நம்மை எண்ணிக்கொண்டு
எந்நேரமும்அவன் நினைவோடு.
 நம்முடைய கடமைகளை ஆற்றவும்
அனைவரிடமும் அன்போடு பழகவும்
 நமக்கு இறைவன் தரும் எந்த சோதனையையும்
அவன் அருட்ப்ரசாதமாக ஏற்றுக்கொள்ளவும்
நம்மை பழக்கிகொள்ளவேண்டும்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

தைபூச நன்னாள்- திரு அருட்ப்ரகாச வள்ளலார் கருத்துகளை சிந்தனை செய்வோம்


அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி ஜோதி தனிபெரும் கருணை 


தைபூச நன்னாள்-
திரு அருட்ப்ரகாச வள்ளலார் கருத்துகளை 
சிந்தனை செய்வோம்


வள்ளல் யார்?
யார் எதை கேட்டாலும் இல்லை
எனாது கொடுப்பவர் வள்ளல்

வைணவர்களை கேட்டால் நம்பி
ராமானுஜரை வள்ளல் என்பார்கள்.

திருப்பாவை அருளிய ஆண்டாளை கேட்டால்
வாங்க குடம் நிறைக்கும் பசுக்களை வள்ளல் என்பாள்

கம்பனை சுவைப்போர் கம்பனை ஆதரித்த
சடையப்பனை வள்ளல் என்பார்கள்.

தமிழறிந்தவர்களை கேட்டால் செத்தும் கொடுத்தான்
சீதக்காதி வள்ளல் என்பார்கள்

மகாபாரதம் படித்தவர்கள்
கர்ணன்தான் வள்ளல் என்பார்கள்.

ஆனால் ஒருவர் வாழையடி வாழையென
வந்த திருகூட்டத்தில் நானும் ஒருவன் என்றார்

அவர் எந்த தானமும் செய்யவில்லை

ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்ய வேண்டும் என்றார்

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக என்றார்

வடிவங்களை வழிபடாதீர்
ஜோதி வடிவாய் விளங்கும் இறைவனை
ஓளி வடிவத்தில் வழிபடுவீர் என்றார்.

ஆனால் அவர் சொல்வதை யாரும் கடைபிடிக்கவில்லை
ஏனென்றால்உருவ வழிபாட்டில் இன்பம் கண்டுகொண்டிருந்த மக்களுக்கு உருவமில்லா வழிபாட்டில் ஈடுபாடு இல்லை.

வழக்கம்போல் இந்த உலக மாந்தர் கூட்டம்
அவரை கடவுளாக்கிவிட்டது. கோயில்கள்
கட்டி பூசாரியை நியமித்துவிட்டது.

ஸ்ரீ ராமலிங்கவிலாஸ் என்ற பெயரில்
அசைவ உணவு விடுதிகளை நடத்துகிறார்கள்
அவரின் மிக பெரிய படம் நடுநாயகமாக
உணவு கூடத்தில் மலர்கள் சூடம் காட்டி அலங்கரிக்க

வள்ளலார் பற்றி உரையாற்றுகிறார்கள் மேடையில்
சுவைத்து உண்கிறார்கள் அசைவ உணவுகளை கடையில்

அவர் இந்து மதத்திற்கு எதிரானவர் என்று போர்க்கொடி தூக்கி அவரை இருட்டடிப்பு செய்துவிட்டது வடிவங்களை வணங்கும் மாந்தர் 

அன்னதானம் என்ற பெயரில் சோம்பேறிகளுக்கும்
பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிகளுக்கும் உணவு வீணடிக்கப்படுகிறது

உண்மையில் பசித்திருப்பவனுக்கு உணவு போய் சேருவதில்லை. அது அவனை போய்சேர்வதற்குள் அவன் இந்த உலகத்தை விட்டே போய் சேர்ந்து விடுகிறான்.

கூட்டம் கூடி அன்னதானம் வழங்குவதை விட்டு அவரவர் இருக்கும் இடங்களில் உள்ள,வறியோர், ஆதரவற்றோர்,முதியோர் , நோயுற்றோர் ஆகிய பசித்திருப்போருக்கு அன்ன தானம் வழங்கினால் 
இறைவன் மகிழ்வான். 


