புதன், 27 ஜூலை, 2016

ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகை


ஆடி கிருத்திகை 




முருகா என்ற நாமம் தன்னை
முக்காலமும் ஓதி வந்தால்
எக்காலமும் இவ்வுலகில்
தப்பாமல் தகைமையுடன்
இன்பமாக வாழலாம்

அறவழியில் பொருளீட்டி
அற வழி சார்ந்த வாழ்வில் நின்று
அரோகரா அரோகரா என்று
அவன் பெயர் கூறுவோர்க்கு
அடைய இயலாப் பேறு என்று
ஏதும்  இல்லை என்பதை
உணர்ந்திடுவீர்.

அன்போடு அவன் நாமம்
அனுதினமும் ஓதிவந்தால்
அல்லல் தரும் அகந்தைதனை
அறவே அழித்திடுவான்



செந்தூர் கடற்கரையில் குடி கொண்ட முருகன்
துன்பக்  கடலில் வாடும் பக்தர்தனை
கரையேற செய்து வாழ்வில் இன்பம் சேர்ப்பான்


குன்று  தோறாடும் குமரனவன்
குன்றுபோல் குவிந்து நிற்கும்
நம் பொல்லாத வினைகள் தன்னை
பொசுக்கி அழித்திடுவான்

நல்லதோர் இந்நாளில் மாலவனின்  மருகன் தன்னை
உளமார உருகி வேண்டி உன்னதமான வாழ்வு பெற்று
உலகினில் வாழ்ந்திடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக