அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் (பகுதி-3)
மனதை அடக்கவும் வேண்டாம்
அதன் செயல்பாடுகளில்
தலையிடவும் வேண்டாம்
அது இறைவனிடமிருந்து வெளிப்பட்டுள்ளது
வெளிப்பட்ட பிறகு அவனை நோக்கியே
ஓடிக்கொண்டிருக்கிறது.
அதற்க்கு ஓய்வும் இல்லை.
ஓய்ச்சலும் இல்லை.
அதுபோலத்தான் ஒவ்வொரு ஜீவனும்
இறைவனிடமிருந்து புறப்பட்ட ஒவ்வொரு ஜீவனும்
ஓர் உயிரிலிருந்து தொடங்கி நாம் சாதாரணமாக
அறிந்த ஆறறிவு படைத்த மனிதன்(?) வரை
பல்வேறு உடல்களில் புகுந்து அதில் பல அனுபவங்களை அடைந்து
அதன் பதிவுகளை எல்லாம் மனதில் சேமித்து வைத்துக்கொள்ளுகிறது.
நாம் மனிதனாக பிறவி எடுத்ததும் நம் கண் முன்னே
அவைகள் இடைவிடாமல் வந்து போய்க் கொண்டிருக்கின்றன.
எப்படி என்றால் நாம் வீடு மாடியில் உட்கார்ந்துகொண்டு சாலையில் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகளையும், மனிதர்களையும், பிராணிகளையும் இன்னும் எத்தனையோ சமாச்சாரங்களையும் வெறுமனே
பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதை போல
வெறுமனே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் நமக்கு எந்த
பாதிப்பும் ஏற்படுவதில்லை.
அவைகள் நம் மனதில் சலனத்தை ஏற்படுத்தினால் மட்டுமே நம்மை அவைகள் பாதிக்கும்.
நாம் நம்மை போக்குவரத்து போலீஸ்காரனாக நினைத்துக் கொண்டு தெருவில் இறங்கினால்தான் பிரச்சினை ஆரம்பிக்கும்.
மனமும் அதுபோலத்தான். அதன் செயல்பாடுகளை எல்லாவற்றையும் மூடிக்கொண்டு வேடிக்கை பாருங்கள்.
அப்போது அது நம்மை ஒன்றும் செய்யாது. அது பாட்டிற்கு அது அதன் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும். நாம் அதை அடக்க வேண்டி எந்த முயற்சியும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. (தொடரும்)

பற்றுக பற்றற்றார் பற்றினை..
பதிலளிநீக்கு