ஆடம்பரத்தை பறைசாற்றும் திருமணம்,விருந்துகளில்
உணவு பொருட்களை வீணடிக்காமல் ஏழைகளுக்கு 
விருந்தளித்தால்  வள்ளலார் ஆன்மா மகிழும்

வள்ளலாரைபோல் பட்டை அடித்து வெண் உடை தரித்து வேஷம்போடுபவர்கள் இரவில் வேஷத்தை
கலைத்து பட்டை போடுகிறார்கள்

தன் வாழ் நாளில் கொல்லா விரதத்தை
போற்றி பாடிய நாட்டில் இன்று எங்கு
பார்த்தாலும் கசாப்பு கடைகள்.

கோயில்களில் உயிர்பலிகள்

வாடிய பயிரை கண்டு வருந்திய வள்ளலின் உள்ளம்
இன்று ஆறுகள் வற்றி நீரின்றி கருகும்
பயிர்களை கண்டால் என்ன செய்யும். ?

இந்த மனிதர்கள் தன்னுடைய
கொள்கைகளை பேசிக்கொண்டே
கொலைகளை செய்வதை ,
அன்பில்லாமல் இருப்பதை
ஒருமையுடன் இறைவனை வணங்காமல்
பகட்டுக்காக இறைவனை வணங்குவதுபோல்
 நடித்து தன்னையும் பிறரையும் ஏமாற்றுதல்
இவைகளையெல்லாம் எவ்வளவு காலம் சகித்துக்கொள்வது?

கடை விரித்தேன் கொள்வாரில்லை
என்று கதவை தாளிட்டுக்கொண்டு காணாமல் போனாரோ?

ஆனால் தைபூசம் என்றால் வள்ளலார்என்றும்
வடலூர் என்றும் சில மக்களுக்கு நினைவு வரும்.
வழக்கம்போல் வழிபாடுகள், கூட்டம்,
ஜோதி தரிசனம், அன்னதானம்

அப்புறம் காக்காய் கூட்டம் கலைந்துவிடும்
அவரவர் வேலையை பார்க்க.

புதன், 16 ஜனவரி, 2013

இந்த நிலை என்று மாறுமோ?


பள்ளி செல்லும் குழந்தைகள் படும் பாடு 
நம் நாட்டில் தான் இப்படி என்று நினைத்தேன்
















இந்தோநேஷியாவிலும் இதே கதிதான் போலும். 



















குழந்தைகள் மீது அளவு கடந்த
 பாசம் வைத்திருக்கிறார்கள் பெற்றவர்கள். 
ஆனால் அவர்களைபள்ளிக்கும் அனுப்பும்போதுமட்டும் 
அந்த பாசம் எங்கே போய்விடுகிறது என்று தெரியவில்லை. 
இவ்வளவு ஆபத்தான சூழ்நிலைகளை சந்திக்க
குழந்தைகளை விட்டுவிடுகிறார்கள். 
அரசும் இந்த அவலத்தை
 கண்டு கொள்வதில்லை. 
என்ன உலகமோ?


இந்த நிலை என்று மாறுமோ?


தமிழ்நாட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் தலைநகரின் அலங்கோல மஞ்சு விரட்டும்


தமிழ்நாட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் 
தலைநகரின் அலங்கோல மஞ்சு விரட்டும் 

காணும் பொங்கலன்று தமிழ்நாட்டில்
ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டென்று
நடத்துகிறார்களாம்

காளைகளை கட்டிவைத்து கண்ணுக்கு கண்ணாக
கவனித்து கொழுக்கவைத்து காணும் பொங்கலன்று
பல்லாயிரம் மக்கள் கூடுமிடத்தில்
கட்டவிழ்த்து விடுவார் ஆரவாரம் பொங்க

மிரண்டோடும் காளைதனை
விரட்டி பிடிப்பார் வீரம்மிகு காளையர்கள் பலர்
விதியிருந்தால் வெற்றிபெருவோர் பெறுவார் பரிசு
இல்லாதோர் இன்னுயிரை இழப்போர் சிலர்
காயமுற்று மருத்துவமனையை அடைவோர் பலர்.

இங்கோ மிருகங்களை துரத்துகின்றனர்
ஜல்லிக்கட்டில்

ஆனால் அந்தோ தலைநகர் டெல்லியில்
நடக்கும் மஞ்சுவிரட்டில் மிருகங்கள்
மங்கையர்களை விரட்டி சென்று குதறி
சுவைக்கின்றன .

ஜல்லிகட்டோ ஆண்டில் சிலநாள் நடக்கிறது
ஆனால் டெல்லி மஞ்சு விரட்டோ நாள்தோறும்
நடக்கிறது நாடு முழுவதும்.

ஏன் இந்த அவலம்
காரணம் என்ன ?

