செவ்வாய், 27 ஜூன், 2017

இசையும் நானும் (196) திரைப்படம் -(படகோட்டி) (1964) பாடல்:தரை மேல் பிறக்க வைத்தான்

இசையும் நானும் (196) திரைப்படம் -(படகோட்டி) (1964)

பாடல்:தரை மேல் பிறக்க வைத்தான் 


பாடல்:  வாலி 

இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி 
MY MOUTHORGAN VEDIO 
குரல்: டி எம் சௌந்தரராஜன் 
வரிகள்: வாலி 

இசை-விஸ்வநாதன்-ராமமூர்த்தி 

தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத் 
தண்ணீரில் பிழைக்க வைத்தான் 
கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக் 
கண்ணீரில் துடிக்க வைத்தான் 
தரை மேல் பிறக்க வைத்தான் 

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை உறவைக் கொடுத்தவர் அங்கே 
அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் இங்கே 
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு (2) 
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை 
இதுதான் எங்கள் வாழ்க்கை 

(தரை மேல்) 

கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ 
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ 
ஒருநாள்  போவார் 
ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் (2) 
அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் 
ஊரார் நினைப்பது சுலபம் 

(தரை மேல்)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக