புதன், 13 ஏப்ரல், 2016

துர்முகி ஆண்டே வருக! வருக !

துர்முகி ஆண்டே வருக! வருக !

துர்முகி ஆண்டே வருக! வருக !




பரிமேலழகர் பவனி வரும் ஆண்டு
பாரிலுள்லோரின் பவங்களை
தீர்க்கும் ஆண்டு

பல்லாண்டு பாடி பரவிய பரமனின்
புகழ் கூறும் நல்லோர்கள்
போற்றும் ஆண்டு

உள்ளத்தில் நல்லதோர் எண்ணங்களை
விதைத்து நன்மைகளை நானிலத்தோருக்கும்
நன்மைகளை நல்கிடும் ஆண்டு

தீய எண்ணம் கொண்டோர் மனங்களில்
நல்லதோர் மாற்றத்தை விளைவித்து
நற்செயல்கள் ஆற்றிட தூண்டும்
துர்முகி ஆண்டே வருக! வருக !

அன்பில்லா மனிதர் உள்ளங்களில்
அன்பு பயிர் தழைத்து தழைத்து
செழித்து வளர்ந்து அகிலமெல்லாம்
இன்பம் நிறைந்திட செய்யும்
துர்முகி ஆண்டே வருக! வருக!

பகையெல்லாம் உறவாக மாறிட
ஏற்ற தாழ்வுகள் நீங்கிட

பொறாமை சுயநலம் போன்ற
தீய குணங்கள் நீங்கிட

அறியாமை இருள் விலகி
ஞான ஓளி தோன்றிட

ஞான கடவுளாம் பரிமேலழகரை
போற்றிபணிந்திடுவோம்

பாரில் ஆனந்த வாழ்வு
அடைந்து மகிழ்ந்திடுவோம்

1 கருத்து:



  1. podhuvan sengai
    2:44 AM (4 hours ago)

    to me
    துன்முகி - தமிழ்
    துர்முகி - வடமொழி

    துன் என்ற சொல்லும் வடமொழிதான் (துன் மார்க்கம் )என்று தோன்றுகிறது .எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒலியே மொழி.
    முறையாக கையாண்டால் முன்னேற்றம் தரும். தவறாக கையாண்டால் தன்னலம்தான் தலைதூக்கி மற்ற மொழியினர்மீது
    வெறுப்பை விதைத்து அழிவைத்தான் அறுவடை செய்யும் .மொழியின் பெயரால் நடந்த வன்முறைகளும், அழிவுகளுமே இதற்கு சான்று. எல்லா இனங்களும் மனித இனம் என்னும் பொதுவான இனத்திற்குள் ஒன்றிணைந்து இன்பமாக வாழ கற்றுக்கொள்ளவேண்டும். பிரிந்தால் ஒன்று சேர்வது எளிதல்ல

    பதிலளிநீக்கு