செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

இசையும் நானும் (161)Film அமர தீபம் -தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு



இசையும் நானும் (161)Film அமர தீபம் -தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு 

இசை-தி.சலபதிராவ் -ஜி.ராமநாதன் 

பாடியவர்கள்- எ.எம்.ராஜா-பி.சுசீலா 

பாடல் வரிகள். -கே.பி.காமாக்ஷி 

இசையும் நானும் (161) Mouthorgan song-தமிழ்  song-



by TR PATTABIRAMAN

Film 

அமர தீபம் (1956)






Female :
தேன் உண்ணும் வண்டு 
மாமலரைக் கண்டு 
திரிந்தலைந்து பாடுவதேன் 
ரீங்காரம் கொண்டு 
பூங்கொடி யே    நீ சொல்லுவாய் ஓ.ஓ.ஓ
பூங்கொடி யே    நீ சொல்லுவாய்

Male :
வீணை இன்ப நாதம் 
எழுந்திடும் வினோதம் 
விரலாடும் விதம் போலவே 
காற்றினிலே ..தென்றல் காற்றினிலே 
காற்றினிலே .சலசலக்கும் பூங்கொடி யே கேளாய் 
புதுமை இதில்தான் என்னவோ..ஓ.ஓ.ஓ.
புதுமை இதில்தான் என்னவோ
Male :
மீன் நிலவும் வானில் 
வெண்மதியைக் கண்டு 
வெண் அலைகள் ஆடுவதேன் ஆனந்தம் கொண்டு 
மென் காற்றே நீ சொல்லுவாய் ஓ.ஓ.ஓ.
மென் காற்றே நீ சொல்லுவாய்

Female :
கான  மயில் நின்று வான் முகிலைக் கண்டு 
களித்தாடும்  விதம் போலவே 
கலை  இதுவே ..வாழ்வின் கலை இதுவே 
கலை  இதுவே. கலக்கல் என்னும் மெல்லிய பூங்காற்றே 
காணாததும் என் வாழ்விலே..ஓ.ஓ.ஓ.
காணாததும் என் வாழ்விலே
Both :
கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே 
காதல் இன்பம் அறியாமல் வாழ்வதும் எனோ..
கலை மதியே நீ சொல்லுவாய்..ஓ.ஓ.ஓ.
கலை மதியே நீ சொல்லுவாய்..ஓ.ஓ.ஓ.

https://youtu.be/nsgLNEh6p7U

சனி, 18 பிப்ரவரி, 2017

துன்பத்திற்கு காரணம் யார்?


துன்பத்திற்கு காரணம் யார்?

அவரவர் துன்பத்திற்கு காரணம் அவரவர்
எண்ணங்கள்தான்.

ஆம் அதுதான் உண்மை.

இதை ஏற்றுக்கொண்டாலும் சரி அல்லது மறுத்தாலும் சரி
அதுதான் உண்மை.

சாலையில் நடக்கும்போது கல் தடுக்கி கீழே
விழுகிறோம்..

ஆனால் நாம் உடனே அந்த கல் மீதுதான்
முதலில் முதல் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்கிறோம்.

கூட இருக்கும் மற்றவர்களும்  அதற்கு தூபம் போடுகிறார்கள்.

ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்.
இந்த தெருவில் செல்பவர்கள் பலர் அந்த கல் தடுக்கி
காயம் பட்டு மருத்துவ மனை வரைக்கும் செல்ல வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளது. .

இன்னும் புள்ளி விவரத்தை வைத்துக்கொண்டு வம்பளப்பவர்கள்
புள்ளி விவரங்களை அடுக்கி கொண்டே [போவார்கள்.

நடப்பவர் தான் நடக்கும்போது சாலையை பார்த்து
கவனமாக நடந்தால் அந்த விபத்து ஏற்பட்டிருக்காது
ஆனால் அவ்வாறு  செய்வதில்லை.

தன தவறை மறைக்க பிறர் மீது குற்றம் சுமத்துவது
அதுவும் ஒரு அஃறிணை பொருள் மீது குற்றம் சுமத்தி ஆறுதல்
அடைவதும், தொடர்ந்து இது போன்ற தவறுகளை வாழ்நாள் முழுவதும் செய்துகொண்டே தங்களை திருத்திக் கொள்ளாமல் இருப்பதுவே
அவர்களை என்றென்றும் துன்பத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறது என்பதை என்றும் இது போன்ற மனிதர்கள் உணரப்போவதில்லை

இதற்க்கு மூல காரணம் சுயமாக சிந்திக்கும் திறனை
இழந்துவிட்டதுதான் .

