செவ்வாய், 5 ஏப்ரல், 2016

கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு

கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு

கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு 
அனுதினமும் காலையில் எழுந்திடு
கருணை தெய்வம் கண்ணனை நினைந்திடு
கவலைகள் உன்னை அணுகாது மனமே

மணம்  வீசும் மலர்களின் வாசம்
நுகரட்டும் உந்தன் சுவாசம்
அது உன் உள்ளத்தில் உருவாக்கும்
இன்பம் தரும்  இனிய பிரகாசம்

அனைத்தையும் அளிக்கும் காமதேனு
அவளை "அம்மா" என்றழைக்கும்
அகிலத்தை வாழ வைக்கும் பசுவை
அன்போடு வணங்குவோம்

அம்மையப்பனை அரவு மீது  பள்ளி கொண்டானை
அல்லும் பகலும் நம்மை  அரவணைத்துக் காப்பானை
அவனியெங்கும் பவனி வந்து அருள் செய்யும்
ஆதவனை பணிந்து அருள் பெறுவோம்.

அன்பின் வடிவாய் இறைவன் நம்
அனைவரின் அகத்தினில் வீற்றிருக்கையில்
அதை உணராது அல்லல் தரும் வழியை நாடி
ஆயுள் முழுதும்  அலைகின்றோம்

நல்லதோர் வாழ்வை தரும்
நற்குணமதை நாளும் கைகொள்வோம்
தன்னலம்  விடுத்து நானிலத்து மக்களும்
நலமாக வாழ நான்மறை தந்த
நாயகனை வேண்டிடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக