இசையும் நானும் (284)-திரைப்படம் படிக்காத மேதை (1960)
பாடல்:: ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
MOUTHORGAN VEDIO-284
Year: 1960
Movie: Padikkatha Medhai
இசை-கே .வி .மஹாதேவன்
பாடியவர்கள்-டி எம் .சௌந்தரராஜன் -சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
பாடல்-கண்ணதாசன்
Movie: Padikkatha Medhai
இசை-கே .வி .மஹாதேவன்
பாடியவர்கள்-டி எம் .சௌந்தரராஜன் -சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
பாடல்-கண்ணதாசன்
(F) ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
(M) ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை ..உருப்படியில்லை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை ..உருப்படியில்லை
(F) ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
(M) படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான்
ஒருவன் படுக்கையிலே முள்ளை வைத்து பார்த்து மகிழ்ந்தான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான்
ஒருவன் பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான்.
காவல் இருந்தான்
ஒருவன் படுக்கையிலே முள்ளை வைத்து பார்த்து மகிழ்ந்தான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான்
ஒருவன் பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான்.
காவல் இருந்தான்
(F) ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
(M)பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்குமேல் கண்களைப்போல் காத்து வளர்த்தார்
அதை பிள்ளைக்குமேல் கண்களைப்போல் காத்து வளர்த்தார்
(F)உண்மை அன்பு சேவை என்ற மூன்றும் கொடுத்தார்
அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்
தானும் இருந்தார்.
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்
தானும் இருந்தார்.
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
(M) சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் ஒருபாரமும் இல்லை
நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா
தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா
நாய்கள் மேலடா
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
கேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குஉங்களை ஒரு நிகழ்ச்சி செய்து தரச் சொல்லி டெல்லிக்கு (தானே?) அழைத்திருந்தார்களே? சென்று நிகழ்ச்சி நடத்தினீர்களா?
அவர்களுக்கு அப்போது தோன்றிய விருப்பம்
நீக்குமனதில் எந்த எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்வதில்லை
நான் எதையும் விரும்புவதில்லை
நான் எங்கும் செல்வதில்லை.
எனக்கு என் மனதில் தோன்றியதை செய்கிறேன்.
அதை தாண்டி வேறு எதையும் சிந்திப்பதில்லை
.எந்த ஆசைகளையும் அண்ட விடுவதில்லை.
அதனால் நிம்மதியாக இருக்கிறேன்
பிடித்தவர்கள் என் இசையை ரசிக்கட்டும்
என் கடன் முயற்சி செய்வதோடு சரி...
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு
பதிலளிநீக்குபாடலும் கருத்துக்களும் அருமை. அதனால் 58 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த பாடலை இசைக்க தேர்ந்தெடுத்தேன்
நீக்குஅருமை
பதிலளிநீக்குThanks
நீக்கு