எப்போதும் ஊடகங்களிலும் தன்னை சுற்றியுள்ள சுயநலம்
பிடித்த மனிதர்களின் பொய்யான பரப்புரைகளை எப்போதும்
கேட்டுக்கொண்டு அதன்படி தன்னுடைய எண்ணங்களை நொடிக்கொரு முறை மாற்றிக்கொண்டு திரியும் இந்த மனிதர்களின் வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் என்றும்  நிலவுவது மிக கடினமே 

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

எல்லாம் இருக்கு ஆனால்எ துவும் இல்லை.

எல்லாம் இருக்கு 
ஆனால்எ துவும் இல்லை. 

ஆமாம். எல்லாம் இருக்கு
ஆனால் எதுவும் இல்லை.

ஆமாம் அதுதான் உண்மை.
எப்படி.

எல்லாம் இருக்கிறது என்று முடிவு செய்வது யார்?
முடிவு செய்தது யார்?
என்பதுதான் கேள்வி?

எல்லாம் நம்மையெல்லாம்
ஆட்டிப் படைக்கும் மனம்தான்.

அதுதான் நம்மை எல்லாம்
ஒவ்வொரு கணமும் தன் எண்ணங்களை
மாற்றிக்கொண்டு நம்மையெல்லாம்
ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.

அது பண்ணும் தில்லுமுல்லு
வேலைகளையெல்லாம் நாம்
அறிய முற்படுவதும் இல்லை.

அதை அறியும் ஆற்றலையும்
நாம் வளர்த்துக்கொள்ளவில்லை.

அது நம்மை எப்படி எல்லாம் ஆட்டுவிக்கிறதோ
அப்படியெல்லாம் ஆடிக்  கொண்டிருக்கிறோம்.

எல்லாம் இருப்பதாக ஒரு கட்டத்தில் மகிழ்ச்சி தோன்றுகிறது
ஆனால் அடுத்த கணமே மற்றவர்களிடம் இருக்கின்ற ஒன்று நம்மிடையே
இல்லை என்ற எண்ணம் தோன்றியவுடன் அந்த மகிழ்ச்சி ஏக்கமாக, பொறாமையாக உருவெடுத்து நம்மை அரிக்கத்  தொடங்குகிறது.
அதுதான் இந்த மனதின் தந்திரம் .

அது நம்மை எப்போதும் சுதந்திரமாக
வாழவே விடாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்,
அதற்கு  நாம் அதன் சுதந்திரத்தை நம்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

நாம் பல வருடங்களாக பழகி வந்த நம்பரிடம் ஏதோ  ஒரு குற்றத்தைக்
கண்டுபிடித்து அவனை நம் பரம எதிரியாக  ஒரு கணத்தில்
மாற்றிவிடுகிறது.

நாம் மிகவும் சுவைத்து ரசிக்கும் ஒரு பொருளை
அது நமக்கு பிடிக்காத  பொருளாக ஏதோ ஒரு  காரணத்தை
தோற்றுவித்து அதன் மீது வெறுப்பை உண்டாகிவிடுகிறது.

இன்னும் எத்தனை எத்தனையோ அதன்
செயல்பாடுகளுக்கு எல்லையே  இல்லை
அதற்கு முற்றுப்புள்ளி வைத்து அதை நம்
கட்டுப்பாட்டில் கொண்டு  வரும் வழியும் தெரியவில்லை.

அதன் ஆட்டத்தைப் புரிந்துகொள்ளாமல்
அது விரிக்கும் வலையில் விழுந்து
வெளியில் வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்கு வழிகாட்ட இன்று பல ஆயிரம்பேர்
கிளம்பிவிட்டார்கள்.

 எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று
சித்தம் கலங்கியவர்களை வரவேற்று
தங்கள் கணக்கில் கோடிக்கணக்கில்
பணத்தை வரவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களின் நோக்கத்தை  புரிந்துகொள்ளாமல்
அவர்கள் விரிக்கும்  வலையில் பாமரர்களும்
படித்தவர்களும்  சிக்கி வெளியில் வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.


