சிந்தியுங்கள் அன்பர்களே !
சிந்தியுங்கள் அன்பர்களே !
பரியாய் உருவெடுத்து அதன்மேல்
பரிமேலழகனாய் பாரிலுள்லோரை
காக்க பவனி வந்தவனும் அவனே
உறியில் வைத்திருந்த வெண்ணையை
உள்ளங்கைகளால் எடுத்து ஆயர்குல
சிறுவர்களோடு திருடி உண்டு மகிழ்ந்த
கோகுலக் கண்ணனும் அவனே
கரிய யானையை காலன் வடிவில்
வந்த முதலையின் பிடியிலிருந்து
காத்தருளிய ஹரி பகவானும் அவனே
பக்தனைக் காக்க நரிகளையெல்லாம்
பரிகளாக மாற்றிஅருள் செய்த
பரமசிவனும் அவனே
கல்லையே கடவுளாக கண்டு தன்
கண்ணை கொடுக்க வந்த கண்ணப்பனுக்கு
தன்னையே கொடுத்தருளிய
காளத்திநாதனும் அவனே
விண்ணும் மண்ணும் படைத்தவன்
நம் கண்ணுக்கு கண்ணாய் இருப்பவன்
மண்ணிலும் விண்ணிலும் நம்மை விட்டு
என்றும் பிரியாமல் இருப்பவன்
என்று எல்லாமாய் அவன் இருக்கையில்
எல்லாம் நான்தான் என்ற எண்ணம்
ஏன் வந்தது ?
சிந்தியுங்கள் அன்பர்களே !
நம் இதயம் என்னும் அரங்கத்தில்
நடனமாடுபவனும் சிதாகாசத்தில்
மெடல் ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்
வீற்றிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும்
நம் சிந்தையில் எப்போதும் இருந்தால் போதும்
சித்தம் தெளிந்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக