திங்கள், 9 ஜூலை, 2018

கண்ணாடியும் உலகமும் நாமும்

கண்ணாடியும் உலகமும் நாமும் 

கண்ணாடியும் உலகமும் நாமும் .
எல்லாம் நாம் யார் என்பதை நமக்கு
காட்டும் கருவிகள்.

கண்ணாடி முன் நாம் நின்றால்
அதில் நம் முன் பகுதியை காணலாம்.

நம் முழு தோற்றத்தையும் காண
நம்மை சுற்றிலும் கண்ணாடிகளை
அமைத்தால் ஓரளவு காணலாம்.

நமக்கு தேவைப்பட்ட மாற்றங்களை நாம்
செய்துகொள்ளலாம்.

உதாரணத்திற்கு தலை முடி கலைந்திருந்தால்
அதை சரி செய்து கொள்ளலாம்.

கண்ணாடி நம்மை பற்றி காட்டும் குறைகளுக்காக
நாம் அதன் மீது சினம் கொள்வதில்லை.
மனம் வருந்துவதில்லை

நம்மை சரி செய்துகொள்ள
முயற்சி செய்கிறோம்.

நம் மனம் எப்படி இருக்கிறது 
அதில் என்ன இருக்கிறது என்பதைக் 
காட்டும் கண்ணாடி நம்மை சுற்றியுள்ள 
உலகில் நம் முன் தோன்றும் மனிதர்கள் மட்டும்தான். 

அவர்கள்தான் நாம் உலகில் நடந்துகொள்ளும்
விதத்தை கூர்ந்து கவனித்து நம் மீது
விமரிசனங்கள் செய்கிறார்கள்.

நம் குறைகளைக் காட்டும் கண்ணாடி மீது சினம், வெறுப்பு
கொள்ளாத நாம் நம் அகத்தை காட்டும் மனிதர்கள் மீது
மட்டும் பகை காட்டுகிறோம்.

நாம் அறியாத நம் அகத்தை நமக்கு
புரிய வைக்கும் மனிதர்களை நாம்
ஏன்  வெறுக்க வேண்டும் ?

குறைகள்  களையப்பட்டால் அது
நமக்கு நன்மைதானே

சிலர் நம்மிடம் குறைகளையே கண்டு நம்மை
எப்போதும் கடுப்பேற்றிக்கொண்டு இருப்பார்கள்.
அது அவர்களின் குற்ற மனப்பான்மை.

 தங்கள் குறைகளை மறைக்க அவர்கள் செய்யும் தந்திரம் அது.
அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சிலர்  பிறரிடம் உள்ள நல்ல அம்சங்களை மட்டும்
வெளிப்படுத்துவார்கள்.
அவர்களிடம் நாம் பழகினால் 
அந்த நல்லகுணம் நமக்கும் வரும்.

சிலர் குறையே சொல்லமாட்டார்கள்
நிறையையும் சொல்லமாட்டார்கள்.

இந்த உலகத்தில் குறைகள் இருக்கத்தான் செய்யும். 
அது என்றும் நிறையாது.

ஆனால் நம் மனதில் குறைகளைகாண்பதை
குறைத்துக்கொண்டு நிறைவைக் காணும்
பாங்கினை வளர்த்துக்கொண்டால்
நம்வாழ்க்கை இன்ப பூஞ்சோலையாக திகழும்.

2 கருத்துகள்:

  1. ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா என்று பாடும் மனம் வேண்டும்.

    பதிலளிநீக்கு