தேனில் விழுந்த எறும்பு அதன்  இனிப்பை 
சுவைப்பதற்குள் மரணத்தை தழுவிவிடுகிறது.

அதைப்போலத்தான் நம்முடைய 
வாழ்வும்..அது நீண்ட வருடங்கள்போல் 
தோன்றினாலும்  அது வெறும் மன ப்ரமைதான் 
என்பதை நாம் யாரும் உணர்வதில்லை. 



ஓவியம்-தி.ஆர்.பட்டாபிராமன் 

மனதில் ஆட்டத்தை நிறுத்தவேண்டுமென்றால்.
இந்த அண்ட  சராசரத்தை  ஆட்டி  வைக்கும்
ஆடல்வல்லானை நாம் தெரிந்து கொண்டால்
நம் மனதை அவனிடம் ஒப்படைத்தால்
மாயையிலிருந்து விடுபட்டு மாளா  துயரிலிருந்து
விடுபடலாம்.

அதற்கு  அவன் மீது மனதில் உண்மையான
உறுதியான நம்பிக்கை வைக்கவேண்டும்.
மனதாலும் பிறருக்கு தீங்கு நினைத்தால்
கூடாது. அவ்வாறு செய்தால்போதும்
அவன் உங்களின் உள்ளத்தில் உடனிருந்து
வழி நடத்துவான்.





திங்கள், 6 பிப்ரவரி, 2017

எல்லாம் இருக்கின்ற வரைதான்! புலம்பி திரிவதை நிறுத்துங்கள் மூடர்களே!

எல்லாம்  இருக்கின்ற வரைதான்!
புலம்பி திரிவதை நிறுத்துங்கள் மூடர்களே!

ஆம் எல்லாம் இருக்கின்ற வரைதான்.

இந்த உயிர் ,உடல், சொந்தம் பந்தம்,
செல்வம் எல்லாம் நம்மோடு
இருக்கின்ற  வரை தான்.
நமக்கு பயன்படும்.

அவைகள் நம்மை
விட்டுப் பிரிந்துவிட்டால்
அவைகளால் நமக்கு பயன் ஒன்றும்
இல்லை. இந்த உண்மை அனைவருக்கும்
தெரியும்/ ஆனால் தெரியாது

தெரிந்தும் அது எப்போதும்
நம் நினைவுக்கு வருவதில்லை.

தெரிந்தவர்கள் அதை புத்திசாலித்தனமாக
பயன்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியோடு
வாழ்க்கை பயணத்தை நடத்துகிறார்கள்.

பலர் தன்னிடம் உள்ள பொக்கிஷங்கள்
என்ன என்பதை அறியாமலேயே
அதை உணர்ந்து பயன்படுத்தாமலே
எதையோ எதிர்பார்த்து இருப்பதையும்
இழந்து வாழ்விழந்து போகிறார்கள்.

இறைவன் ஒவ்வொருவருக்கும்
ஒரு திறமையை ,அதுவும் தனி திறமையை
கொடுத்திருக்கிறான்.

அறிவுள்ளவன் அதை கண்டறிந்து
அதை பயன்படுத்தி வாழ்வில்
வெற்றிகளை குவிக்கிறான்.

வெற்றியை நோக்கி பயணிப்பவனுக்கு
தடைகள் கூடவே பயணிக்கத்தான்
செய்யும்.

அவன் தன்  இலக்கில் குறியாக
இருப்பதுடன் தடைகளை தனக்கு
சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவும்
தெரிந்துகொள்ள வேண்டும்.

அப்படி செய்யும் வழியை அறியாதவன்
தன்னுடைய முயற்சியின்மைக்கு பிறர் மீது
பழி கூறியே தன்னை இழிநிலைக்கு தானே தள்ளிக்கொண்டு
வீழ்ச்சியடைகிறான்.

பிறரின் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுவதை  விடுத்து 
அவனை போல் போல் வெற்றிகளைக் குவிக்க வழிகளை ஆராய்ந்து 
பொறுமையுடன் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி அவன் கையில் தானாகவே வந்து விழும். 

மண்ணில் விழுந்த விதை மண்ணோடு மண்ணாக போவதில்லை.
அதற்குள் முளைத்து ,தழைத்து,பூத்து 
காய்த்து, கனிந்து மீண்டும்  தன்  வெற்றியை தொடர 
எண்ணற்ற விதைகளை விட்டு செல்கிறது.

