ஞாயிறு, 30 டிசம்பர், 2018

இசையும் நானும் (343)-திரைப்படம்- பாரதி .... (2000) பாடல்-நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே


இசையும் நானும் (343)-திரைப்படம்- பாரதி ....  (2000) பாடல்-நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

இசை -இளையராஜா 
குரல்:ஹரிஷ் ராகவேந்திரா 
வரிகள்: மஹாகவி சுப்ரமணிய பாரதியார்.

MOUTHORGAN VEDIO-343






நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ சொப்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ வானகமே இளவெயிலே மரச்செறிவே வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ (வானகமே)
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ(நிற்பதுவே) காலம் என்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ(காலம்)
காலம் என்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ

காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ (நிற்பதுவே)

5 கருத்துகள்:

  1. மிகவும் இனிமையான, நான் ரசிக்கும் ஒரு பாடல் இது.கேட்டேன் ரசித்தேன் .
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் பட்டாபி ஸார் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தேவதை அவர்களே. உங்களுக்கும் உங்கள் கணவர் மற்றும் உங்கள் மகளுக்கும் புத்தாண்டுவாழ்த்துக்கள். ஹரிஷ் ராகவேந்திரா என்றவுடன் எனக்கு அவர் பாடிய இந்த பாடல்தான் நினைவுக்கு வரும். இந்த பாடலுக்கு இளையராஜாவின் பின்னணி இசை மனதை உருக்கும் .அதை மவுத்தார்கனில் கொண்டு வர இன்னும் பயிற்சியும் பொறுமையும் தேவை. வரும் காலங்களில் அந்த திறமையை வளர்க்க முயற்சி செய்ய போகிறேன். இந்த ஆண்டில் மட்டும் 78 பாடல்களை மவுத்தார்கனில் இசைத்து வெளியிட்டுள்ளேன். இனி 2019ல் என்ன செய்யப் போகிறேன் என்பது இறைவனில் கையில் உள்ளது. .

      நீக்கு
  2. பதில்கள்
    1. நன்றி.
      ஸ்ரீராம்.புத்தாண்டுவாழ்த்துக்கள்

      நீக்கு
    2. நன்றி ஸார். உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு