திங்கள், 14 மார்ச், 2016

பொன்மகள் பாதம்தன்னை......

பொன்மகள் பாதம்தன்னை......

பொன்மகள் பாதம்தன்னை.....




                                                      ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

மதுசூதனின் துணைவி
தாமரை செல்வி

அவளை வணங்கி பேரின்பம்
அடைவதை விடுத்து மதி கெடுத்து
மரணக் குழியில் விரைந்து தள்ளும்
மதுக் குவளையில் இன்பம்
தேடி அழிகின்றார் மூடர் பலர்

அவள் அருள் இருந்தால் போதும்
பொருள் அனைத்தும்
தானே வந்து சேரும்.

இல்லையேல் உள்ளத்தில் மருளும்
இருளும் தங்கி அச்சமும் அறியாமையும்
நம்மை சூழ்ந்து அழிவுக்கு அடிகோலும்

அவளை உள்ளத்தில் இடம் கொண்டால்
என்றும் வாராது இடர்

அவளை மனதார அன்புடன் நினைத்தால் போதும்
மாளாத துன்பமனைத்தும் மாயமாக போகும்

எதுவும் தனக்கு இல்லையே
என வருந்துதல் வேண்டா
எல்லாவற்றையும் கேளாமலேயே
தந்தருளும் தனலக்ஷ்மியை ஆலயத்தில்
சென்று தரிசியுங்கள்
தங்கு தடையின்றி
பெருகும் செல்வம்

அவள் தந்த செல்வம் இந்த உலக இன்பங்களை
துய்க்க மட்டுமல்ல
இல்லார்க்கு தருமம் அளித்து
நம் கருமங்களை போக்கவும் உதவும்
என்பதையும் மறவாதீர்.

இறைவன் இல்லை என்ற புரட்டர்களின்
கூற்றை சற்றும் காது கொடுத்து கேளாதீர்.

கூற்றுவன் வந்து நம்மை
கூட்டிச் செல்லுமுன்
மனம் ஒன்றி போற்றி துதிப்போம்
பொன்மகள் பாதம்தன்னை இம்மையிலும்
மறுமையிலும் கவலையின்றி ஆனந்தமாய் வாழ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக