ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

இசையும் நானும் (288)-திரைப்படம்-பணம் படைத்தவன் பாடல்:: கண் போன போக்கிலே

இசையும் நானும் (288)-திரைப்படம்-பணம் படைத்தவன் 

பாடல்:: கண் போன போக்கிலே 


MOUTHORGAN VEDIO-288

kan pona pokkile kaal pogalama lyrics માટે છબી પરિણામ
Movie Name : 

பணம் படைத்தவன் 

Singers:T.M.Soudhar rajan
Music Director:M.S.Viswanathan
Lyricist:Vaali
Year of release:1965

கண் போன போக்கிலே கால் போகலாமா 
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா 

கண் போன போக்கிலே ....

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் 
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் 
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் 
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் 

கண் போன போக்கிலே ....

பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம் 
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் 
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் 
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் 

கண் போன போக்கிலே ...

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் 
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் 
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் 
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் 
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் 

கண் போன போக்கிலே .... 1 கருத்து: