திங்கள், 6 பிப்ரவரி, 2017

எல்லாம் இருக்கின்ற வரைதான்! புலம்பி திரிவதை நிறுத்துங்கள் மூடர்களே!

எல்லாம்  இருக்கின்ற வரைதான்!
புலம்பி திரிவதை நிறுத்துங்கள் மூடர்களே!

ஆம் எல்லாம் இருக்கின்ற வரைதான்.

இந்த உயிர் ,உடல், சொந்தம் பந்தம்,
செல்வம் எல்லாம் நம்மோடு
இருக்கின்ற  வரை தான்.
நமக்கு பயன்படும்.

அவைகள் நம்மை
விட்டுப் பிரிந்துவிட்டால்
அவைகளால் நமக்கு பயன் ஒன்றும்
இல்லை. இந்த உண்மை அனைவருக்கும்
தெரியும்/ ஆனால் தெரியாது

தெரிந்தும் அது எப்போதும்
நம் நினைவுக்கு வருவதில்லை.

தெரிந்தவர்கள் அதை புத்திசாலித்தனமாக
பயன்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியோடு
வாழ்க்கை பயணத்தை நடத்துகிறார்கள்.

பலர் தன்னிடம் உள்ள பொக்கிஷங்கள்
என்ன என்பதை அறியாமலேயே
அதை உணர்ந்து பயன்படுத்தாமலே
எதையோ எதிர்பார்த்து இருப்பதையும்
இழந்து வாழ்விழந்து போகிறார்கள்.

இறைவன் ஒவ்வொருவருக்கும்
ஒரு திறமையை ,அதுவும் தனி திறமையை
கொடுத்திருக்கிறான்.

அறிவுள்ளவன் அதை கண்டறிந்து
அதை பயன்படுத்தி வாழ்வில்
வெற்றிகளை குவிக்கிறான்.

வெற்றியை நோக்கி பயணிப்பவனுக்கு
தடைகள் கூடவே பயணிக்கத்தான்
செய்யும்.

அவன் தன்  இலக்கில் குறியாக
இருப்பதுடன் தடைகளை தனக்கு
சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவும்
தெரிந்துகொள்ள வேண்டும்.

அப்படி செய்யும் வழியை அறியாதவன்
தன்னுடைய முயற்சியின்மைக்கு பிறர் மீது
பழி கூறியே தன்னை இழிநிலைக்கு தானே தள்ளிக்கொண்டு
வீழ்ச்சியடைகிறான்.

பிறரின் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுவதை  விடுத்து 
அவனை போல் போல் வெற்றிகளைக் குவிக்க வழிகளை ஆராய்ந்து 
பொறுமையுடன் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி அவன் கையில் தானாகவே வந்து விழும். 

மண்ணில் விழுந்த விதை மண்ணோடு மண்ணாக போவதில்லை.
அதற்குள் முளைத்து ,தழைத்து,பூத்து 
காய்த்து, கனிந்து மீண்டும்  தன்  வெற்றியை தொடர 
எண்ணற்ற விதைகளை விட்டு செல்கிறது.

ஓரிடத்தை விட்டு எங்கும் செல்லாது இருக்கும் 
இடத்திலேயே தன் கணக்கை தொடங்கும் ஒரு விதைக்கே 
இவ்வளவே ஆற்றல் இருக்கிறது என்றால். எங்கு வேண்டுமானாலும்,
செல்லவும், எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய ஆற்றல் பெற்ற 
மனிதர்களால் அடையமுடியாதது என்று ஏதேனும் 
இந்த உலகில் உண்டோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக