வெள்ளி, 11 மார்ச், 2016

மங்களம் அருள்வாள்

மங்களம் அருள்வாள்


மங்களம் அருள்வாள்
வண்ண ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


மங்களம் அருள்வாள்
மாலவன் அரசி
மன சோர்வகற்றி
மகிழ்வான வாழ்வு
தருவாள்  தாமரை மேல்
அமரும் தேவி (மங்களம்)

அழிவைத் தரும்
அலை பாயும் மனதை
நல்ல செல்வம் பொழியும்
விளை நிலமாக்குவாள்
வெள்ளி நிலவின் சோதரி (மங்களம்)

அவள் தாளினை
அன்புடன் நினைந்து
அனுதினம் வணங்குவோர்  தமக்கு
ஆறாத் துயர் அகற்றி அழியாப்
புகழை அருளும்  அழகிய தேவி  (மங்களம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக