ஞாயிறு, 17 ஜூலை, 2016

சத்சங்கமும் ஜீவன் முக்தியும்

சத்சங்கமும் ஜீவன் முக்தியும்

சத்சங்கமும் ஜீவன் முக்தியும் 





சத்சங்கத்தில் ஒரு ஜீவன்
தன்னை இணைத்துக்கொண்டால்
அது முக்தியை அடைவது திண்ணம்
என்கிறார் ஆதி சங்கரர். என்பதை
அனைவரும் அறிவர்.

ஸத்  என்றால் உண்மை
உண்மைதான் இறைவன்
பொய்  என்பதுதான் மாயை
அறியாமை எனப்படுகிறது

கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய் என்ற
வாக்கியத்தை அனைவரும்
கேட்டிருக்கிறோம்

அந்த உண்மைப் பொருள் நமக்குள்ளே இருக்கிறது
அதை நமக்குள்ளே சென்றுதான் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்  என்று பகவான் ரமணர் கூறுகிறார்.

ஆனால் அதை நாம் வெளியில்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.
அதே சமயம்  உள்ளே இருக்கின்ற அந்த உண்மைப் பொருள் நம் முன்னே வெட்ட வெளியாகவும் நம் முன் பரந்து  கிடக்கின்றது
என்னே விசித்திரம் . அதுதான் உண்மை.

ஆனால் ஒவ்வொருவரும் உலகியல்
நோக்கில் ஒவ்வொருவிதமாக
பொருள் கொண்டு உண்மையை
அறியாமல் அலைகின்றோம்

அந்த உண்மைப் பொருளை உணர்ந்தவர்கள்
மிகவும் அரிதே . அவர்களை நாம்தான் தேடி
பிடித்து நம் அறியாமையை போக்கிக் கொள்ள  வேண்டும்

அதற்கு வாய்ப்பில்லை எனில் அப்படிப்பட்ட மஹான்களின்
உபதேசங்களையும் ,வாழ்க்கை சரிதங்களையும் திரும்ப திரும்ப படித்து
பிறர் சொல்ல கேட்டு நம் மனதை அவர்கள்பால்  செலுத்த முயற்சி செய்ய வேண்டும்

அவ்வாறு முயற்சி செய்தால் மஹான்களின் ஆசிகள்
நம்மை தேடி வரும் அல்லது நம்மை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக