சனி, 17 மார்ச், 2018

இசையும் நானும் (283)-திரைப்படம் ஆட்டோகிராஃப் (2004) பாடல்:: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

இசையும் நானும் (283)-திரைப்படம் ஆட்டோகிராஃப் (2004)

பாடல்:: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே






MOUTHORGAN VEDIO-283




ஒவ்வொரு பூக்களுமே

MovieAutographMusicBharathwaj
Year2004Lyrics
SingersK. S. Chithra



ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்ற எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஓரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு





2 கருத்துகள்: