இசையும் நானும் (192) திரைப்படம் -நெஞ்சில் ஓர் ஆலயம் (1962)
பாடல்:முத்தான முத்தல்லவோ
MY MOUTHORGAN VEDIO
MY MOUTHORGAN VEDIO
Music: M.S.Viswanathan, T.K.Ramamoorthy | Lyricist: Kannadasan | Singers: P.Susheela
திரைப்படம் -நெஞ்சில் ஓர் ஆலயம்
இயக்குனர்- ஸ்ரீதர்
பெ: முத்தான முத்தல்லவோ முதிர்ந்து
வந்த முத்தல்லவோ,
கட்டான மலரல்லவோ கடவுள்
தந்த பொருளல்லவோ,(முத்தான)
முத்தான முத்தல்லவோ.....
பெ: சின்னஞ்சிறு சிறகு கொண்ட
சிங்கார சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து
வரும் சிரிப்பல்லவோ,{செம்மாதுளை)
மாவடு கண்ணல்லவோ மைனாவின்
மொழியல்லவோ,(மாவடு)
,
பூவின் மணமல்லவோ பொன்போன்ற
முகமல்லவோ...,(முத்தான)
முத்தான முத்தல்லவோ....
பெ: வாழாத மனிதரையும் வாழ
வைக்கும் சேயல்லவோ,
பேசாத தெய்வத்தையும் பேச
வைக்கும் தாயல்லவோ,(வாழாத)
தாழம்குடையல்லவோ தள்ளாடும்
நடையல்லவோ,
மாலை பொழுதல்லவோ வண்டாடும்
செண்டல்லவோ..(முத்தான)
முத்தான முத்தல்லவோ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக