செவ்வாய், 4 செப்டம்பர், 2018

மேல்நாட்டு மோகம் ஒழியட்டும்.

மேல்நாட்டு மோகம் ஒழியட்டும்.


மேல்நாட்டு மோகம் ஒழியட்டும். 

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி  செய்யப்பட்ட 

மெழுகு மற்றும் ரசாயனம் பூசப்பட்டு 

நாம் நாட்டில் விற்கப்படும் 

ஆப்பில் பழங்களை உண்ணாதீர். 

அவைகளில் சத்தும் இல்லை 

சாரும் இல்லை 

நம் நாட்டு மக்கள் தேவையில்லாமல் 

அதிக விலை கொடுத்து அதை வாங்கி 

தன் உடல்நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.

நம் நாட்டில் நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கேற்ற 

அந்தந்த பகுதிகளில் ஏராளமான  வகையான சுவையான  கனிகள் விளைகின்றன. 

அவைகள் விலை மலிவானவை. சத்து மிக்கவை. 

அவைகளை அந்தாத கால கட்டங்களில் உண்ணுங்கள்.

 நம்முடைய உடல் நலம்நன்றாக இருக்கும். 

நாளொன்றுக்கு ஒரு ஆப்பிள் உண்டால் 

மருத்துவரை தொலைவில் வைக்கலாம் 

என்பது ஒரு பொய்ப் பிரசாரம்

இன்று ஆப்பிள் கிலோ 130 ரூபாய்க்கு 

குறையாமல் விற்கப்படுகிறது. ஒரு கிலோ ஆப்பிளில் 

அதன் தோல் மற்றும் நடுப்பகுதி 

என 250 கிராமுக்கு மேல் வீணாகி விடும்

மக்களுக்கு கிடைக்கும் ஆப்பிள்கள் அனைத்தும் 

குறைந்தது மரத்திலிருந்து பறிக்கப்பட்டு குறைந்தது 

30 நாட்கள் கழித்துதான் கிடைக்கிறது. 

அதில் வெறும் மாவு சத்துதான் இருக்கிறது.

அதுவும் வெளிநாட்டிலிருந்து வரும் ஆப்பிள்களில் 

மெழுகு மற்றும் ரசாயனம் பூசப்படுகிறது.

அது பறித்து எத்தனை மாதங்கள் ஆகியதோ அந்த 

ஆண்டவனுக்கே வெளிச்சம்.

 ஒன்றும் அறியாத மக்கள் 

அதை அப்படியே உண்கின்றனர். 



நம் நாட்டில் கிடைக்கும், நெல்லிக்காய், 

கொய்யா, சப்போட்டா, ஆரஞ்ச் பலவிதமான 




வாழைப்பழங்கள்,




 மாங்கனிகள், பலாப்பழம்,மாதுளை  சீதாப்பழம், நாவல், இலந்தை,

வெள்ளரிபழம், கிருநிபழம், பப்பாளி பழம், எளிமிச்சை, 

சாத்துக்குடி, .பலா.என ஏராளமான பல வகையான பழங்கள், 

சத்து மிகுந்தவை, மலிவானவை. 

தற்போது நஞ்சு உள்ளடக்கிய மலிவான மஞ்சள் வாழைப்பழம் 

மலிவாக கிடைக்கிறது. விலை குறைவாக இருப்பதால் அனைவரும் உண்கின்றனர். 

அவைகளை சாப்பிட்டு பலவித வயிற்றுக்கோளாறுகளினால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

நம் நாட்டில் விளையும்,பேயன், மொந்தன்,கற்பூர வாழை, ரஸ்தாளி  செவ்வாழை, ஏலக்கி , மலைவாழை போன்ற எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட நாட்டு  வகை வாழைப்பழ வகைகளை உண்டால் உடல்நலமும் நன்றாக இருக்கும். 

ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். 

4 கருத்துகள்:

  1. சமீபத்தில் ஒன்று கேள்விப்பட்டேன். பழமுதிர்சோலை போன்ற பெரிய கடைகளில் மாதக்கணக்கில் பெரிய குளிரூட்டப்பட்ட கிடங்குகளில் காய்கறிகளும், பழங்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்குமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.அங்கு பழங்களை பாலிதீன் பைகளில் போட்டு குளிர் சாதனpettigalil வைத்து விற்கப்படுவதால் அவைகளை வீட்டிற்கு கொண்டு வந்து பார்த்தால் பல அழுகி அல்லது சத்தின்றி இருப்பது கண்கூடு. அங்கு பழங்களை வாங்குவதை விட நடைபாதைகளில் வண்டிகளில் வைத்துவிற்கப்படும் பழங்களை வாங்குவதே சிறந்தது. நல்லதரமான பழங்கள் நமக்கு குறைந்த விலையில் கிடைப்பதுடன் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நாம் உதவுவதாகவும் அமையும்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. முக்கியமாக கடன் அட்டைகள் வைத்திருப்பவர்களிடமும், வீட்டிலிருந்தே கைபேசி மூலம் பொருட்களை வாங்குபவர்களிடமும் பண திமிர் அதிகரித்துவிட்டது. தெருவில் அன்றாடம் சிறிய அளவில் முதலீடு செய்து புதிய பொருட்களை வாங்கி நடைபாதைகளில் விற்பவர்களுக்குஆஆதரவு தருவது கிடையாது. அங்கு நாம் நல்ல பொருட்களை பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கலாம். ஆனால் பெரிய நிறுவனங்களில் அந்த வசதிகள் கிடையாது.அவர்கள் திரையில் காட்டுவது ஒன்று.அனுப்புவது ஒன்று. அதிக விலை, மற்றும் பல வரிகள், சேவை கட்டணம். போன்று கொள்ளை அடிக்கிறார்கள்.இவர்களிடம் எந்த பேரமும் பேச இயலாது. இந்த சோம்பேறித்தனம் ஒழியவேண்டும்.நம்மை சுற்றியுள்ளவர்கள் நன்றாக இருந்தால்தான் நாமும் நாடும் நன்றாக இருக்கும்.நடைபாதை ஏழை மக்கள் அதிக லாபம் வைத்து விற்பதில்லை. அப்படி இருந்தும் அவர்கள் தன்னிடம் வாங்குபவர்களுக்கு. விலை குறைத்து வழங்க அனுமதிக்கிறார்கள்.
      உடனே சிலர் நடைபாதை கடைகளில் எடை குறைத்து ஏமாற்றுகிறார்கள் என்று மேட்டுக்குடி வர்க்கம் ஒரு குற்றச்சாட்டை கூறும் .அவ்வாறு செய்பவர்கள் ஒரு சிலரே. அது கூட அவர்களை மற்றவர்கள் ஏமாற்றுபவர்களும்,அவர்களிடமிருந்து பிடுங்கி தின்னும் மாமூல் மற்றும் கந்து வட்டி வசூலிக்கும் அட்டைகள்தான் காரணம்.

      நீக்கு