ஒரு கவிஞன் பாட்டெழுதுகிறான்
புலி மானை  வேட்டையாடுமிடம் காட்டில்
பெண் ஆணை வேடையாடுமிடம் கட்டில் என்று.

திரைப்படத்தில் பெண்ணின் ஆபாச அங்க
அசைவுகலில்லா  படமும்,பெண்ணை விரட்டி
கற்பழிக்கும் காட்சிகளில்லா படமும்
பாம்புபோல் சுருண்டு பெட்டிக்குள் படுத்துவிடும்.

இதை காணுவோரும் அந்த காட்சிக்கு
உறு துணையாக இருப்போரும்
அதை வெறும் நடிப்பு என்பர்.

அதுவே உலகத்தில் நடந்துவிட்டால்
அந்த செயல் செய்தவனை அனைவரும்
வெறுத்து ஒதுக்குவார்.

சிலர் காசு வாங்கி கொண்டு செய்தால் அது நடிப்பு
மக்கள் காசு கொடுத்து அதை சென்று பலமுறை பார்ப்பார்
நடித்தவருக்கு விருதுகள்.

சிலர் அதை காம வெறி பிடித்து அதை செய்தால்
அவனுக்கு மரண தண்டனை


ஒழுக்கம் கெட்ட சமுதாயம்.
இப்படிதான் இனி இருக்கும்.


பெண்ண சிவனில் பாதிஎன்று  பெண்ணை போற்றி பாடி
 கும்பிடுவார் கோயிலில்

வீட்டிலோ அவளை தன் பெண்ஜாதி என்று விரட்டிடுவார்,
வேதனை செய்வார் வேலை வாங்குவார்

கேலி செய்வார் வீதியிலே நடந்துசெல்லும்போது

இடித்து இன்பம் காண்பார் பேருந்து ரயில் பயண
கூட்ட நெரிசலின் போது. பலர்

தங்கநகை அணிந்து சாலையில் தளர் நடை போட்டால்
வண்டியில் வேகமாக வந்து தாலி சரட்டோடு
பறித்து செல்வார் கயவர்கள் பலர்

வீட்டில்நகையணிந்துதனிமையில் இருக்கும்
பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை இந்நாட்டில்.

நகையை பாதுகாக்கவிரும்பும்
மங்கையருக்கு தன்னை
பாதுகாத்துக்கொள்ள பயிற்சியில்லை.

அதை அளித்தால் போதும் குற்றம் குறைய
வாய்ப்புண்டு

சிந்தியுங்கள் ஆட்சியாளர்களே



 







சனி, 12 ஜனவரி, 2013

உண்மையை உள்ளவாறு உணர்ந்து தெளிந்தவர்களிடம் பேதம் இல்லை.


எல்லா மதங்களும் பல பிரிவுகளும்
கணக்கற்ற உட்பிரிவுகளும் கொண்டது
ஒவ்வொரு பிரிவிலும் மக்கள் உள்ளனர்.

அவர்களிடையே பொதுவாக பேதம் இல்லை

ஆனால் அவர்கள் தங்கள் சார்ந்துள்ள பிரிவுகளின் தலைவர்களாக உள்ளவர்கள்தான் மக்களிடையே வேற்றுமையையும், வெறுப்பையும் ,விரோத மனப்பான்மையையும் விதைக்கிறார்கள்.

அதனால்தான் மக்களிடையே மோதல்கள் நிகழுகின்றன .
உயிர் பலி மற்றும் சேதங்கள் தொடர்ந்து
 உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன

சில மதங்கள்/பிரிவுகளின் தலைவர்கள் தாங்கள்
கடைபிடிக்கும் கொள்கைதான் உண்மை என்றும்,
தாங்கள்வணங்கும் கடவுள்தான் சக்தி வாய்ந்தவர் என்றும்
 பல நூல்களை மேற்கோள் காட்டி மக்களிடையே
பேதங்களை உருவாக்குகின்றனர்.

மற்ற கடவுள்களை பல நேரங்களில் இழிவு படுத்துவதற்கும் அவர்களின் வழிபாட்டு தலங்களை அழிப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

இந்த போராட்டம் உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு நடந்துகொண்டு வருகிறது. தற்காலத்திலும் நடக்கிறது. எதிர்காலத்திலும் நடக்கும். அதை தடுக்க முடியாது.

ஆனால் பரம்பொருள் என்று ஒன்று இருக்கிறது என்று அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். நாத்திகர்களும் கூட. ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த பெயரை அதற்க்கு வைத்திருக்கிறார்கள்.

