சனி, 18 பிப்ரவரி, 2017

துன்பத்திற்கு காரணம் யார்?


துன்பத்திற்கு காரணம் யார்?

அவரவர் துன்பத்திற்கு காரணம் அவரவர்
எண்ணங்கள்தான்.

ஆம் அதுதான் உண்மை.

இதை ஏற்றுக்கொண்டாலும் சரி அல்லது மறுத்தாலும் சரி
அதுதான் உண்மை.

சாலையில் நடக்கும்போது கல் தடுக்கி கீழே
விழுகிறோம்..

ஆனால் நாம் உடனே அந்த கல் மீதுதான்
முதலில் முதல் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்கிறோம்.

கூட இருக்கும் மற்றவர்களும்  அதற்கு தூபம் போடுகிறார்கள்.

ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்.
இந்த தெருவில் செல்பவர்கள் பலர் அந்த கல் தடுக்கி
காயம் பட்டு மருத்துவ மனை வரைக்கும் செல்ல வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளது. .

இன்னும் புள்ளி விவரத்தை வைத்துக்கொண்டு வம்பளப்பவர்கள்
புள்ளி விவரங்களை அடுக்கி கொண்டே [போவார்கள்.

நடப்பவர் தான் நடக்கும்போது சாலையை பார்த்து
கவனமாக நடந்தால் அந்த விபத்து ஏற்பட்டிருக்காது
ஆனால் அவ்வாறு  செய்வதில்லை.

தன தவறை மறைக்க பிறர் மீது குற்றம் சுமத்துவது
அதுவும் ஒரு அஃறிணை பொருள் மீது குற்றம் சுமத்தி ஆறுதல்
அடைவதும், தொடர்ந்து இது போன்ற தவறுகளை வாழ்நாள் முழுவதும் செய்துகொண்டே தங்களை திருத்திக் கொள்ளாமல் இருப்பதுவே
அவர்களை என்றென்றும் துன்பத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறது என்பதை என்றும் இது போன்ற மனிதர்கள் உணரப்போவதில்லை

இதற்க்கு மூல காரணம் சுயமாக சிந்திக்கும் திறனை
இழந்துவிட்டதுதான் .

எப்போதும் ஊடகங்களிலும் தன்னை சுற்றியுள்ள சுயநலம்
பிடித்த மனிதர்களின் பொய்யான பரப்புரைகளை எப்போதும்
கேட்டுக்கொண்டு அதன்படி தன்னுடைய எண்ணங்களை நொடிக்கொரு முறை மாற்றிக்கொண்டு திரியும் இந்த மனிதர்களின் வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் என்றும்  நிலவுவது மிக கடினமே 

1 கருத்து: