வியாழன், 10 மார்ச், 2016

தியானம் என்றால் என்ன ?

தியானம் என்றால் என்ன ?

தியானம் என்றால் என்ன ?(1)

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் என்ன என்று

அறிந்துகொள்ளாமலே இன்று தியானத்தை

பற்றி மணிக்கணக்காக ,மாதக்கணக்காக ஏன்

வருடக்கணக்காக பலர் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


தியானத்தில் பல முறைகள் உருவாக்கப்பட்டு எந்த

முறையிலும் தியானத்தின் வெற்றியை அடைய முடியாமல்

குழம்பிக்கொண்டிருப்பவர்கள் கோடானுகோடி.


அதை வைத்து காசு பார்க்கும் கேடிகளும் கோடி.


சரி .நேரடியாக  விஷயத்திற்கு வருவோம்.


தியானம் என்றால் எப்போதும், எந்நிலையிலும் 

விழிப்போடு இருப்பது .


ஆனால் இன்று எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கப்படுவது

என்னவென்றால் எல்லாற்றையும் மூடிக்கொண்டு

எல்லாவற்றிலிருந்தும் விலகி தனியே போய்

அடங்காது திரியும் மனதை அடக்க முயல்வது .


முடிவில் கிடைப்பது தோல்வி ஒன்றுதான்


இந்த தத்துவத்தை சொல்லிக் கொடுப்பவன்

பல கோடிகளுக்கு அதிபதியாகி மற்றவர்களை

அவனுக்கு அடிமையாக்கி கொள்கிறான்.  (இன்னும் வரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக