மனித பிறவி
எடுத்தென்ன பயன்?
அரக்கர் குலத்தில் பிறந்த விபீஷணன்
இவ்வுலகில் அவதரித்த அரங்கனை
அடையாளம் கண்டு அறிந்து கொண்டு
அடைக்கலம் அடைந்தான்.
அரக்கனுக்கே மகனாய் பிறந்த
பிரகலாதன் அரவணைப் பள்ளியானை
அன்போடு உபாசித்து அவன் மடியிலேயே
அமர்ந்துகொண்டான்.
ஆடு மேய்க்கும் இடையர்கள் அகிலத்தை
தன்னுள்ளே கொண்ட இறைவனாம்
கண்ணனை தங்கள் குலத்தில் அவதரிக்கச்
செய்து ஆனந்த வாழ்வு வாழும்
பேறு பெற்றனர்.
வானர குலத்தில் பிறந்த அனுமனோ
ராமனாய் வந்த மாதவனை அறிந்துகொண்டு
அவன் சேவகனாய் சேவை செய்து இன்புற்றான்
நம்மையெல்லாம் கடைத்தேற்ற
நம்மிடையே மனிதனாய் தோன்றி
மா மனிதனாய் நம்மோடு வாழ்ந்து
இன்றும் அவன் பக்தர்களின் இதயத்திலே
வாழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீ ராம பிரானை
அறிந்து உய்யாது போனால் மனித பிறவி
எடுத்தென்ன பயன்?
எடுத்தென்ன பயன்?
அரக்கர் குலத்தில் பிறந்த விபீஷணன்
இவ்வுலகில் அவதரித்த அரங்கனை
அடையாளம் கண்டு அறிந்து கொண்டு
அடைக்கலம் அடைந்தான்.
அரக்கனுக்கே மகனாய் பிறந்த
பிரகலாதன் அரவணைப் பள்ளியானை
அன்போடு உபாசித்து அவன் மடியிலேயே
அமர்ந்துகொண்டான்.
ஆடு மேய்க்கும் இடையர்கள் அகிலத்தை
தன்னுள்ளே கொண்ட இறைவனாம்
கண்ணனை தங்கள் குலத்தில் அவதரிக்கச்
செய்து ஆனந்த வாழ்வு வாழும்
பேறு பெற்றனர்.
வானர குலத்தில் பிறந்த அனுமனோ
ராமனாய் வந்த மாதவனை அறிந்துகொண்டு
அவன் சேவகனாய் சேவை செய்து இன்புற்றான்
நம்மையெல்லாம் கடைத்தேற்ற
நம்மிடையே மனிதனாய் தோன்றி
மா மனிதனாய் நம்மோடு வாழ்ந்து
இன்றும் அவன் பக்தர்களின் இதயத்திலே
வாழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீ ராம பிரானை
அறிந்து உய்யாது போனால் மனித பிறவி
எடுத்தென்ன பயன்?
தூரத்து உயரங்கள்தான் கண்ணில் படும். அருகாமை அருமைகளை நாம் கவனிப்பதே இல்லை. அவர்களுக்கு கொடுப்பினை இருந்தது.
பதிலளிநீக்குகொடுப்பவர்களுக்குத்தான் கிடைக்கும்
நீக்குகொள்பவர்களுக்கு அல்ல