இசையும் நானும் (139)
இசையும் நானும் (139) Mouthorgan song-தமிழ் song-Film நெஞ்சில் ஓர் ஆலயம் by
TR PATTABIRAMAN
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
ஆயிரம் வாசல் இதயம் அதில்
ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 139வது காணொளி
இசையும் நானும் என்னும் தொடரில்
என்னுடைய 139வது காணொளி
என்னுடைய 139வது காணொளி
தினம் ஒரு பாடலாக வாசித்து இணைக்கிறீர்கள் போல... நிறைய எண்ணிக்கை தெரிகிறது. நலம்தானே ஸார்? உங்கள் கால் முற்றிலும் குணமாகி இருக்கும் என்று நம்புகிறேன்.
பதிலளிநீக்குஒவ்வொரு பாடலும் பல மாத பயிற்சியும் விடா முயற்சியும்.20 அல்லது 30 முறை ரெகார்டிங் செய்வேன் ,பிறகு காணொளிக்கான படங்களை தேர்வுசெய்வேன்,பாடல் வரிகளை காணொளி இடையே புகுத்துதல்,நான் பதிவு செய்த பாடலை எடிட் செய்து காணொளியில் இணைத்தல் ஆகியவை பல மணி நேரங்களை விழுங்கும். எல்லாம் 3 நிமிடம் அல்லது 4 நிமிடம் ஓடும் பாடல்களுக்காக இவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது.
பதிலளிநீக்குஎனக்கு பல உடல் நல பிரச்சினைகள் இருந்தாலும். என்னுள் இருக்கும் அக்னி எதை வேண்டுமானாலும் என்னை சாதிக்க வைக்கும்.
என்னுடைய கால் குணமாகிவிட்டாலும் சிறிய தூரம் வரைதான் நடக்கமுடியும். நீண்ட நேரம் நிற்கவும் முடியாது, உட்காரவும் முடியாது
இருந்தாலும் இறைவன் என் மீது இந்த அளவு கருணை காட்டியிருக்கிறானே என்பதில் எனக்கு திருப்திதான்.
நீங்கள் அதை இன்னும் நினைவில் கொண்டு என்னை நலம் விசாரித்திருப்பதற்கு நன்றி. அந்த சம்பவம் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு மறுபிறப்பு
.
நான் என்னுடைய 66 வைத்து வயதில் மவுத்தார்கனை பயிற்சி செய்ய தொடங்கினேன். மூன்று மாதம் ஒவ்வொரு நாளும் 4 அல்லது 5 மணி நேரம் பயிற்சி செய்தேன். இரண்டு ஆண்டுகளுக்குள் 140 பாடல்களை வெளியிட்டுள்ளேன். அதில் கர்நாடக இசை பாடல்கள், தமிழ் ,தெலுங்கு,மலையாளம், ஹிந்தி திரைப்பட பாடல்கள் அடங்கும்.
நானே பாடல்களை இயற்றி சில பாடல்களை பாடியுள்ளேன், மலையாளம், கன்னடம், மற்றும் இரண்டு ஆங்கில பாடல்களையும் பாடியுள்ளேன்.
இந்த உலகம் பாராட்டும் அளவிற்கு எனக்கு திறமை கிடையாது. அதற்காக நான் முயற்சி செய்யாமல் இருக்க முடியாது. எனவே எனக்கென்று ஒரு தனி வழியை தேர்ந்தெடுத்துக்கொண்டேன் இதில் எனக்கு போட்டியாளர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. அதனால் அனாவசியமான மனஉளைச்சலுக்கு ஆளாக்கவில்லை. என் வழியில் நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன் .
சுய புராணத்திற்கு மன்னிக்கவும். மனதில் உள்ளதை ஒரு சுவற்றிடமாவது சொல்லி ஆறுதல் அடையவேண்டும் என்று சொல்லுவார்கள். இப்போது என் மனம் ஆறுதல் அடைந்து விட்டது.
இந்த உலகம் மறந்துபோன பழைய சாகா வரம் பெற்ற பல பாடல்களை என்னுடைய காணொளியில் கொண்டு வந்துள்ளேன். இன்னும் நான் நிறைய பாடல்கள் வெளி உலகிற்கு கொண்டு வருவேன்.
பயிற்சியால் முடியாததே இல்லை என்று தெரிகிறது. நீண்ட பதிலுக்கு நன்றி. நீங்கள் திருச்சியில்தானே இருக்கிறீர்கள்?
பதிலளிநீக்குநான் சென்னையில்தான் இருக்கிறேன். என் மனம் எனக்குள்ளேயே உள்ளது. நான் எங்கும் வெளியே செல்வதில்லை. எனக்கு இந்த நிமிடம் என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் செய்துகொண்டு அமைதியாக இருக்கிறேன்.
பதிலளிநீக்கு