ஓரிடத்தை விட்டு எங்கும் செல்லாது இருக்கும் 
இடத்திலேயே தன் கணக்கை தொடங்கும் ஒரு விதைக்கே 
இவ்வளவே ஆற்றல் இருக்கிறது என்றால். எங்கு வேண்டுமானாலும்,
செல்லவும், எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய ஆற்றல் பெற்ற 
மனிதர்களால் அடையமுடியாதது என்று ஏதேனும் 
இந்த உலகில் உண்டோ?

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

கவலைகள் நம்மை பற்றாதிருக்க?

கவலைகள் நம்மை பற்றாதிருக்க?

எதிர்பார்ப்பு என்பது
நாம் நமக்கு வைத்துக்கொள்ளும் ஆப்பு.

ஆம் அப்படிதான்
எதிர்பார்த்தது நடந்தால்
மனம் கொள்ளும் மகிழ்ச்சி

அது நடவாதுபோனால்
அயற்சியினால்  துவண்டுவிடும்
மனம்

அத்தோடு போனால்
பரவாயில்லை.

அது தன் கூட்டாளிகளான
வெறுப்பு,பொறாமை,சோர்வு
வஞ்சம்,பழி வாங்கும் எண்ணம்
ஆகியவற்றை சேர்த்துக்கொண்டு
நம்மை நிரந்தர துன்பத்தில்
ஆழ்த்திவிடும்.

அதனால்தான்  கீதையில்
இந்த இரண்டையும் சமமாக
கருத  சொன்னான்

கடமையை ஒழுங்காக செய்
அந்த செயலின் பலன் உன்னை
தானே வந்தடையும்.

பலனை எதிர்பார்த்து எதையும்
செய்யாதே என்று எச்சரித்தான்..

ஆனால் யார் கேட்கிறார்கள். ?

கேட்டகிறார்களோ இல்லையோ
அவன் கூறிய வாசகங்களை பிரேம் போட்டு
கண்கள் எதிரே மாட்டி வைத்திருக்கிறார்கள்
அனைவரும்.

ஒவ்வொரு செயலிலும் இந்த அறிவுரையை.
கடைபிடித்தால் கவலைகள்
நம்மை பற்றாது.

நம் உள்ளத்தில்
உள்ள மகிழ்ச்சியும்  என்றும் வற்றாது.

இசையும் நானும் (160)Film கணவனே கண் கண்ட தெய்வம் -அன்பில் மலர்ந்த நல் ரோஜா

இசையும் நானும் (160)Film கணவனே கண் கண்ட தெய்வம்  -அன்பில் மலர்ந்த நல்  ரோஜா 

இசையும் நானும் (160) Mouthorgan song-தமிழ்  song-



by TR PATTABIRAMAN

Film கணவனே கண் கண்ட தெய்வம்


Image result for kanavane kankanda deivam songs



திரைப்படம்-கணவனே கண் கண்ட தெய்வம் 

இசை-சி .ராமச்சந்திரன் குரல்-பி. சுசீலா நடிப்பு-அஞ்சலிதேவி அன்பில் மலர்ந்த நல்  ரோஜா கண் வளராய் என் ராஜா எந்தன் வாழ்விலே ஒளி வீசவே வந்தவனே கண் வளராய் 
ஆ .தாலோ .தாலோ .தாலோ..
ஆ.ராரோ .ஆரோ ..ஆரோ..(அன்பில்) 
தென்றல் மலர் மாலை சூட்டுமே 
வண்டு தேனை வாயில் ஊட்டுமே மான்களின் கூட்டமே வேடிக்கை காட்டுமே மன்னன் உந்தன் நாட்டிலே (அன்பில்) 
தங்க தொட்டிலில் தாலாட்டியே 
சுகுமாரனை சீராட்டியே வெண்ணிலா காட்டியே பாலன்னம் ஊட்டியே கொஞ்சிடும் நாள் வந்திடுமே (அன்பில் )

C.Ramachandran
P.Susheela



வியாழன், 2 பிப்ரவரி, 2017

கண்ணா உன் உபேதேசங்கள் எல்லாம் மனிதர்களுக்குத்தானா?

கண்ணா உன் உபேதேசங்கள் எல்லாம் 
மனிதர்களுக்குத்தானா?