இறைவன் அன்பு மயமானவன் என்று அனைவரும் சொல்லுகிறார்கள். அன்பாய் இருப்பவனிடம் எதற்கு கையில் பல அபாயகரமான ஆயுதங்களைவைத்திருக்கிறான். என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள்

இறைவன் கருணையுடைவன் என்று சொல்கிறார்கள்
ஆனால் அவன் பலர் வாழ்வில் என் கருணையின்றி
துன்பங்களை பரிசாக அளிக்கிறான் என்று சிலர் கேட்கிறார்கள்

எல்லோரையும் இறைவன்தான் படைத்தான் என்றால்
அசுரர்களையும், ராஷசர்களையும், தீயவர்களையும்
அவன்தானே படைத்திருக்க முடியும்.

அவன் எதற்க்காக அவர்களையும் படைக்கவேண்டும்?

பிறகு அவர்களை அழிக்க அவன் எதற்கு
அவதாரங்கள் எடுக்க வேண்டும்?

உட்கார்ந்த இடத்திலேயே அவர்களை படைக்க தெரிந்த
இறைவனுக்கு அவர்களை இருந்த இடத்திலேயே
அழிக்கும் சக்தி கிடையாதா?



மெத்த படித்தவனை விட பாமரனிடம்தான் நம்பிக்கை, பக்தி இருக்கிறது.
படித்தவர்கள் வாதம் செய்வதோடு சரி.
பாமரன் கையில் அம்மன் முன்பு காப்பு கட்டிய உடனே தீயில் இறங்குவதற்கு பயப்படுவதில்லை .ஆனால் படித்தவன் அதை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி தள்ளி விடுகிறான்

இவ்வுலகில் அனைவரும் இன்பமாக வாழவேண்டும்.
அமைதியாக வாழ வேண்டும்.
அதற்க்கு அன்பு ஒன்றுதான் வழி

.மதங்களும் சாத்திரங்களும் மக்களிடையே பிரிவுகளையும் மோதல்களையும்தான் உண்டாக்கியுள்ளன.
என்றால் அது மிகையாகாது.

கேட்டால் அவைகளில் தவறு ஒன்றுமில்லை அதை சரியாக நடைமுறைப்படுதாமையால்தான் கோளாறு. என்பார்கள்.

ஆனால் உண்மையை உள்ளவாறு உணர்ந்து
தெளிந்தவர்களிடம் இந்த பேதம் இல்லை.

வெறும் உண்மையை பற்றி வாழ்நாள் முழுவதும்
பேசிக்கொண்டிருப்பவர்கள்
இன்று உலகில் நிறைந்துவிட்டார்கள்.
அதுதான் இத்தனை குழப்பத்திற்கும் காரணம்
.

வியாழன், 10 ஜனவரி, 2013

இந்த அழகிய நீரூற்று


இந்த அழகிய நீரூற்று அஜபர்ஜைஜானில் உள்ளது.




இதுவே தமிழ்நாட்டில் இருந்தால் எப்படி இருக்கும்?

இதோ இப்படிதான் இருக்கும்.


புதன், 9 ஜனவரி, 2013

நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)



செவ்வாய், 8 ஜனவரி, 2013

நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)


திருப்பதி பத்மாவதி தாயார் படம் வரைந்தேன். 1997ல் ஆரம்பித்து 2006ல் தான் முடித்தேன். அந்த படம் இதோ 




சனி, 5 ஜனவரி, 2013

தங்கமே தங்கம்...தங்கம்


தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

தங்கத்தின் மீது மோகம் கொண்டவர்களே 
தங்கம் வாங்கும் முன்பு 
இந்த உண்மையை 
தெரிந்துகொள்ளுங்கள்


.


இது என்னுடைய சொந்த பதிவல்ல
எனக்கு வந்ததை உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான்.
நகை கடை அதிபர்கள் வழக்கம்போல் 
அவர்களின் வியாபார தந்திரங்களை 
காட்டி மக்களின் தலையில் மிளகாய் அரைக்கலாம். 

"நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்"

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு

மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். 

வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! 

இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி
அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"

அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள்

 நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? 

இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? 

பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? 

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? 

அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது?

 பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? 

ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? 

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. 

இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...அல்லது திருத்தப் பட வேண்டும்.

நன்றி :- திரு.முத்துராமலிங்க அவர்களின் பக்கத்தில் எடுக்கப்பட்து

புதன், 2 ஜனவரி, 2013

நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Ball Point Pen sketches)




நானும் ஒரு ஓவியன் தான்  (Ball Point Pen sketches