வியாழன், 7 நவம்பர், 2013

வினோபா அடிகள்(பகுதி -5)

வினோபா அடிகள்(பகுதி -5)

காந்தியடிகள் விநோபாவின் 
சிறப்புகளை எடுத்துரைத்தார்,



வினோபா சிறந்த சம்ஸ்க்ருத புலவர்

ஆசிரமத்தில் சமையல் வேலையிலிருந்து
தோட்டித்  தொழில் வரையிலும்
சிறப்பாக பணி செய்தவர்

பிறவி மாணவர்
பிறவி ஆசிரியர்

தம் மனதிலிருந்து தீண்டாமையை
முழுவதுமாக ஒழித்தவர்

வகுப்பு ஒற்றுமையில்
தீவிர நம்பிக்கை உடையவர்.

 இஸ்லாமிய சமயத்தை நன்றாக
புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக
ஒருவரிடம் அரபுமொழியைக் கற்றார்

திருக்குரானை மூலத்திலேயே படித்தவர்

.வினோபாவிற்கு ஏராளமான மாணவர்களும்
 சீடர்களும் தோழர்களும்  உண்டு.

அவருக்கு இதைவிட வேறென்ன
தகுதிகள் வேண்டும் என்றார் காந்தியடிகள்

1948 ஜனவரி 30இல்
மகாத்மா காந்தி காலமானார்.



தலைவர் ராஜேந்திர பிரசாத்தும்
 நிர்மாணத் துறையை சேர்ந்த பலரும்
ஒன்றுகூடி  ஆலோசனை நடத்தினார்கள்,.

 மகாத்மா காந்திக்கு நினைவு சின்னம்
எழுப்புவதற்கு ஒவ்வொருவரும்
ஒரு ஆலோசனை கூறினார்கள்.

வினோபா ஒருவரே மகாத்மா காந்திக்கு நாம்
எழுப்ப வேண்டிய நினைவு சின்னம்
சர்வோதய சமுதாயமே என்றார்.



1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் நாள்
ஆந்திர மாநிலத்தில் போச்சம்பள்ளியில்
ஒரு அற்புதம் நிகழ்ந்தது.

அது என்ன?

 நாளை பார்ப்போம்.

(இன்னும் வரும்.)

4 கருத்துகள்:

  1. பதிவு அருமை
    பூமிதான இயக்கம் தந்த வினோபாவே பதிவு அருமை
    அருமை ... சகோ ... கரந்தையாரின் தளம் மூலம் வந்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளும் நல்லதொரு சிந்தனைகளை
      மக்கள் மனதில் விதைக்கவேண்டும்
      என்றுசில ஆண்டுகளாக
      முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்.

      எந்த மொழி பேசுபவராயினும்
      எந்த மதத்தை சார்ந்தவாயினும் மனிதர்கள்
      நல்ல மனிதர்களாக அன்புடன் ஒருவொருக்கொருவர்
      உதவிக்கொண்டு வாழவேண்டும் என்பதே என் பிரார்த்தனை

      எல்லா கோட்பாடுகளிலும்
      ஒரு சில நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது.
      அதை நம் வாழ்வில் பயன்படுத்திக்கொள்வதில்
      அனைவரின் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது.

      அதை விடுத்துஎதை எடுத்தாலும்
      குற்றம் காணும் போக்கில் இன்றைய தலைவர்கள்
      நடந்துகொள்வது எந்த பிரச்சினையையும் தீர்க்காது
      என்பது என் தனிப்பட்ட கருத்து .

      மனம் ஒன்றுபடாவிடில்,
      ஒரு மாற்றமும் விளையாது.

      எதற்கெடுத்தாலும் பொது சொத்துக்களை
      சேதப்படுத்தும் போக்கு கண்ணாடி வீட்டில்
      இருந்து கொண்டுகல்லை
      எறிவதைபோல் உள்ளது
      .
      வருகைக்கும்
      கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு