செவ்வாய், 17 ஜூலை, 2018

நம் நாட்டில் ஒழுக்கமும் இல்லை ஒழுங்கும் இல்லை.

நம் நாட்டில் ஒழுக்கமும் இல்லை

ஒழுங்கும் இல்லை. 


உரிமைக்காக போராடும்
கூட்டம் ஒருபுறம்.

தங்களின் உரிமைகளை 
இழந்து வாய் பேசாமல் 
மௌனியாக கூனி குறுகி 
கருகிப் போகும் 
களங்கமில்லா 
வாயில்லா பூச்சிகள் ஒருபுறம். 

எதையும் ஆராயாமல் அப்படியே 
நம்பி ஏமாறுவோர் கோடி கோடி 

நம்பிக்கை மோசம் செய்பவர்கள் 
நன்றாகத்தான் வாழ்கிறார்கள் 
இந்த பூமியிலே. 

உழைப்பவர்களை 
சுரண்டி பிழைப்பவரும் 
அவர்களை அண்டி  பிழைப்பவரும் 
பெருகிவிட்டார்கள் இந்நாட்டினிலே. 

உண்மையை 
வெளியே சொன்னால் 
உயிர் போகும் .

மேடைகளில் பெண்மையை போற்றும்
வேடதாரிகள் உண்டு  இந்நாட்டினிலே 

அதே வேடதாரிகள் 
அவர்களை கவர்ச்சியாய் காட்டி 
காசு பார்க்கும் கயவர்களும் 
நம்மிடையே உண்டு. 

நம் நாட்டில் ஒழுக்கமும் இல்லை

ஒழுங்கும் இல்லை


புராணங்களில் கடவுள்கள் 
அவதாரம் எடுத்து வருவார்கள் 
அனைத்தையும் சீர் செய்ய. 

இப்போது யார் வருவார்கள்?
கண்ணுக்கு தெரியாத கடவுளே !
உடனே புறப்பட்டு வா 

உள்ளத்தில் கள்ளம் வைத்திருக்கும் 
அனைவரையும் கண்டுபிடித்து அழிக்க.
 
இனியும் காத்திருக்க 
பொறுமையில்லை. 

1 கருத்து: