திங்கள், 4 நவம்பர், 2013

இது தேவையா?

இது தேவையா?

இது தேவையா?
இதற்குப் போய் இவ்வளவு கோடி ரூபாய்
செலவு செய்ய வேண்டுமா?இந்தியா வறுமை நாடு .
இங்கு உள்ளவர்களுக்கு
உணவு இல்லை, இருப்பிடம் இல்லை,
உறங்க இடமில்லை,சுகாதார வசதி இல்லை.
இப்போது இந்த திட்டத்திற்காக 450 கோடி  ருபாய்
செலவு செய்ய வேண்டுமா?

என்று புலம்பி தீர்க்கின்றன .
சில சுய மரியாதையில்லா பிண்டங்கள்.

 

எல்லாம் இந்த செவ்வாய்  கிரகத்திற்கு
 நம்முடைய விஞ்ஞானிகள் ஏவப்போகும்
ஆராய்ச்சிக்கான செயற்கைக் கோளுக்கு
ஆகும் செலவைப் பற்றிதான்
இப்படி புலம்பி தீர்க்கின்றன சில ஜன்மங்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து
 67 ஆண்டுகள் கடந்துவிட்டது. 

ஆண்ட அரசுகள் மக்களின் 
வறுமையை போக்க 
பல லட்சம் கோடிகளை 
செலவு செய்து விட்டது. 

ஆனால் வறுமை
இன்னும் தீர்ந்த பாடில்லை.

பாடுபடுபவனின் பாடு அப்படியேதான் 
செக்கு மாடுபோல் அங்கேயே 
சுற்றிக்கொண்டிருக்கிறது. 

ஆனால் இந்தலட்சம் கோடிகள் 
 பெரும்பகுதி கேடிகளிடம் 
போய்  சேர்ந்து விட்டது 

அதை அவர்கள் பத்திரமாக ச்விச்ஸ் 
வங்கியில் வைத்து பாது காத்து வருகிறார்கள். 
அடுத்த பிறவியில் அதை எடுத்து கொள்ளலாம்  என்று. 

அது எவ்வளவு என்று கண்டறியவும், 
அதை நம் நாட்டிற்கு கொண்டுவரவும்
 யாருக்கும் நாதியில்லை. 

ஆண்டுதோறும் புதிதிதாக நோய்கள்
 உண்டாவதைபோல் புதிதாக ஊழல்கள்
புற்றீசல்போல் நிற்காது
வந்து கொண்டிருக்கின்றன.

 சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம்,
லட்சம் என்ற நிலை
 மாறி லட்சம் கோடி என்று
முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

இவைகளை கணக்கில் வைத்து பார்க்கும்போது
இதுபோன்ற திட்டங்களுக்கு ஆகும் செலவு கணக்கில்
கொள்ள தேவையே இல்லை

நம் நாட்டில் ஊழல்
இல்லாத துறையே கிடையாது.

ஊழல் செய்யாத
அரசியல்வாதிகளே கிடையாது.

நம் நாட்டின் மானத்தை ஒவ்வொரு நாளும் 
உலக அரங்கில் கப்பலேற்றிக்கொண்டிருக்கும்
நம் அரசியல்வாதிகளை விட கோடி மடங்கு 
நம் விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

அவர்கள்தான் நம் நாட்டின் பெருமையை 
உலகத்தை தாண்டி அண்டங்களிலும்
 பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். 

தமிழ் நாட்டில் ஒரு மாதத்திற்கு
நம்முடைய குடிமகன்கள் 2000 கோடி ரூபாய்க்கும்
அதிகமாக குடித்து ஒழிக்கிறார்கள்.

வறுமை என்று ஒரு வரையறையை 
என்றும் வகுக்க முடியாது.
அது ஒரு பேத்தல். கணக்கு

இருப்பவனும் இல்லை என்கிறான். 
இல்லாதவனும் இல்லை என்கிறான். 
வறுமையை என்றும் ஒழிக்க முடியாது.

எல்லா பணக்கார நாடுகளிலும்,பிச்சைக்காரர்களும்,
 நாடோடிகளும், ஏழைகளும், நடைபாதையில் 
வசிக்கும் மக்களும்  உண்டு. 

எனவே நம்முடைய விஞ்ஞானிகளின்
முயற்சியை மனம் திறந்து பாராட்டுவோம்.
வெற்றி பெற வாழ்த்துவோம். 

3 கருத்துகள்:

  1. செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா செயற்கைகோள்; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; நீண்டநாள் கனவு நிறைவேறியது-
    செய்தி -

    விஞ்ஞானிகள் அனைவருக்கும் அரசில் பலர் ஊழல் செய்தாலும் இதுபோன்ற நல்ல செயல்களுக்கு ஊக்கம் தந்து அனுமதித்த நம் பிரதமருக்கும் நன்றிகள் பல .

    பதிலளிநீக்கு