மனிதர்கள் ஆறறிவு உடையவர்கள்
என்கிறார்கள்

அவர்கள் நன்மை எது என்றும் தீமை
எதுவென்றும்
தர்மம் எதுவென்றும் அதர்மம்
எதுவென்றும்
இன்பம் எதுவென்றும் துன்பம்
எதுவென்றும்
பகுத்து அறியும் அறிவுடையவர்கள்
என்றும் தங்களை உயர்வாக
பீற்றிக்  கொள்கிறார்கள்(கொல்கிறார்கள் )

ஆனால் உண்மையில் அவர்கள்
சொல்கின்ற எந்த கூற்றையும் ஏற்று
வாழ்வில் நடைமுறை படுத்துவது
இல்லை என்பது உனக்கு தெரியும் .

அதனால்தான் கண்ணா நீயே
இவ்வுலகிற்கு வந்தாய் அவர்களுக்கு
நல்ல நெறிகளை அவர்களுக்கு
உணர்த்த

அது போதாதென்று உன்னுடைய
பட்டாளங்கள் அவ்வப்போது  அகிலத்தில்
தோன்றி தான்தோன்றித்தனமாக
திரிந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு
உபதேசம் செய்தாலும் இந்த பரதேசிகள்
அப்படியேதான் இருக்கின்றன.

எதையும்  ஆராயாமல்  மனம் போன
போக்கில் தானும் துன்பத்தில் சிக்கிக்கொண்டு
மற்றவரையும் இன்னலுக்கு ஆளாக்கும்
இந்த மனிதர்களுக்கு ஆறறிவு எதற்காக  அளித்தாய்?

பகுத்தறிவை பயன்படுத்தாது பாமரர்களை போல்
இந்த உலகை பாழ்படுத்தும் இவர்களுக்கு
தனி  அந்தஸ்தும் தேவையில்லை.

ஆறறிவிற்கு குறைந்த மற்ற உயிரெல்லாம்
உன் கட்டளையை ஏற்று இன்பம் துன்பம்
என்ற நிலையைக் கடந்து வாழுகையில்
எல்லாம் இருந்தும் எப்போதும் கவலையில்
மூழ்கி கிடைக்கும் மாந்தர்களை யார்
திருத்துவது?

கீதையில் இன்பம் துன்பம் கடந்த  ஆனந்த
நிலையில் வாழ எண்ணற்ற அறிவுரைகளை
இவ்வுலக மக்களுக்கு தந்தாய்.

அவற்றில் ஒன்று "சமநோக்குடன்வாழுங்கள் :
என்பது 

மனிதர்களிடம் அன்றும் இந்த குணம் இல்லை
இன்றும் அந்த குணம் இல்லை.
சாதாரண பிரச்சினைகளையும்
அசாதாரணமாக ஆகிவிடுகிறார்கள்.
அல்லல்படுகிறார்கள்.

மரணத்தை எதிர்கொள்ளும்வரை
அவர்கள் மனதில் ஆறாத "ரணங்கள்"
மட்டுமே உள்ளது.

மலர்கள்தான் உன் .அறிவுரையை ஏற்று 
செயல்படுத்துவத்தைக் கண்டேன். 

அவைகளும் மனிதர்களைப் போல்தான்
இவ்வுலகிற்கு வருகின்றன. சேற்றில் பிறந்தாலும்
நீரில் பிறந்தாலும் மொட்டாய் தோன்றி மலர்ந்து
மணம்  வீசுகின்றன. முட்களின் நடுவே இருந்தாலும்
அவைகளின் தோற்றத்தில்/செயல்பாட்டில்
எந்த மாற்றமும் இல்லை.

இறைவனின் பாதத்தில் வீழ்ந்தாலும் 
இறந்த மனிதர்களின் உடலின் மீது விழுந்தாலும் 
கவலைப்படுவதில்லை. 
தங்கள் கடமை முடிந்தவுடன் மீண்டும்
மண்ணில் கலந்துவிடுகின்றன. 

மனிதர்கள் தங்களை பற்றி மட்டுமே  எப்போதும் சிந்திப்பதையும்
பிறரை நிந்திப்பதையும் விட்டுவிட்டு தங்களை சுற்றி வாழும் உயிர்களிடமிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு
அவைகளை தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டால்.
இவ்வுலக வாழ்வு தித்திக்கும்.
மன கவலைகள் மறையும்.

