செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

எல்லாம் இருக்கு ஆனால்எ துவும் இல்லை.

எல்லாம் இருக்கு 
ஆனால்எ துவும் இல்லை. 

ஆமாம். எல்லாம் இருக்கு
ஆனால் எதுவும் இல்லை.

ஆமாம் அதுதான் உண்மை.
எப்படி.

எல்லாம் இருக்கிறது என்று முடிவு செய்வது யார்?
முடிவு செய்தது யார்?
என்பதுதான் கேள்வி?

எல்லாம் நம்மையெல்லாம்
ஆட்டிப் படைக்கும் மனம்தான்.

அதுதான் நம்மை எல்லாம்
ஒவ்வொரு கணமும் தன் எண்ணங்களை
மாற்றிக்கொண்டு நம்மையெல்லாம்
ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.

அது பண்ணும் தில்லுமுல்லு
வேலைகளையெல்லாம் நாம்
அறிய முற்படுவதும் இல்லை.

அதை அறியும் ஆற்றலையும்
நாம் வளர்த்துக்கொள்ளவில்லை.

அது நம்மை எப்படி எல்லாம் ஆட்டுவிக்கிறதோ
அப்படியெல்லாம் ஆடிக்  கொண்டிருக்கிறோம்.

எல்லாம் இருப்பதாக ஒரு கட்டத்தில் மகிழ்ச்சி தோன்றுகிறது
ஆனால் அடுத்த கணமே மற்றவர்களிடம் இருக்கின்ற ஒன்று நம்மிடையே
இல்லை என்ற எண்ணம் தோன்றியவுடன் அந்த மகிழ்ச்சி ஏக்கமாக, பொறாமையாக உருவெடுத்து நம்மை அரிக்கத்  தொடங்குகிறது.
அதுதான் இந்த மனதின் தந்திரம் .

அது நம்மை எப்போதும் சுதந்திரமாக
வாழவே விடாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்,
அதற்கு  நாம் அதன் சுதந்திரத்தை நம்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

நாம் பல வருடங்களாக பழகி வந்த நம்பரிடம் ஏதோ  ஒரு குற்றத்தைக்
கண்டுபிடித்து அவனை நம் பரம எதிரியாக  ஒரு கணத்தில்
மாற்றிவிடுகிறது.

நாம் மிகவும் சுவைத்து ரசிக்கும் ஒரு பொருளை
அது நமக்கு பிடிக்காத  பொருளாக ஏதோ ஒரு  காரணத்தை
தோற்றுவித்து அதன் மீது வெறுப்பை உண்டாகிவிடுகிறது.

இன்னும் எத்தனை எத்தனையோ அதன்
செயல்பாடுகளுக்கு எல்லையே  இல்லை
அதற்கு முற்றுப்புள்ளி வைத்து அதை நம்
கட்டுப்பாட்டில் கொண்டு  வரும் வழியும் தெரியவில்லை.

அதன் ஆட்டத்தைப் புரிந்துகொள்ளாமல்
அது விரிக்கும் வலையில் விழுந்து
வெளியில் வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்கு வழிகாட்ட இன்று பல ஆயிரம்பேர்
கிளம்பிவிட்டார்கள்.

 எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று
சித்தம் கலங்கியவர்களை வரவேற்று
தங்கள் கணக்கில் கோடிக்கணக்கில்
பணத்தை வரவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களின் நோக்கத்தை  புரிந்துகொள்ளாமல்
அவர்கள் விரிக்கும்  வலையில் பாமரர்களும்
படித்தவர்களும்  சிக்கி வெளியில் வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.


தேனில் விழுந்த எறும்பு அதன்  இனிப்பை 
சுவைப்பதற்குள் மரணத்தை தழுவிவிடுகிறது.

அதைப்போலத்தான் நம்முடைய 
வாழ்வும்..அது நீண்ட வருடங்கள்போல் 
தோன்றினாலும்  அது வெறும் மன ப்ரமைதான் 
என்பதை நாம் யாரும் உணர்வதில்லை. 



ஓவியம்-தி.ஆர்.பட்டாபிராமன் 

மனதில் ஆட்டத்தை நிறுத்தவேண்டுமென்றால்.
இந்த அண்ட  சராசரத்தை  ஆட்டி  வைக்கும்
ஆடல்வல்லானை நாம் தெரிந்து கொண்டால்
நம் மனதை அவனிடம் ஒப்படைத்தால்
மாயையிலிருந்து விடுபட்டு மாளா  துயரிலிருந்து
விடுபடலாம்.

அதற்கு  அவன் மீது மனதில் உண்மையான
உறுதியான நம்பிக்கை வைக்கவேண்டும்.
மனதாலும் பிறருக்கு தீங்கு நினைத்தால்
கூடாது. அவ்வாறு செய்தால்போதும்
அவன் உங்களின் உள்ளத்தில் உடனிருந்து
வழி நடத்துவான்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக