குடிமகன்களே உங்களுக்காக!
5 ஆண்டுகளுக்கு முன் பதிவிட்டது. -மீள் பதிவு.
குடிமகன்களே உங்களுக்காக!
அது ஒரு மதுபான விடுதி
அங்கு ஒரு குடிமகன்
தன் நண்பர்களோடு
உட்கார்ந்துகொண்டு
மகிழ்ச்சியாக
குடித்துக்கொண்டிருந்தான்
அவனுக்கு திருமணமாகி மனைவியும்
குழந்தைகளும் இருப்பது அவனுக்கு
மறந்துவிட்டது.
உழைத்து கிடைப்பதை. குடித்து
ஒழிப்பதே வாழ்வின் தன்
முதற் கடமையாகக்
கொண்டிருந்த உத்தம பிறவிகளில்
அவனும் ஒருவன்.
இதைப் பொறுக்கமுடியாமல்
ஒருநாள் அவள் மனைவி மதுபான
விடுதியின் உள்ளே சென்று
அவன் அருகில் சென்று நின்றாள்
உடனே அவன் வா,வா,
நீயும் ஒரு மொந்தை போடு. என்றான்.
உடனே அவள், சாப்பிடக் கூட
வீட்டுக்கு வரமுடியாமல் நீங்கள்
இங்கே மிகவும் வேலையாய் இருப்பீர்கள்
என்று நினைத்தேன் என்றாள்
அதனால்தான் உங்கள்
பகல் உணவை இங்கேயே கொண்டு
வந்து விட்டேன்.சாப்பிட்டுவிட்டு
சந்தோஷமாக இருங்கள் என்று,
தான் கொண்டுவந்த
டிபன் பாக்சை மேஜை மீது
வைத்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டாள் .
அவள் கூறியதைப் பார்த்து
அவன் அசிங்கமாய் சிரித்தான்.
அவளை ஏளனமாய்ப் பார்த்தான்.
உடனே தன் நண்பர்களை
தன்னுடன் உணவு உண்ணுமாறு
சந்தோஷமாக அழைத்தான்.
சரி நாமும் வீட்டிற்கு போகவேண்டியதில்லை.
மதிய உணவை இங்கேயே முடித்துவிட்டு
மீண்டும் குடிக்கலாம் என்று அவர்களும்
அவனருகே வந்து அமர்ந்தனர்.
அவன் டிபன் பாக்ஸ் மூடியை
ஆவலுடன் திறந்தான்.
அதன் உள்ளே அவன் எதிர்பார்த்த உணவுகள்
ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு தாளில்
ஒரு" சிறு குறிப்பு "மட்டுமே இருந்தது.
"உங்களுக்கு பிடித்த உணவை உண்டு
மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் மனைவியும் குழந்தைகளும்
வீட்டிலே சாப்பிடும் அதே உணவுதான்
உங்களுக்கும் இங்கே வைக்கப்பட்டுள்ளது.
நன்றாக உண்டு பசியாறுங்கள்.
குடிமகன்களே குடிப்பதற்கு
முன் இந்த செய்தியை கொஞ்சம்
கண் திறந்து படியுங்கள் ஏனென்றால்.
குடித்த பின் அதை செய்ய முடியாது.
(1995 ஆம் ஆண்டு சக்தி தீபாவளிமலரில் வெளிவந்த ஒரு கட்டுரையைதழுவி எழுதப்பட்டது. )
அது ஒரு மதுபான விடுதி
அங்கு ஒரு குடிமகன்
தன் நண்பர்களோடு
உட்கார்ந்துகொண்டு
மகிழ்ச்சியாக
குடித்துக்கொண்டிருந்தான்
அவனுக்கு திருமணமாகி மனைவியும்
குழந்தைகளும் இருப்பது அவனுக்கு
மறந்துவிட்டது.
உழைத்து கிடைப்பதை. குடித்து
ஒழிப்பதே வாழ்வின் தன்
முதற் கடமையாகக்
கொண்டிருந்த உத்தம பிறவிகளில்
அவனும் ஒருவன்.