புதன், 1 பிப்ரவரி, 2017

பரம்பொருள் என்றால் என்ன ?

பரம்பொருள் என்றால் என்ன ?

பரம்பொருள்  என்றால் என்ன ? 

ஆன்மீகத்தில் பரம்பொருள்
என்றால் எல்லாம் வல்ல இறைவனை
குறிக்கும் சொல்.

அது எல்லா இடத்திலும் நீக்கமற
நிறைந்திருக்கிறது.

அது அறியாதது எதுவும் இல்லை
அதை அறியாது எதுவும்
சாத்தியப்படுவதுமில்லை.

அதை அறியாதவன் எல்லாம்
தாம் எல்லாம் அறிந்தவன் போல்
தன் அறியாமையை  உலகிற்கு
காட்டிக் கொள்கிறான் (கொல்கிறான் )

அதை அறிந்தவனோ அமைதியாய்
தன் பணிகளை செய்து கொண்டிருக்கிறான்

அதை அறிவதுதான் அறிவு
மற்றவையெல்லாம் மண்டையில்
திணிக்கப்படும்  வெறும்
இரைச்சல் போடும் குப்பைகள்.

எல்லா சாதனைகளும் அமைதியாய்த்தான்
இந்த உலகில்  காலம் காலமாய்
நடந்துகொண்டிருக்கின்றன

உதாரணத்திற்கு நம் கண் முன்னே
தினமும் காணும் சூரியனும் சந்திரனும்
அவைகள் எந்த ஆர்பாட்டமும்  செய்வதில்லை

ஆனால் அவைகளை காண்ட மாத்திரத்தில்
இந்த உலகத்தில் உள்ள உயிர்கள்
இயங்குகிறது

மண்ணில் விழுந்த  விதை
முளைப்பதும் தெரியவில்லை,வளர்வதும் தெரியவில்லை
பூத்து காய்த்து,கனிந்து  மீண்டும் விதைகளை
விட்டு செல்வதும் தெரிவதில்லை.

இது போன்று கணக்கற்ற  நிகழ்வுகள்.
இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு
ஆர்பாட்டமில்லாது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஆனால் மனிதன் மட்டும் தான்
தான் செய்யும் ஒவ்வொரு  அற்ப செயலையும்
வெளிச்சம் போட்டு காட்டி சுய தம்பட்டம்
அடித்துக்கொண்டு ஆனந்தம் அடைகிறான்.

பரம்பொருள் என்ற சொல்லை பரம் + பொருள் 
என இரண்டாக பிரித்து பார்த்தால் அதன் 
உண்மை தெரியும். 

பரம் என்றால் ENERGY
பொருள் என்றால் MATTER
இரண்டும் தனி தனியாக இருக்கும்போது
சும்மா கிடக்கும்

இரண்டும் ஒன்று சேரும் போது
இயக்கம் நடைபெறுகிறது

இதைத்தான் சிவம் என்றும்
சக்தி என்றும் அடையாளம் காட்டினார்
நம் முன்னோர்கள்.

அதனால்தான் சக்தியில்லையேல்
சிவம் போல் கிட  என்று விளங்க வைத்தனர்

சிவமும் சக்தியும் இணைந்தால்தான்
இவ்வுலகிலும் அண்டத்திலும் இயக்கங்கள்
உண்டாகும் என்பதை அர்த்த நாரீஸ்வர
வடிவத்தில் நமக்கு உணர்த்தினார்.

இந்த தத்துவம்தான் கணக்கற்ற புராணங்களாக
வடிவெடுத்து காலந்தோறும்  மனிதர்களுக்கு
பரம்பொருளின் தத்துவத்தை.  உணர்த்தி வந்து
கொண்டிருக்கின்றன.

ஆனால் தத்துவங்களை புரிந்துகொள்ளாது
மனிதர்கள்தத்து  பித்தென்று உளறிக்கொண்டு
ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிந்து
கொண்டிருக்கின்றனர்.

அன்பு ஒன்றுதான் அனைவரையும் 
இணைக்கும் பாலம். அதை விடுத்து 
அனைவரிடம் சாத்திரங்களையோ 
நூல்களையோ காட்டி பேதம் காண்பது
உள்ளத்திலும் உலகிலும் 
அமைதியையும் ஆனந்தத்தையும் 
என்றும் தராது 
என்பதை அனைவரும்
 புரிந்துகொள்ள வேண்டும்