இதைப் பொறுக்கமுடியாமல்
ஒருநாள் அவள் மனைவி மதுபான
விடுதியின் உள்ளே சென்று
அவன் அருகில் சென்று நின்றாள்
உடனே அவன் வா,வா,
நீயும் ஒரு மொந்தை போடு. என்றான்.
உடனே அவள், சாப்பிடக் கூட
வீட்டுக்கு வரமுடியாமல் நீங்கள்
இங்கே மிகவும் வேலையாய் இருப்பீர்கள்
என்று நினைத்தேன் என்றாள்
அதனால்தான் உங்கள்
பகல் உணவை இங்கேயே கொண்டு
வந்து விட்டேன்.சாப்பிட்டுவிட்டு
சந்தோஷமாக இருங்கள் என்று,
தான் கொண்டுவந்த
டிபன் பாக்சை மேஜை மீது
வைத்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டாள் .
அவள் கூறியதைப் பார்த்து
அவன் அசிங்கமாய் சிரித்தான்.
அவளை ஏளனமாய்ப் பார்த்தான்.
உடனே தன் நண்பர்களை
தன்னுடன் உணவு உண்ணுமாறு
சந்தோஷமாக அழைத்தான்.
சரி நாமும் வீட்டிற்கு போகவேண்டியதில்லை.
மதிய உணவை இங்கேயே முடித்துவிட்டு
மீண்டும் குடிக்கலாம் என்று அவர்களும்
அவனருகே வந்து அமர்ந்தனர்.
அவன் டிபன் பாக்ஸ் மூடியை
ஆவலுடன் திறந்தான்.
அதன் உள்ளே அவன் எதிர்பார்த்த உணவுகள்
ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு தாளில்
ஒரு" சிறு குறிப்பு "மட்டுமே இருந்தது.
"உங்களுக்கு பிடித்த உணவை உண்டு
மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் மனைவியும் குழந்தைகளும்
வீட்டிலே சாப்பிடும் அதே உணவுதான்
உங்களுக்கும் இங்கே வைக்கப்பட்டுள்ளது.
நன்றாக உண்டு பசியாறுங்கள்.
குடிமகன்களே குடிப்பதற்கு
முன் இந்த செய்தியை கொஞ்சம்
கண் திறந்து படியுங்கள் ஏனென்றால்.
குடித்த பின் அதை செய்ய முடியாது.
(1995 ஆம் ஆண்டு சக்தி தீபாவளிமலரில் வெளிவந்த ஒரு கட்டுரையைதழுவி எழுதப்பட்டது. )
இனியும் அவன் குடிச்சா அவன் மனுசனே இல்ல
பதிலளிநீக்குநண்பர்களுடன் ஒரு கம்பெனிக்காக குடிக்க தொடங்குபவர்கள் நாளடைவில் சாராய கம்பெனியின் நிரந்தர வாடிக்கையாளர்களாகிவிடுகிறார்கள்.
நீக்குபட்டினி... நச்சென்று சொல்லிச் சென்றிருக்கிறாள்.
பதிலளிநீக்குபுதை குழியில் மாட்டிக் கொண்டவர்கள் மீள்வது அரிது.
நீக்குஅழகிய உட்கருத்து அவனுக்கு இனியெனும் உறைக்கட்டும்.
பதிலளிநீக்குபோதையில் ஆழ்வதும் பேதைகளை துன்புறுத்துவதும்
பதிலளிநீக்குஅடித்தட்டு மக்களின் அன்றாட நிகழ்வாய்ப் போய்விட்டது.
மக்கள் நல அரசு மக்களை மாக்களாக மாற்றிவிட்டது.
அரசு தம் மக்களின் வாழ்வை சுரண்டி அவர்களின்
வாழ்வை வறண்ட பாலைவனமாக ஆக்கிவிட்டது.
அன்பும் அறனும் எனப்பட்டதே இல்வாழ்க்கை
என்ற வள்ளுவனின் வாக்கு அன்றாடம் அடி தடியும்
அவலமுமாக ஆகிவிட்டது.
சுய நினைவே இல்லாதவர்களிடம் சுய முன்னேற்றம்
பற்றி பேசுவது சுத்த முட்டாள்தனம் .